وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعۡبُدُوٓاْ إِلَّآ إِيَّاهُ وَبِٱلۡوَٰلِدَيۡنِ إِحۡسَٰنًاۚ

பெற்றோரிடம் உபகாரமாக நடந்துக் கொள்ளுங்கள் என்றும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ முதுமையடைந்த நிலையில் உன்னிடம் இருக்க அவர்களை `ச்சீ` என்றும் சொல்ல வேண்டாம்

பெற்றோறை கண்ணியம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துவதோடு  பெற்றோருக்கு மாறு செய்வதை இஸ்லாம் பெரும் பாவமாக கருதுகிறது.

அல்லாஹ் குர்ஆனில் “உமது இரட்சகன் ஏவுகிறான்: அவனைத் தவிர நீங்கள் வேறு யாரையும் வணங்க வேண்டாம் இன்னும் பெற்றோரிடம் உபகாரமாக நடந்துக் கொள்ளுங்கள் என்றும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ முதுமையடைந்த நிலையில் உன்னிடம் இருக்க அவர்களை `ச்சீ` என்றும் சொல்ல வேண்டாம் அவர்களை வீட்டை விட்டு விரட்டவும் வேண்டாம் இன்னும் அவர்களுக்கு கனிவான வார்த்தைகளைக் கூறுங்கள் இன்னும் அவ்விருவர் மீது இரக்கம் காட்டி பணிவாக நடந்து கொள்ளுங்கள் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் எங்கள் இரட்சகா அவர்கள் எங்களை சிறுபிராயத்தில் இரக்கம் காட்டியது போல் அவ்விருவர் மீது நீ இரக்கம் காட்டுவாயாக”.
நபி அவர்கள் கேட்டார்கள், “உங்களுக்கு பெரும் பாவங்களை பற்றி கூறவா ? என்று கேட்டுவிட்டு  அதில் பெற்றோருக்கு மாறு செய்வதையும் குறிப்பிட்டார்கள்”.( متفق عليه )

பிறிதோர் அறிவிப்பில்  அல்லாஹ்வின் திருப்தி தந்தையின் திருப்தியிலும்  அல்லாஹ்வின் அதிருப்தி தந்தையின்  அதிருப்தியிலும்  இருக்கிறது. என்றும் கூறியுள்ளார்கள். (الترمذي ١٨٩٩)

மற்றறோர் அறிவிப்பில், தந்தை என்பவர் சுவனத்தின் வாசல்களில் தலைசிறந்த வாசலாகும் நீ நாடினால் அதை பாதுகாத்து அதன் வழியாக சொர்க்கத்தில் செல் நீ விரும்பினால் அதை பாழாக்கி விடு. (الترمذي ١٩٠١)

 இதுபோன்ற இன்னும் ஏராளமான அறிவிப்புகள் வந்துள்ளன.

ஒரு மனிதர் நபிகள் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் ஐவேலை தொழுகிறேன், ரமலான் மாதம் நோன்பு நோற்கிறேன், ஜகாத் கொடுக்கிறேன், ஹஜ்ஜும் செய்கிறேன். எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார். நபிகள் (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், “இந்த நல்ல காரியங்களை யார் செய்கிறாரோ, நபிமார்களோடும் உண்மையாளர்களோடும் உயிர் தியாகிகளோடும் சேர்ந்து சுவனத்தில் இருப்பார்,ஆனால், “பெற்றோர்களுக்கு மாறு செய்தாலே தவிர,” என்று பதிலளித்தார்கள்.”அதாவது, பெற்றோர்களை மதிக்காமல், அவர்களுக்கு மாறு செய்தால், இந்த சிறப்பான பலனை அந்த மனிதர் பெற முடியாது என்று நபிகள் (ஸல்) அவர்கள் விளக்கினார்கள்.  بخاري في التاريخ الكبير ٦/٣٠٨

அல்லாஹ் மூஸா (அலை) விடம் கூறினான் உனது பெற்றோரை கண்ணியப்படுத்துவீராக எவர் தனது பெற்றோரை கண்ணியப்படுத்துகிறாரோ அவரது வயதை அதிகப்படுத்துவதுடன் அவருக்கு உபகாரமாக நடக்கும் பிள்ளைகளை வழங்குகிவேன் அதேசமயம் பெற்றோருக்கு மாறு செய்பருக்கு அவரது வயதை குறைப்பதுடன் மாறு செய்யும் பிள்ளைகளை வழங்கி விடுவேன். ( الترغيب والتهيب ١/٢١١ -رقم ٤٥٥ – الأصبهاني )

கஅஃப் கூறுகிறார்கள் எனது உயிர் எவன் வசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக தனது பெற்றோருக்கு மாறு செய்பவருக்கு தண்டனையாக அல்லாஹ் அவனது வாழ்வை விரைவிலே முடித்து விடுகிறான் அதேசமயம் பெற்றோருக்கு உபகாரமாக நடப்பவரின் வாழ்வை நீட்டிப்பதுடன் அவருக்கு பல நலவுகளையும் வழங்குகிறான்.( أبو نعيم الأصبهاني في الحلية ٦/٢٢ )

அபூபக்கர் இப்னு அபீ மரியம் (ரஹ்) கூறுகிறார்கள், நான் தவ்ராத்தை படித்த சமயம் அதில் பின் வரும் வாசகம் இடம் பெற்றிருந்தது : தந்தையை அடிப்பவன் கொலை செய்யப்பட வேண்டும்.   ( مراسيل أبي داود ٤٨٥ )

எனவே நாம் பெற்றோருக்கு உபகாரமாக நடந்துக் கொள்ளும் நல்லவர்களாக நாம் வாழ்வோமாக!

உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம் 4/31

0
Would love your thoughts, please comment.x
()
x