وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآٮِٕقَ ۖوَمَا كُنَّا عَنِ الْخَـلْقِ غٰفِلِيْنَ
நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு பாதைகளை (வானங்களை)யும் நாமே படைத்திருக்கிறோம், இப்படைப்புகளைப்பற்றி ஒருபோதும் நாம் பராமுகமாக இருக்கவில்லை.
மனிதனின் உருவாக்கம் மற்றும் இறப்பைப் பற்றி கூறிய பிறகு, வானுலகைப் பற்றி கூறியிருப்பதில் ஒரு நுட்பம் உள்ளது. மனிதன் மரித்த பின் நல்லோர்களுக்கு வெகுமதிகளும் தீயோர்களுக்கு வேதனைகளும் கொடுக்கப்படும் இடம், உங்களுக்கு மேல்லுள்ள நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த வானுலகில் தான் நடைபெறும் என்பதைக் கூறுவதன் மூலம் வானை நோக்கி பார்க்கும் நாம், மறுமையைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதை உணர்த்தப்படுகிறது. التحرير والتنوير
இதற்கு முந்திய வசனத்தில் மனிதனை படைத்து அவனது இறுதி முடிவையும் சுருக்கமாக கூறிய பின் அவன் இங்கு வாழும் நாட்களில் அவனுக்கு வழங்கப்படும் பலவித அருட்கொடைகளை விவரிக்க ஆரம்பிக்கிறான். .
1 ஏழு வானங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அமைத்து அவைகளுக்கு சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் மூலம் அழகுபடுத்தி வைத்திருக்கிறான்.அவைகளில் படைப்பினங்களுக்கு தேவையான பல நலவுகளையும் ஏற்படுத்தியுள்ளான். تفسير سعدي
இதே கருத்துள்ள பல வசனங்கள் கூறப்பட்டுள்ளன
3 ஒருபோதும் நாம் பராமுகமாக இருக்கவில்லை.இதில்
1 ஒவ்வொரு படைப்பையும் நாமே படைத்திருக்கின்றோம் எந்த ஒரு படைப்பையும் படைத்து விட்டு நாம் வீணாக்கியதுமில்லை, 2 எந்த ஒரு படைப்பையும் படைத்து நாம் கண்டுகொள்ளாமல் இருந்ததுமில் லை, அப்படி இருந்திருந்தால் இந்த வானம், பூமியின் மீது விழுந்திருக்கும். 3 அவ்வாறே எந்த ஒரு படைப்பையும் படைத்து நாம் மறந்ததுமில்லை. மாறாக இவ்வுலகில் உள்ள தரையிலும் ஆழ்கடலில் இருக்கும் விதைகளையும் பாலைவனங்களில் புதைந்து இருப்பவற்றையும் நாம் அறிந்தே வைத்திருக்கின்றோம்.
இந்த வாசகம் முழு உலகையும் வாழ்வையும் முறையாக அவன் அமைத்துள்ளான் என்பது தெரிய வருகிறது அவ்வாறு இல்லையெனில் இப்ப பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அழிந்து போய் இருக்கும் என்பதை உணர்த்துகிறது. أيسر التفاسير