وَٱلَّذِینَ هُمۡ لِأَمَـٰنَـٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رَ ٰ⁠عُون

இன்னும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக் காக்கக்கூடியவராய் இருக்கின் றார்கள்.

இந்த வசனத்தில் நம்பிக்கையாளர்களின் இரு தன்மைகளைப் பற்றி கூறப்படுகிறது. 1 அமானிதத்தை பாதுகாத்தல், 2 செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுதல்.  التحرير والتنوير

அந்த நல்லடியார்கள் அல்லாஹ்வுடன் செய்து கொண்டு உடன்படிக்கைகளையும், அவர்கள் அடியார்களோடு செய்து கொண்ட பொருளாதாரத்தில் ஏற்பட்ட உடன்படிக்கைகளையும், ரகசியங்களையும் பாதுகாப்பதில் ஏற்பட்ட உடன்படிக்கைகளையும்,  அதி முக்கியத்துவத்தோடு பாதுகாப்பார்கள். அத்துடன் அந்த உடன்படிக்கைகளை நிறைவேற்றுவதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். உடன்படிக்கை செய்து கொண்ட பின்பு கவனமில்லாமல் அதற்கு மாறு செய்வது பெரும்பாவம் ஆகும்.
تفسير سعدي

அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கை என்பது ஏவல்களை எடுத்து நடப்பதிலும், தடைகளை விட்டும் விலகி இருப்பதும், ஐவேளைத் தொழுகைகளில் பேணுதலாக இருப்பதும், தொழுகையின் சமயத்தில் தூய்மையை பேணுவதும், பெருந்தொடக்கின் சமயம் குளித்து தூய்மையை பேணுவதும், உடன்படிக்கையில் கட்டுப்பட்டதாகும்.
تفسير المحرر

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள அமானிதம் மற்றும் உடன்படிக்கையை பேனுவார்கள் என்பதற்கு  راعي  என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது. இது  ஆடு மேய்ப்பவரைக் குறிப்பதாகும். ஆடு மேய்ப்பவர் எவ்வாறு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஆடுகள் தன்னை விட்டு தவறிச் சென்று விடுவதை அஞ்சி முறையாகவும் முழுமையாகவும் ஒப்படைப்பதில் கவனத்தோடு இருப்பாரோ அவ்வாறே நல்லடியார்கள் அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளை முறிக்காமல் முழுமையாக நிறைவேற்றுவதில் கவனத்தோடு செயல்படுவார்கள்.

نظم الدرر

அமானிதம் என்பது பெரும்பாலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த  ஒரு பொருளை முறையாக பாதுகாப்பவரிடம் ஒப்படைக்கப்படும். அமானிதத்தை வாங்கிய நபர் முறையாக ஒப்படைத்து விட்டால் அவர் மேல் நம்பிக்கையும் நேசமும் கூடும். அதே சமயம் அவர் வாங்கியதை ஒப்படைக்க மறுத்து விட்டால், அவர் மேல் நம்பிக்கை இழக்கப்பட்டு விரோதியாக மாறிவிடுவார். அமானிதம் இந்த அளவுவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதினால் அல்லாஹ் இதை ஈமானின் ஒரு கிளையாக கூறியுள்ளான்.  التحرير والتنوير

2
0
Would love your thoughts, please comment.x
()
x