وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ
அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும்.
ஜகாத் என்பது இஸ்லாத்தின் கடமைகளில் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று அதை நிறைவேற்றாமல் இருப்பது மிகப் பெரும் பாவங்களில் ஒன்றாக குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பல எச்சரிக்கைகள் வந்துள்ளன.
குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளான் இணை வைப்பவர்களுக்குக் கேடுதான் அவர்கள் ஜகாத்தை நிறைவேற்றாமலும் மறுமையை நிராகரிக்கவும் செய்கின்றனர்.
மற்றொரு வசனத்தில் கூறுகிறான் யார் தங்கம் வெள்ளிகளை சேகரித்து அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவில்லையெனில் அவர்களுக்கு மறுமையில் பயங்கர வேதனையைப் பற்றி சுபச் செய்திக் கூறுங்கள்
நபி (ஸல்) அவர்கள், “ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் உட்காரவைக்கப்படுவார். அப்போது கால்குளம்புகள் உடையவை தம் கால்குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புடையவை தமது கொம்பால் அவரை முட்டித் தள்ளும். அன்றைய தினம் அவற்றுக்கிடையே கொம்புகளற்றவையும் இருக்காது; கொம்புகள் முறிந்தவையும் இராது” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் :அபூ ஹுரைரா நூல் :முஸ்லிம்
அபூபக்கர் (ரலி) அவர்கள் தங்களது ஆட்சி காலத்தில் கூறினார்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஸகாத்தாக) வழங்கி வந்த ஓர் ஆட்டுக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால்கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள். (புகாரி 1400 )
மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான் எவர்கள் அல்லாஹ் கொடுத்த செல்வத்தை கஞ்சத்தனம் செய்து சேகரித்து வைத்துக் கொள்கிறார்களோ அவர்கள் தங்களது இந்த செயல் நல்லதாக எண்ணிவிட வேண்டாம் மாறாக அது அவர்களுக்கு கெட்டது தான். கஞ்சத்தனம் செய்து சேர்த்து வைத்த செல்வத்தை மறுமை நாளில் மாலையாக அணிவிக்கப்படும் வானங்களும் பூமிகளும் அல்லாஹ்விற்கே உரியவைகள் இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்கிறவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான் (ஆலு இம்ரான் 180)
நபி அவர்கள் கூறினார்கள் யார் செல்வத்தை வைத்து அதற்குரிய ஜகாத்தை நிறைவேற்றவில்லையோ அந்த செல்வத்தை அவரிடமிருந்து அதனுடைய ஜகாத்தை பிடிங்கிக் கொடுப்போம் இது அல்லாஹ்வின் கடமைகளில் முக்கிய கடமையாகும் (الكبائر تحقيق مشهور بن سلمان ١٢٨)
நபி அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் எல்லா மனிதர்களுக்கு முன்னால் நரகிலே மூன்று நபர்கள் நுழைவார்கள் முதலாமவர் அநியாயம் செய்த அரசன் இரண்டாமவர் செல்வம் கொடுக்கப்பட்டு அதற்குரிய ஜகாத்தை நிறைவேற்றாத மனிதர் மூன்றாமவர் வறுமையில் இருந்தும் பெறுமை அடித்துக் கொண்ட மனிதன் . (الكبائر تحقيق – مشهور بن حسن آل سلمان ١٢٩)
எனவே ஜகாத் என்பது இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமைகளாகும் அதை முறையாக நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக !