பாட்டனாரின் மறைவு மற்றும் புதிய பாதுகாவலர்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபின் மறைவிற்குப் பிறகு, நபியை பாதுகாக்கும் பொறுப்பு நபியின் பெரிய தந்தை அபூதாலிபிற்கு வந்தது. அபூதாலிப் நபி (ஸல்) அவர்களை தனது சொந்தக் குழந்தைகளை விட அதிகமாக நேசித்து பாதுகாத்தார்.

தந்தையிடமிருந்து அடைக்கல பொருளாக பெற்ற தம் சகோதரர் மகனை அபுதாலிப் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு வளர்க்கத் தொடங்கினார் எங்கு சென்றாலும் முஹம்மதை உடன் அழைத்தே செல்வார் இருக்கும்போது தமக்கு அருகிலேயே அமரச் செய்வார் தான் உறங்கும் போதும் தமக்கருகாமையிலேயே அவரையும் உறங்க வைப்பார் ஒன்றாகவே உண்ணுவார் அவர் இன்றி உண்ண மாட்டார் சிறந்த உணவு வகைகளை அவருக்கும் கொடுப்பார் தன் சொந்த மகன்களை விட முஹம்மதை முக்கியத்துவம் கொடுத்து  கவனித்துக் கொள்வார் இவருக்கு சமமாகவே மனைவி ஃபாத்திமாவும் நபிகளாரை பாசத்துடனும் அன்புடனும் வளர்த்து வந்தார் அப்துல் முத்தலிபின்  மகன்களில் அபூதாலிப் மட்டும் வாழ்க்கைத் தரத்தால் மிகவும்  ஏழ்மையானவர் அவருக்குக் குழந்தைகள் பலர் இருக்கின்றனர் தமது வளர்ப்புத் தந்தையின் ஏழ்மை நிலையை பிஞ்சு பருவத்திலேயே உணர்ந்த சிறுவர் முஹம்மத் அவருக்கு இருந்த ஒரே செல்வமான ஆட்டு மந்தையை மேய்ப்பதில் உதவியாக இருந்தார்  (நபி வரலாறு 87)

அபூதாலிப் வியாபார நிமித்தமாக மற்ற தேசங்களுக்குப் பயணம் செய்யும்போது, மக்காவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக்  கவனித்துக்கொள்ள யாரும் இல்லாததால் நபி (ஸல்) அவர்களையும் தன்னுடனே அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. (الفصول في السيرة ٩٣)

புஹைரா துறவியின் சந்திப்பு:

சிரியாவிற்குச் சென்ற ஒரு பயணத்தில், நபி (ஸல்) அவர்களை புஹைரா என்ற துறவி சந்தித்த போது அவர்களிடம் பல அற்புதங்களைக் கண்டார். யூதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டால் கொன்றுவிடுவார்கள் என்று அபூ தாலிபிடம் எச்சரித்தார் புஹைரா . இதனால், அபூதாலிப் நபியர்களை  சில வாலிபர்களுடன்  மக்காவிற்கு அனுப்பிவைத்தார். (الفصول في السيرة ٩٣)  

படிப்பினை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பதின்ம பருவம், அவர்களின் பாசமுள்ள பெரிய தந்தையின்  பாதுகாப்பில், வியாபார பயணங்கள் மற்றும் அற்புத நிகழ்வுகளால் நிறைந்திருந்தது.  துறவி புஹைராவின் சந்திப்பு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிர்காலத்தை பற்றிய சுபச் செய்தியும்  எதிகளைப் பற்றிய செய்தியும் கிடைத்தது.  (السيرة النبوية لأبي الحسن الندوي ١٦٤)

0
Would love your thoughts, please comment.x
()
x