أَنَّ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم قَالَ: إِذَا وَقَعَ الذُّبَابُ في إِنَاءِ أَحَدِكمْ؛ فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لْيَطْرَحْهُ، فَإِنَّ في أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً، وَفِي الآخَرِ دَاءً

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் கொசு விழுந்து விட்டால் அதை முழுவதுமாக முக்ககிய பின் அதை எரிந்து விடுங்கள். அதன் இரு இறக்கைகளின் ஒன்றில் மருந்தும் மற்றொன்றில் நோயும் இருக்கின்றது.

இந்த அறிவிப்பின் சில பாடங்கள்:

  • நபி (ஸல்) அவர்கள் ஒருவரின் உணவில் அல்லது குடிபானத்தில் கொசு அல்லது ‘ஈ’ விழுந்து விட்டால் அதை அப்படியே அவர் எடுத்து சாப்பிட வேண்டாம். அதை முழுவதுமாக முக்கியெடுத்து அப்புறப்படுத்திய பின் உண்ணட்டும். காரணம் அந்த கொசுக்களின் இரு இறக்கைகளில் ஒன்றில் மருந்தும் மற்றொன்றில் நோயயும் வைத்திருக்கின்றன. சில அறிவிப்பில் சற்று விளக்கமாக இவ்வாறு வந்துள்ளது. “அது நோய் உள்ள இறக்கையின் பக்கம் சாய்ந்தே (பொருட்களில்) விழும்” என்று வந்துள்ளது.
    படிப்பினைகள்
  • இந்த அறிவிப்பின் மூலம் கொசுக்களும், ஈக்களும் விழுந்த உணவையும், குடிபானத்தையும் நபியவர்கள் கீழே ஊற்றுவதற்கு ஏவவில்லை மாறாக அதை முற்றிலுமாக முக்கிய பின்பு அதை பயன்படுத்திக் கொள்ளும்படி ஏவியுள்ளார்கள். இதன் மூலம் அப்பொருட்கள் அசுத்தமாகாது என்பதும் தெரிய வருகிறது.
  • ஈக்களிலும் கொசுக்களிலும் நுண்ணுயிர்கள் இருப்பதை இன்று கண்டுபிடித்திருக்கும் நவீன அறிவியல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே இஸ்லாம் அதை கூறியிருக்கின்றது.
  • விழுந்த கொசுக்களையும் ஈக்களையும் முக்கி எடுக்க சொல்லியிருப்பதை வைத்து இரத்த ஓட்டம் இல்லாத எல்லா உயிரினங்களிலும் அந்த பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதை அறிஞர்கள் கூறுகிறார்கள்.
  • அந்த பாக்டீரியாக்களை அவ்வாறே விட்டுவிட்டால் அது பரவிக் கொண்டிருக்கும் என்பதையும் அந்த கொசு ஈக்களை முக்கும்பொழுது அந்தப் பொருளில் ஒட்டிய பாக்டீரியாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து முற்றிலுமாக நீங்கி விடுகிறது.
  • மேலும் நமக்கு ஆபத்தையும் கெடுதியையும் விளைவிக்கும் பொருளை விட்டும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
    ஒருவர் தனக்கு தீங்கை ஏற்படுத்தும் உயிரினங்களை கொல்வதில் எவ்வித தவறும் இல்லை என்பதையும் உணர்த்துகிறது..

விஞ்ஞானத்தைப் பற்றிய அறிவில்லாத காலத்திலும் பல விஞ்ஞான ரகசியங்களை போதித்த இஸ்லாத்தைக் கொண்டு  அளவில்லா ஆனந்தமடைவதைப் போல் இஸ்லாத்தின் ஒவ்வொரு வழிமுறைகளையும் பின்பற்றி ஆனந்தமடைவோமாக! 

0
Would love your thoughts, please comment.x
()
x