وَمَا يُعَلِّمٰنِ مِنْ اَحَدٍ حَتّٰى يَقُوْلَاۤ اِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْؕ‌

எவருக்கேனும் சூனியக்கலையைக் கற்றுக் கொடுக்க நேரும்போது அந்த வானவர்கள், “நாங்கள் உங்களுக்கு ஒரு சோதனையாகவே இருக்கிறோம்; ஆகவே, நீங்கள் (இதனைக் கொண்டு) இறை நிராகரிப்பை மேற்கொள்ள வேண்டாம்” என எச்சரித்து விடுவார்கள்.

 சூனியம் என்பது  மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சூனியம் என்பது எந்தப் பயனையும் பெற்றுத்தராத, மாறாக தீமைகளையே விளைவிக்கும் பாவச்செயலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ

அவர்களுக்கு எந்தப் பயனும் தராத, அவர்களுக்கு துன்பமிழைக்கும் ஒன்றை- சூனியத்தை- கற்றுக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 2:102)

وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى

சூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)

அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவதாக சூனியத்தைக் கூறியுள்ளார்கள்

மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவிலேயே  மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன்,சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)

சூனியத்தால் சம்பாதிப்பது ஹராமான, இழிவான செயலாகும். அறிவிலிகளும் அநியாயக்காரர்களும் பலவீனமான ஈமான் கொண்டவர்களும் தங்களின் எதிரிகளை சூனியத்தின் மூலம் பழிவாங்குவதற்காக சூனியக்காரர்களிடம் செல்கின்றனர். அநீதம் செய்தவர்கள் அதன் எதிர்விளைவாக தங்களை சூனியம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக சூனியக்காரர்களிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.

சூனியத்தின் ஏழாவது வகை: கண்கட்டி வித்தை

அறிஞர்கள் சூனியத்தை சுமார் ஏழு வகைகளாகப் பிரிக்கின்றனர். அதில் ஏழாவது வகையாக கண்கட்டி வித்தை சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வகை சூனியத்தில், ஒருவர் கயிற்றின் மீது கடந்து செல்லுதல், காற்றில் பறப்பது, தண்ணீரில் நடப்பது, கம்பின் நுனியில் நிற்பது, நாயின் மீது சவாரி செய்வது போன்ற விசித்திரமான செயல்களைச் செய்வதும் அடங்கும்.

இந்த செயல்கள் பார்வையாளர்களை மயக்கி, அவர்களை நம்ப வைக்க சூனியக்காரர்கள் பயன்படுத்தும் தந்திரங்களாகும்.

ஒரு வரலாற்று நிகழ்வு:

ஒரு சமயம், ஒரு சூனியக்காரர் வலீது இப்னு உக்ஃபா என்போரின் சபையில் கயிற்றின் மீது நடந்து செல்வது, கழுதையின் பின் துவாரத்தின் வழியாக சென்று வாய் வழியாக வெளியேறுவது போன்ற  கண்கட்டி வித்தைக் காண்பித்துக் கொண்டிருந்ததைக் கண்ட ஜுன்துஃப் இஃப்னு காஃப்  (ரஹ்) என்ற தாபியீ, அந்த சூனியக்காரரை வாளால் வெட்டி கொன்றார். இந்த செயலின் மூலம், ஜுன்துஃப் (ரலி) சூனியக்காரர்களை எதிர்க்கும் தைரியத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக, “சூனியக்காரரை கொலை செய்தவர்” என்ற சிறப்புப் பெயரை ஜுன்துஃப் (ரஹ்) பெற்றார்.

கண்கட்டி வித்தை என்பது சூனியத்தின் ஒரு வகையாகும்.இந்த வகை சூனியத்தில், பார்வையாளர்களை மயக்கி, அவர்களை நம்ப வைக்க சூனியக்காரர்கள் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

சூனியம் என்பது ஒரு தீங்கு விளைவிக்கும் செயலாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.       ( الزواجر عن اقتراف الكبائر. ٢/١٦٥)

எனவே, சூனியக்காரர்களை நம்புவது அல்லது அவர்களின் செயல்களில் பங்கேற்பது தவறானது.

இப்னு ஹஜர் (ரஹ்) கூறும் சூனிய சிகிச்சை முறைகள்:

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள், சூனியத்தின் தீய சக்தியிலிருந்து விடுபட மூன்று முக்கிய நிபந்தனைகளுடன் கூடிய சிகிச்சை முறையைப் பற்றி விளக்குகிறார். மற்றவர்கள் அத்துடன் இணைவைப்பை விட்டும் விலகியிருப்பதை சேர்த்துள்ளனர்.

அந்த நிபந்தனைகள் பின்வருமாறு:

1. இணை வைக்கும் வார்த்தைகளை விட்டும் விலகி இருத்தல்:

சிகிச்சை முறையில் எந்த வகையிலும் இணை வைக்கும் வார்த்தைகள் இருக்கக் கூடாது. அல்லாஹ்வோடு வேறு எவரிடமும் உதவிதேடும்  அர்த்தம் தரும் எந்த வார்த்தையும் பயன்படுத்தக் கூடாது.

2. அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்புகளின் அடிப்படையில் வார்த்தைகள் இருக்க வேண்டும்:

சிகிச்சைக்கு பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தும் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.

அவை குர்ஆனில் இருந்து அல்லது நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் இருந்து வந்திருக்கின்றன..

3.  அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்:

சிகிச்சைக்கு பயன்படுத்தும் வார்த்தைகள் அரபு மொழியில் அல்லது,  தெளிவாக அர்த்தம்  விளங்கும் மற்ற மொழிகளில் இருக்க வேண்டும்.

4. அல்லாஹ்வின் மீது மட்டுமே  நம்பிக்கை வேண்டும்:

 சூனியத்திற்காக சிகிச்சை  மேற்மேற்கொள்பவரின் உள்ளத்தில்   அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கை  இருக்க வேண்டும். அதாவது  அனைத்து விதமான சிகிச்சைகளின் பயண்களும் அல்லாஹ்வின் விருப்பத்தின்படியே  கிடைக்கும் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். சிகிச்சை செய்பவரிடமோ  அல்லது அந்த வார்த்தைகளிலோ எந்த சக்தியும் இல்லை என்ற யம்பிக்கை வைக்க வேண்டும். ( كتاب كيف تتخلص من السحر ٥١ ) 

உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம் 4/31

0
Would love your thoughts, please comment.x
()
x