وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ ۚ ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ ؕ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ؕ ثُمَّ اِنَّكُمْ بَعْدَ ذٰلِكَ لَمَيِّتُوْنَؕ ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ تُبْعَثُوْنَ
நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர், அதை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம். பிறகு அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். அல்லாஹ், படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்! பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள். பின்னர், மறுமைநாளின்போது நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்.
ஆதமை முழு உலகிலிருந்தும் எடுக்கப்பட்ட களிமண்ணிலிருந்து படைத்த பின் அவர்களின் பிச்சளங்களை ஆணின் முதுகண்தண்டிலிருந்து சுரக்கும் இந்திரியத்தின் மூலம் படைக்கிறான். பின்னர் அதை பெண்ணிடமுள்ள பாதுகாக்கப்படும் கருவறையில் நாட்கள் தங்க வைத்து பின்பு பெண்ணின் சினைமுட்டையை உடைத்து அதோடு கலந்து விடுகிறது. வெண்ணிறமான அந்த இந்திரியத்தை முட்டையினுள் காணப்படும் மஞ்சள் கருவைப் போன்ற தோற்றமுள்ள, கருவறையோடு ஒட்டிக்கொள்ளும் விதமான செந்நிர ரத்தக்கட்டியாக மாற்றி விடுகிறான். (40) நாட்கள் ரத்தக்கட்டியாக தங்கியபின், அந்த ரத்தக்கட்டியை உணர்வற்ற உருவமற்ற மெள்ளிய சதைகளாக மாற்றி விடுகிறான். பின்னர் அதை தலை, இரு கைகள் இரு கால்கள், என பல எலும்புகளாக அல்லாஹ் மாற்றி அந்த எலும்புகளுக்கு மேல் சதைளை வளர வைத்து அந்த எலும்புகளுக்கு ஆடையைப் போல் போர்த்தி விடுகிறான். பின்னர் உயிர் ஊதப்பட்டு உயிர் பெற்ற முழுமையடைந்த ஒரு தோற்றமுள்ள மனிதனாக அவனை மாற்றி விடுகிறான். இவ்வாறு படிப்படியாக பல நிலைகளில் அழகாகவும் உறுதி மிக்கதாகவும் படைத்தவன் மிகவும் உயர்வானவன் என்று கூறி, அல்லாஹ்வின் ஆற்றலை மனிதர்களுக்கு ஞாபகமூட்டுகிறான். மனிதர்களே! இவ்வாறு நீங்கள் சிறிது சிறிதாக படைக்கப்பட்ட பின் அனைவரும் மரணித்து, இறுதியில் கேள்வி கணக்கிற்காக மறுமை நாளில் எழுப்பப்படுவீர்கள் என்று கூறி மறுமையின் நினைவை சிந்திக்க வைக்கிறான்.
أيسر التفاسير ,الميسر تفسير السعدي تدبر وعمل
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலிருந்து வெற்றியாளர்களின் வணக்க வழிபாடுகள் பற்றி கூறப்பட்டது. ஒருவரின் வணக்க வழிபாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றால் அவர் அல்லாஹ்வைப் பற்றிய அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இங்கும் இதற்குப் பின்னுள்ள வசனங்கள் மூலம் மனிதனை படைக்கும் முறையும், மற்ற சில அத்தாட்சிகளைக் கூறி அல்லாஹ்வை பற்றிய அறிவை சிந்திக்க வைக்கிறான். تفسير الرازي
ஆதம் (அலை) அவர்களை படைக்கும் முன்பு பூமியில் உள்ள எல்லா பகுதியில் இருந்தும் களிமண் எடுக்கப்பட்டு படைக்கப்பட்டார்கள் எனவேதான் எல்லா பகுதிகளில் உள்ள மண்ணை போல் மனிதர்களும் பல வகைகளாக சிலர் சிவப்பாக செந்நிறமாக வெண்ணிறமாக கருப்பாக மென்மையானவர்களாகவும் கடினமாகவும், நல்லோராகவும், தீயோராகவும், மனிதர்களை காண முடிகிறது. تفسير ابن كثير
மதிப்பற்ற அற்பமான நீரினால் நம்மை, பல கட்டங்களாக அழகாகவும், அற்புதமாகவும், படைத்த அல்லாஹ்வை அறிந்து, எல்லா சந்தர்பங்களிலும் அவனுக்கு வழிபட அல்லாஹ் உதவி செய்லானாக!