இஸ்லாமிய முத்துக்கள்
குழந்தையைப் பெற்றெடுத்ததும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாத்தா அப்துல் முத்தலிபிற்கு இந்த நற்செய்தியைத் துவைபா என்ற அடிமை தெரிவித்தார். (நபி வரலாறு – அதிரை அஹ்ம் 74)
மகிழ்ச்சியுடன், தனது பேரனை கஅபாவுக்கு எடுத்துச் சென்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, பிரார்த்தனை செய்தார் அப்துல் முத்தலிப்.
பிறந்த ஏழாம் நாள் அரேபியர்களின் வழக்கப்படி, அந்தக் குழந்தைக்கு “முஹம்மது” எனப் புதிய பெயர் சூட்டி , கத்னா செய்யப்பட்டு அம்மகிழ்ச்சியின் காரணமாக அப்பகுதி மக்களுக்கு விருந்தோம்பல் செய்தார். (زاد المعاد 1/67 )