اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏ فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ رَبُّ الْعَرْشِ الْـكَرِيْمِ‏

“உங்களை நாம் படைத்ததெல்லாம் வீணுக்காகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் மீட்டப்படமாட்டீர்கள் என்றும் நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?” (என்று கூறுவான்.) மிக உயர்ந்தவனாவான், உண்மையான அரசனாகிய அல்லாஹ்! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, சங்கைமிகு அர்ஷின் உரிமையாளன்.

அல்லாஹ் இதற்கு முந்திய வசனங்களில் மறுமை நாளின் நிகழ்வுகளைப் பற்றி விவரித்தான் இவ்விடத்தில் மறுமை நாள் ஏற்படுத்த என்ன காரணம் என்பதை இங்கு விவரிக்கிறான் உலகில் நல்லோர்களும் தீயவர்களும் உண்மையாளர்களும் பொய்யர்களும் வாழ்கின்றனர். அவர்களுக்கு எவ்வித சரியான கூலி வழங்கப்படாத பொழுது இவ்வுலக வாழ்வு வீணாக ஆகிவிடும் அல்லவா ? என்பதை இங்கு கேட்கிறான்.
என்ன இவ்வுலகில் உங்களை எந்த நோக்கமில்லாத வீணான அர்த்தமற்ற வாழ்வு வாழவா  நான் படைத்துள்ளேன் ? எனவே அவரவர் எவ்வித கட்டுப்பாடின்றி விரும்பிய விதத்தில் வாழ்ந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா ?
மரணித்த பின் கேள்வி கணக்கிற்காக அவரவர் செய்த நல்ல தீய செயல்களுக்கு கூலி வழங்கப்பட எழுப்பப்பட மாட்டோம் என்று எண்ணுகிறீர்களா அவ்வாறு எண்ணுவது மாபெரும் தவறாகும்.
116 காரணம் இப்பிரபஞ்சத்தை படைத்து பரிபாலித்து அனைத்திற்கும் அதிபதியாகவும் அவைகளிலுள்ள அவனது ஒவ்வொரு செயலிலும் உயர்வான பல ஞானங்களையும், நோக்கங்களையும் ஏற்படுத்திருக்கும் உயர்வான  அல்லாஹ், இவ்வுலக வாழ்வை எவ்வாறு வீணானதாக படைத்திருப்பான். அவ்வாறு படைப்பதை விட்டும் அவன் மிக பரிசுத்தமானவன். அப்பேர்பட்ட உயர்பண்புகளை பெற்றவன் மட்டுமே வணக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றப்பட தகுதியானவன். அவனது உள்ளமையிலும், அவனது உயர்வான அழகான பண்புகளிலும் அவனுக்கு நிகர் யாரும் இருக்கவே முடியாது. அவனோ அழகான உயர்வான அனைத்து படைப்பினங்களுக்கும் மேலிருக்கும் மாபெரும் அர்ஷின் அதிபதியாகவும் அவனே இருக்கின்றான்.
117 இப்பிரபஞ்சத்தின் அதிபதியான அல்லாஹ்விற்கு யாரேனும் ஒருவர் அவனது உள்ளமையிலும் உயர்வான பண்பிலும் நிகர் இருப்பதாக கூறினால், அவர் ஆதாரமில்லாத கருத்தை வாதிடுகிறார். அவ்வாறு சொல்பவனுக்கு அல்லாஹ்விடத்தில் மறுமை நாளில் கொடிய வேதனை இருக்கின்றது. நிச்சயமாக இவ்வுலகில் நிராகரித்து வாழும் நிராகரிப்போர் மறுமையில் வெற்றியிழந்து நரகில் தள்ளப்பட்டு அழிந்து போவார்கள்.
118 நிராகரிப்போரின் மடமையான வாழ்வையும் மறுமையில் அவர்களுக்கு இருக்கும் வேதனையையும் கூறிய பின்னர் தனது தூதுரை பார்த்து கூறுகிறான். நபியே நீங்கள் எல்லா சமயங்களிலும் அல்லாஹ்விடம் மன்னிப்பை தேடுபவர்களாகவும் அவனது அருளை ஆதரவு வைப்பவர்களாகவும் இருங்கள். இவ்விரண்டு தன்மைகளும் எல்லா படைப்பினங்களின் ஆபத்துகளை விட்டும் பாதுகாக்கும்.

0
Would love your thoughts, please comment.x
()
x