فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ فَلَاۤ اَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَٮِٕذٍ وَّلَا يَتَسَآءَلُوْنَ‏ فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

பிறகு, சூர்எக்காளம் ஊதப்பட்டதும் அவர்களிடையே எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவும் மாட்டார்கள். வசனம் 23: 101- 104

இதற்கு முந்தைய வசனத்தில் மரணத்திற்குப் பிறகு மண்ணறை வாழ்வொன்று இருக்கின்றது என்ற செய்தி சொல்லப்பட்டது அந்த மண்ணறை வாழ்விற்கு பிறகு இருக்கும் வாழ்வின் நிலைகளை பற்றி இங்கே சில செய்திகள் சொல்லப்படுகின்றன.
சூர் என்னும் பயங்கர சத்தம் ஊதப்பட்டு விட்டால் அச்சமயம் மக்கள் யாவரும் தனது மண்ணறையிலிருந்து எழுந்து நிற்பர். அப்போது உலகில் குடும்பத்தின் மூலம் பெருமையடித்தவர்களின் பெருமையும் உதவி செய்து வந்த குடும்பத்தாரின் உதவிகளும் யாதொரு பயனையும் தராது. அது மட்டுமல்லாமல் எவரும் எவரை பற்றிய சிந்தனையோ, எவரும் மற்றவரைப் பற்றி விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
102 இவ்வுலகில் வாழும் சமயம் நற்காரியங்கள் அதிகமாக செய்தவர்களின் நன்மைகள் அவர்களின் குற்றங்களை விட அதிகம் இருப்பதால் மறுமை நாளில் நரக வேதனையிலிருந்து ஈடேற்றம் பெற்று நிரந்தர சுவனத்தில் தங்கி இருப்பார்கள்.
103 இவ்வுலக வாழ்வில் நற்கருமங்களை காட்டிலும் பாவங்களை அதிகமாக செய்தவர்கள் அல்லாஹ்வின் அருளை இழந்தவர்களாக மறுமையில் நிரந்தரமாக நரகில் தங்கியிருப்பார்கள்.
104 நரக வேதனையின் பயங்கரத்தால் முகம் கடுகடுத்தவர்களாகவும் பற்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த உதடுகள் வேதனையின் பயங்கரத்தால் உதடுகள் தெறித்து தொங்கிக் கொண்டும் அந்த இடைவெளியில் பற்கள் வெளிபட்டு விகாரமாக காட்சியளிக்கும்.
(101 இந்த வசனத்தில் மறுமையில் மனிதனுக்கு கிடைக்கும் கூலிகள் அனைத்தும் நற்காரியங்களின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும் குலம், கோத்திரம், மதிப்பு, மரியாதை, செல்வம், போன்ற மனிதன் இவ்வுலகில் மதிப்பாக கருதப்படும் எதை வைத்தும் வழங்கப்படாது என்பது தெரிய வருகிறது.
ஒரு மனிதர் ஜுஹைர் இப்னு நுஐம் (ரஹ்) என்பவர்களிடம் நீங்கள் யார் என்று கேட்டார் அதற்கு அந்த பெரியவர் நான் அல்லாஹ்வால் இஸ்லாம் என்னும் அருள் வழங்கப்பட்டவன் என்று கூறினார்கள் அதற்கு கேட்டவர் நான் தங்களது குடும்பத்தை பற்றி விசாரிக்கிறேன் என்றார் அதற்கு அவர் “மறுமையில் சூர் ஊதப்பட்டு விட்டால் அங்கு குலம் கோத்திரம் யாருக்கும் எதற்கும் எவ்வகையிலும் பயனளிக்காது” என்ற வசனத்தை ஓதினார்கள்.) تفسير المحرر

எனவே நாம் வாழும் இவ்வுலகின் சொற்ப வாழ்கையில் குலம், கோத்திரத்தை வைத்து பெருமை கொள்ளாமல் அல்லாஹ்  நமக்கு அருளிய இஸ்லாத்தை பெரும் செல்வமாக கருதுவோமாக! 

 

0
Would love your thoughts, please comment.x
()
x