وَٱلَّذِینَ هُمۡ لِلزَّكَوٰةِ فَـٰعِلُونَ

(வெற்றியாளர்களான அவர்கள்) ஜகாத்தை நிறைவேற்றுவார்கள்.

அல்லாஹ் அவர்களின் செல்வத்தை தூய்மைபடுத்த, தங்கம், வெள்ளி, கால்நடைகள், தானியங்கள், வியாபார பொருட்கள் போன்றவற்றிலுள்ள கடமையான ஜகாத்தை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களின் உள்ளங்களில் ஊடுருவியிருந்த தீய குணங்களை அகற்றியதினால் வெற்றியடைந்தார்கள்.

 ( تفسير الجزائر )

 

 

1 நல்லோர்களைப் பற்றி கூறும் பொழுது தொழுகை, ஜகாத், வீணானதை விட்டும் விலகியிருத்தல் இவைகளைக் கூறியிருப்பதன் காரணம்: உடல் சார்ந்த வணக்கத்தையும் பொருள் சார்ந்த வணக்கத்தையும் முறையாக நிறைவேற்றியதோடு, மனித இயல்புக்கு மாற்றமான எல்லாவித தீய குணங்களை விட்டும் விலகியிருந்ததினால், அவர்கள் மகத்தான வெற்றி அடைந்தார்கள் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

( تفسير بيضاوي )

2 தொழுகையை உள்ளச்சத்தோடு நிறைவேற்றுவதன் மூலம், அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமைகளையும், ஜகாத் கொடுப்பதன் மூலம் அடியார்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் முறையாக நிறைவேற்றியதினால் வெற்றி பெற்ற நம்பிக்கையாளர் என்ற தகுதியை அடைந்துவிட்டார்கள்.

இங்கு கூறப்பட்டுள்ள ஜகாத் (தூய்மைபடுத்துதல்) என்பதற்கு இரு விதமான விளக்கம் தருகின்றனர்.

முதலாவது : தூய்மை என்பது மனிதனின் உள்ளத்தில் உள்ள இணைவைப்பு போன்ற பாவங்களை விட்டும் உள்ளத்தை தூய்மைப்படுத்துதல். அவர்கள் இது போன்ற பாவங்களை விட்டும் விலகி இருந்ததினால் வெற்றி அடைந்தார்கள் என்பது இதன் அர்த்தமாகும்.

இரண்டாவது : பொருளிலுள்ள கடமையான தர்மத்தை குறிப்பதாகும். அதாவது அவர்களின் (தங்கம், வெள்ளி, கால்நடைகள்,வியாபார பொருட்கள்,சில தானியங்கள்) பொருட்களில் அல்லாஹ் ஏற்படுத்திய கடமையான தர்மத்தை முறையாக நிறைவேற்றியதினால்  வெற்றி பெற்றார்கள் என்பதாகும்.  ( تفسير ابن كثير )

குர்ஆனில் ஜகாத் (கடமையான தர்மம்) பற்றிக் கூறும் போது நிறைவேற்றுவார்கள். أتىأدى என்ற வார்த்தைகள் கூறப்படும். ஆனால் இங்கு فاعلون செய்வார்கள் என்று கூறப்பட்டிருப்பதினால், தொடர்படியாக நிறைவேற்றுவார்கள் என்ற கருத்தில் சொல்லப்பட்டுள்ளது. (تفسير النسفي )

குர்ஆனில் இந்த வசனமும் இதுபோன்ற நல்லோர்களின் தன்மைகள் பற்றி கூறும் வசனங்களையும் அடியான் படிக்கின்ற சமயம் அந்த தன்மைகளோடு தன்னையும் தன்னைச் சார்ந்து இருப்பவர்களையும் நல்லோர்களின் தன்மைகள் பற்றி கூறப்படும் அடையாளங்கள் காணப்படுகின்றதா ? என்பதை சிந்தித்துப் பார்த்து தானும் மற்றவர்களும் இறை நம்பிக்கையில் எந்த தரத்தில் இருக்கின்றோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

  (تفسير سعدي  )

1 ஜகாத் என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும்
2 நமது பொருளில் இருக்கும் மற்றவர்களின் ஏழைகளின் உரிமைகள் கலப்பதை விட்டும் தூய்மை அடைகிறது.
3 ஜகாத் கொடுப்பதினால் ஈமானின் அடையாளம் வெளிபடுகிறது..
4 கருமித்தனத்தை விட்டும் உள்ளம் பாதுகாப்பப்படுகிறது.
5 ஏழைகள் இன்னும் தேவையுடையோரின் தேவைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது.
6 கடமையான தருமத்தை நிறைவேற்றுவதினால் நமது செல்வத்தில் அபிவிருத்தி ஏற்பட்டு மென்மேலும் செல்வம் வளர காரணமாகிறது.
7 செல்வம் என்பது அல்லாஹ் அடியானிடம் அமானிதமாக தந்து வைத்துள்ளான் அதை அவன் விரும்பு வழியில் செலவழிக்கும் போது அவனுகு நன்றி செலுத்தியவராக கருதப்படுகிறார்.
8 கடமையான தர்மத்தை நிறைவேற்றுவதன் மூலம் சமூகத்தில் ஒற்றுமை ஏற்படுகிறது.
9 சமகாலத்தில் முழுஉலகிலும் முக்கியமானதாக கறுதப்படும் வறுமைப் பிரச்சினையைத் தீர்க்க உதவுகிறது.
10 (செல்வந்தர்களை பார்த்து) பொறாமை மற்றும் வெறுப்பு ஏற்படாமல் அவர்களைக் கண்டு இரக்கம் ஏற்படுகிறது.
11 பெருநாள் தினத்தன்று ஏழைகளுக்கு கடமையான தர்மத்தை கொடுப்பதினால் அன்றைய தினம் அவர்கள் கேவலமாக யாசகம் கேட்காமல் கண்ணியத்தோடு இருப்பதற்கு வழி வகுக்கிறது.

( نضرة النعيم في مكارم أخلاق الرسول الكريم )

நாம் வெற்றியாளர்களின் உயர்வான தன்மைகளை அறிந்து அவை நம்மிடமும் நம்மைச் சார்த்தவர்களிடமும் உள்ள வெற்றியின் தரத்தை பரிசோதித்து முழுமையான வெற்றி பெற அல்லாஹ் உதவிசெய்வானாக!

0
Would love your thoughts, please comment.x
()
x