நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 25 வயதானபோது, கதீஜா (ரலி) யின் வியாபார பொருட்களுடன் சிரியாவிற்கு வியாபார நிமித்தமாக சென்ற சமயம் நபியுடன் கதீஜா (ரலி), தனதுதனது அடிமையான மைஸராவையும் அனுப்பி வைத்தார்கள்
வியாபாரத்தில் லாபத்துடன் திரும்பியதையும் பிரயாணத்தில் நடந்த அற்புதங்கள் மற்றும் நபியின் உயர்வான பண்புகளை கேள்விப்பட்டு கதீஜா (ரலி) அவர்கள், நபியவர்களை மனம் முடித்து திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள்.
நபியுடன் பிரயாணத்தில் சென்றிருந்த மைய்ஸரா சென்ற போதும் திரும்பி வந்த போதும் நிகழ்ந்த அற்புதங்களை கதீஜாவுக்கு விவரிக்கையில் அவரது உள்ளம் பூரித்தது அவருடைய ஒன்றுவிட்ட சகோதரரும் கிறிஸ்தவத்தை பின்பற்றிய வந்த வரக்கா இப்னு நவ்ஃபல் என்பவரிடம் சென்று முகம்மது (ஸல்)க்கு நிகழ்ந்ததை பற்றி விளக்கி கூறினார் அப்போது வரக்கா கதீஜாவே ! இது உண்மையாயின் முஹம்மத் இச்சமுதாயத்தின் தீர்க்கதரிசியாக இருக்கக்கூடும் என்ற நற்செய்தியை கூறினார் இந்த நற்செய்தியை கேள்விப்பட்ட கதீஜா சில நாட்களாக தனது உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் ஒரு விதமான இன்ப நினைவுகளை எண்ணிக் கொண்டிருந்தார் கதீஜாவின் உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த உணர்வை தோழியான நஃபீஸா உணர்ந்து நபிகளார் தனிமையில் இருந்த போது நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற கேள்வியை எழுப்பினார் அப்போது நபிகளார் எனக்கு அதற்கான வசதி இல்லவே என்றார்கள் அத்தகைய வசதிகள் உங்களுக்குக் கொடுக்கப்படடு அழகும் வசதியும் சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தப் பெண் கிடைத்தால் சம்மதிப்பீராக என்ற கேள்வியை நபிஸா எழுப்பினார் அப்படியா யார் அது என்று கேட்க கதீஜா என்றார் அது எவ்வாறு மடியும் ?
கதீஜா என்ற பெண்ணை உங்களுக்கு பெண் பேசி தரும் பொறுப்பை என்னிடம் விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பொறுப்பை ஏற்றுக் கொண்டார் நஃபீஸா
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 25 வயதும், கதீஜா (ரலி) அவர்களுக்கு 40 வயதும் இருந்தது. (நபி வரலாறு 109)
கதீஜா (ரலி) அவர்களின் முக்கியத்துவம்
- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் கதீஜா (ரலி) அவர்கள் ஒரு முக்கிய பங்கு வகித்தார்கள்.
- இஸ்லாமின் ஆரம்ப காலத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முழுமையான ஆதரவையும், அன்பையும் வழங்கியவர் கதீஜா (ரலி) அவர்கள் தான்.
- முதல் முஸ்லிம் பெண் மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி என்ற பெருமை கதீஜா (ரலி) அவர்களுக்கு உண்டு
- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பல மனைவிகள் இருந்தாலும், கதீஜா (ரலி) அவர்கள் மூலமாகவே எல்லாக் குழந்தைகளும் .
- கதீஜா (ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகும், அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்போதும் நினைவில் கொள்வார்கள்.
- எதேனும் பிராணிகளை அறுத்தால், அதன் ஒரு பகுதியை கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். ( البخاري 3818 مواقف الصحابة في الدعوة الي الله ٣٥ )