இஸ்லாத்தில், வட்டி சாப்பிடுவது (ரிபா) மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குர்ஆனிலும், நபிகள் முஹம்மது (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும் வட்டி தடை செய்யப்பட்டுள்ளது.

வட்டியைப் பற்றிய குர்ஆன் வசனங்கள் சில

“வட்டியை உண்ணாதீர்கள்; நீங்கள் கொடுத்த வட்டியில் இருந்து மீதம் இருப்பதை விட்டு விடுங்கள். இவ்வாறு செய்யவில்லை என்றால், அல்லாஹ் இன்னும் அவனது தூதருடன்  போருக்குத் தயாராகுங்கள்.”  அல்-பகரஹ் 2:279:

“வட்டி உண்பவன் மறுமையில் சைத்தான் தீண்டியவனைப் போல எழுந்திருப்பான்”  அல்-பகரஹ் 2:275

இந்த வசனத்தில், உபதேசம் செய்யப்பட்ட பின்னும் வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரக வேதனையில் ஆழ்த்தப்படுவார்கள். என்ற கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.(அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக)

வட்டியைப் பற்றிய நபிமொழிகள்  சில

நபியவர்கள் கூறினார்கள்:

.”ஏழு அழிவுகரமான பாவங்களில் வட்டி உண்பதும் ஒன்று.” (صحيح البخاري)

“வட்டி உண்பவர்களையும், வட்டி கொடுப்பவர்களையும், அதற்கு சாட்சியாக இருப்பவர்களையும், அதற்கு கணக்கு எழுதுபவர்களையும் அல்லாஹ்  சபிக்கிறான்.” ( الترمذي ١٢٠٦)

குர்ஆனில் வட்டி பற்றி மிகவும் தெளிவான மற்றும் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.இந்த எச்சரிக்கைகளை நபிகள் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மேலும்  வலுவூட்டுகின்றன.

 இதன் மூலம் வட்டியின் மூலம் சம்பாதிப்பது  குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும், அனைவரும் அல்லாஹ்வோடும் அவனது தூதரோடும் போர் செய்கிறார்கள் என்ற பாவத்தில் அடங்குவர் என்பதை குர்ஆனும் ஹதீஸும் தெளிவுபடுத்துகிறது.

நபித் தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த தாபியீன்களும் வட்டி வாங்குபர் அல்லாஹ்வுடன் போர் பிரகடணம் செய்யும் அளவிற்கு மிக பயங்கரமான செயலாக கூறப்பட்டிருப்பதனால், அதை தவிர்க்கும் விதமாக  வட்டி வாங்குபவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் மன்னிப்பு கேட்க மறுக்கும் போது வட்டி வாங்குபவர்களை கொலை செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். குர்ஆனிலும் நபி மொழிகளிலும் வட்டி தடை செய்யப்பட்டிருப்பது இஸ்லாத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒருவர் இதை அறிந்தும் வட்டி வாங்குவதை அல்லது கொடுப்பதை ஆகுமானதாக கருதினால், அறிஞர்களின் யோகோபித்த  கூற்றுப்படி, இஸ்லாத்தை விட்டு விலகியவராக கருதப்படுவார்.  ( الكبائر : تحقيق مشهور بن حسن آل سلمان ١٤٤) 

எனவே வட்டி என்னும் மிக மிக மோசமான கொடிய பாவத்தை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக! 

உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம் 4/31

0
Would love your thoughts, please comment.x
()
x