وَمَنْ يَّقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهٗ جَهَـنَّمُ خَالِدًا فِيْهَا وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِ وَلَعَنَهٗ وَاَعَدَّ لَهٗ عَذَابًا عَظِيْمًا‏

யார் இறை நம்பிக்கை கொண்ட ஒரு ஆத்மாவை வேண்டுமென்றே கொலை செய்கிறாரோ அவரது தண்டனை நரகத்தில் நெடுங்காலம் இருப்பதாகும்.

    குர்ஆனில் கூறப்பட்டுள்ள தண்டனைகள்:

அல்லாஹ் கூறுகிறான்: “யார் இறை நம்பிக்கை கொண்ட ஒரு ஆத்மாவை வேண்டுமென்றே கொலை செய்கிறாரோ அவரது தண்டனை நரகத்தில் நெடுங்காலம் இருப்பதாகும். இன்னும் அவரின் மீது அல்லாஹ் கோபம் கொள்வான். இன்னும் அவனை சபிப்பான். இன்னும் அவருக்கு பயங்கரமான வேதனையை தயார் செய்து வைத்திருக்கிறான்” (அல்குர்ஆன்: 4:93).

இந்த வசனத்தில், முஸ்லிம் ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்பவருக்கு ஐந்து தண்டனைகளை அல்லாஹ் விதிக்கிறான்:

  1. நரகத்தில் தல்லப்படுவான்
  2. அதில் நெடுங்காலம் தண்டிக்கப்படுவான்
  3. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாவான்
  4. அல்லாஹ்வின் சாபத்தை பெறுவான்
  5. பயங்கரமான வேதனைகளை அனுபவிப்பான்

இது போன்ற பல வசனங்கள் குர்ஆனில் காணப்படுகின்றன. (المختصر في التفسير )

நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள தண்டனைகள்:

நபி (ஸல்) அவர்கள் பெரும் பாவங்களை பற்றி கூறும்போது, அதில் ஒன்று  ஒரு ஆத்மாவை அநியாயமாக கொலை செய்வதையும் குறிப்பிட்டார்கள்.

நபியவர்கள் கூறினார்கள் ஒரு முஃமினை கொலை செய்வது அல்லாஹ்விடத்தில் முழு உலகம் அழிவதை விடவும் மிகக் கடுமையானது
நஸயீ 3990

ஒரு ஹதீஸில், “இரு முஸ்லீம்கள் சண்டையிட்டுக் கொண்டு ஒருவர் மற்றவரை கொலை செய்தால், இருவரும் நரகத்தில் செல்வார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது, “கொலை செய்தவர் நரகத்தில் நுழைவார் என்பது சரி. ஆனால் கொலை செய்யப்பட்டவர் என்ன தவறு செய்தார்?” என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கொலை செய்யப்பட்டவர், கொலை செய்தவரை கொலை செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டதால்” என்று பதிலளித்தார்கள்.

கொலை செய்யும் முறைகள் மற்றும் தண்டனைகள்:

ஒருவர் ஒரு ஆத்மாவை கொலை செய்வதற்கு பல்வேறு  இருக்கலாம்.

  • வாளால் வெட்டிக் கொல்லுதல்
  • துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுதல்
  • பெரும் கல்லால் கொல்லுதல்
  • விஷம் வைத்துக் கொல்லுதல்
  • சூனியம் செய்து கொல்லுதல்

இது போன்ற மற்ற கொலை செய்யும் கருவிகளால் கொலை செய்பவர்களும்  நெடுங்காலம் நரகத்தில் தண்டிக்கப்படுவார்கள்.  (تفسير عثيمين سورة النساء ٢/ ٨٢)

நபி (ஸல்) கூறினார்கள் ஒருவர் முஸ்லிம்களுடன் உடன்படிக்கை செய்துக் கொண்ட யூதனையோ கிறிஸ்துவரையோ கொலை செய்தால் அவர் சுவனத்தின் நறுமணத்தைக் கூட நுகர மாட்டார் என்றார்கள் சுவனத்தின் நறுமணமும் 40 வருட தொலைதூரத்திலே அது கமழும்      ( திர்மிதி 1403 )

இது போன்று பல விதமான அறிவிப்புகளில் ஒரு முஸ்லிமை அல்லது முஸ்லிம்களிடம் உடன்படிக்கை செய்தவரை கொலை செய்தல் பெரும் பாவமாக வந்துள்ளது. முஸ்லிம் என்பவர் அல்லாஹ்விடம் மிக உயர்ந்த கண்ணியத்தை பெற்றவர் எனவே அவருக்கு எவ்விதத்திலும் தீங்கு செய்வதை விட்டும் நாம் தவிர்ந்திருப்போமாக!

உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம் 4/31

0
Would love your thoughts, please comment.x
()
x