ஸஅத் இனத்தைச் சார்ந்த ஹலீமா என்ற பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன உனைஸா, ஷைமா, ஹுதாஃபா, இவர்களோடு சேர்ந்து நபிகளாருக்கும் நபிகளாரின் சிறிய தந்தையான ஹம்ஜா விற்கும் பால் குடிப்பாட்டும் பொறுப்பை ஏற்றார் ஹலீமா.
இவரிடம் நபிகளார் இரண்டு வருடங்கள் பால் குடித்துள்ளார்கள் இவ்விரண்டு வருடங்களில் ஒவ்வொரு ஆறு மாதமும் தாய் ஆமினாவிடம் குழந்தையான நபிகளாரை ஹலீமா அழைத்துச் சென்று வந்துள்ளதாக வரலாறுகள் குறிப்பிடுகின்றன இதனால் அவ்வப்போது குழந்தையின் வளர்ச்சியையும் உடல் நலத்தையும் பற்றி அறியும் வாய்ப்பு ஏற்பட்டது.
இரண்டு வருடங்கள் கழித்து ஆரோக்கியமாக நபியின் தாயிடம் மக்காவிற்கு திரும்பக் கொண்டு வந்தார்கள் ஹலீமா .
நபியவர்களின் பல ஆச்சரியமான நிகழ்வுகளைக் கண்டு ஹலீமா இந்த குழந்தை இன்னும் சிறிது காலம் நம்மிடமே இருக்க வேண்டுமே என்று ஆசைக் கொண்டவர்களாக இந்த குழந்தை தன்னிடம் வளர்ந்தால் நல்ல சீதோஷன நிலையில் வளரும் என்று நபியின் தாயிடம் எடுத்துச் சொன்னார்கள் அவர்களும் அதற்கு சம்மதித்து இவர்களுடனே திருப்பி அனுப்பினார்கள் (அர்ரஹீக் 76 , நபி வரலாறு 76)
பாலூட்டியவர்கள்:3 தாய் ஆம்னா , ஸுவைஃபிய்யா , ஹலீமா