وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْارض وَاِنَّا عَلٰى ذَهَابٍۢ بِه لَقٰدِرُوْنَ
இன்னும், வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். நாம் (விரும்புகின்றபடி) அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றலுடையோம்.
வானைப் பற்றிக் கூறிய பிறகு வானிலிருந்து இறக்கி வைக்கப்படும் மழையை பற்றி இங்கு குறிப்பிடுகிறான்.
இந்த வசனத்தில் இறக்கி வைக்கப்படும் மழைநீரிலுள்ள மூன்று நுட்பங்களை கூறுகிறான்.
1 (கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம்) அளவோடு மழை பொழிவதினால் தரிசு நிலங்கள் புதுப்பிக்கப்படு புல்வெளிகள் அதிக பசுமையடைகின்றன. பயிர்களுக்கும் மரங்களுக்கும் ஏற்ற அளவு தண்ணீர் கிடைக்க வழிவகிக்கின்றன. கடல்களுக்கும் ஆறுகளுக்கும் தேவையான அளவு சென்றடைகின்றன. அதே சமயம் அளவில் அதிகமாக மழை பொழிவதினால் கடல் கொந்தளிப்பு அபாயங்களும் ஏற்பட்டுவிடும். குறைவாக பொழிவதால் தாவரங்கள் மற்றும் மரங்கள் வறட்ச்சியடைந்து காய்வதற்கு வழிவகுக்கும். . نظم الدرر
2 (அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம் )வானிலிருந்து இறங்கும் நீரின் தேக்கம் இரண்டு விதங்களாக அமைகின்றன. ஒன்று குறுகிய நேரத்தின் தேக்கம். மழை பொழிந்த பிறகு பூமியிலிருந்து உஷ்ணங்களும், குளிரும் குறைந்து நிலங்களில் மென்மையை ஏற்படுத்துகிறது. மேலும் வசந்த காலத்தில் செடிகளும் தாவரங்களும் வளர தொடங்குகின்றன. பெரும் பெரும் மரங்கள் தங்களின் நரம்புகளால் அந்த சிறு துளிகளை உறிஞ்சி பழங்களை உற்பத்தி செய்கின்றன. பூமியில் புதைந்து கிடக்கும் விதையிலிருந்து செடிகளின் வேர்களும் நரம்புகளும் வெளிபட தொடங்குகின்றன.
மற்றொன்று நீண்ட காலத்து நீர்த்தேக்கம். மழை இறங்கிய பிறகு நிலத்திற்குக் கீழ் நீர் சென்றடைந்து அது ஊற்றுகளிலும் கிணறுகளிலும் தண்ணீர் கிடைக்கின்றன.
التحرير والتنوير
3 (அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றலுடையோம்.)மழையை போக்குவது என்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன ஒன்று மழை பொழியாமல் தடுத்து வைப்பது, அல்லது இறங்கிய தண்ணீரினால் நிலநடுக்கங்கள் ஏற்படுவது அல்லது இறங்கிய தண்ணீரை கடினமான வெப்பத்தினால் முழுமையாக உறிஞ்சச் செய்வது.
இதே கருத்துள்ள பல வசனங்கள் கூறப்பட்டுள்ளன.
التحرير والتنوير
சூரியனின் வெப்பத்தால் நீர்நிலைகளிலிருந்து நீர் ஆவியாகி வானில் ஏறுகிறது. மேலே செல்லும் நீராவி குளிர்ந்து, தண்ணீர்த் துளிகளாக உருவாகின்றன. இந்த தண்ணீர்த் துளிகள் ஒன்றிணைந்து மேகங்களை உருவாக்குகின்றன. மேகங்கள் தொடர்ந்து தண்ணீர்த் துளிகளை இணைத்துக்கொண்டு பெரிய மேகங்களாக மாறுகின்றன. இந்த மேகங்களில் தண்ணீர்த் துளிகள் பெரிதாகி, தாங்க முடியாத அளவு எடை அதிகரிக்கும் போது மழையாக பொழிகிறது. இது போன்ற சிந்தனைகள் இஸ்லாத்தின் எதிர்மறையான கருத்தாகும் அவைகள் அனைத்தும் உலக இயல்புகள் இயற்கையாகவே நடைபெறுகின்றன. அது எவரின் செயல் மூலமாகவும் இயங்குவதில்லை, என்ற அடிப்படையில் கூறுகிறார்கள். இது போன்ற சிந்தனை உள்ளவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான் மனிதர்களில் “அதிகமானோர் அவனின் அருட்கொடைகளை மறுப்பவர்களாகவே இருக்கின்றனர்” என்று கூறுகிறான்.
أضواء البيان
அதேசமயம் இந்த முறையில் அல்லாஹ் தான் ஏற்படுத்தி யுள்ளார் என்று நம்பிக்கை வைப்பதில் தவறில்லை.
مجموع فتاوى و مقالات الشيخ ابن باز ١٣/٨٦