عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ) صحيح البخاري ‘

பொதுவாக அழுகை என்பது நான்கு வகைகளாகும்.

1 கவலையினால் வரும் அழுகை: இது நபி யஃகூப் (அலை) தனது மகன் யூசுஃப் (அலை) காணாமல் போனதால் அழுததை போன்றது.

2 கோழைத்தனம் காரணமாக ஏற்படும் அழுகை: சோதனை ஏற்படும் போது விதியை வெறுத்து  கைசேதப்பட்டு  அழும் செயல். இது இஸ்லாத்தில்  கண்டிக்கத்தக்க செயலாகும்.

3 மகிழ்ச்சியில் ஏற்படும் அழுகை:  நபியவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அன்சாரிகள் வரவேற்ற சமயம் அழுததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இது மகிழ்ச்சியினால் ஏற்தட்ட அழுகையாகும் . மகிழ்ச்சியின் போதும் அழுகை வரும் என்பதை அதுவரை  நான் அறியாமலிருந்தேன் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

4 அச்சத்தினால் ஏற்படும் அழுகை: மனிதனுக்கு நிகழவிருக்கும் ஏதேனும் ஒரு ஆபத்தை எண்ணும் போது ஏற்படும் அழுகை. உதாரணமாக: நபியவர்களை ஃபஜ்ர் தொழுகைக்காக பிலால் (ரலி) அவர்கள்  அழைத்த சமயம், “இப்போது இறங்கிய குர்ஆன் வசனங்களை சிந்திக்காமல் ஓதுபவருக்கு நஷ்டம் தான் ” என்று நபியவர்கள் கூறினார்கள். அதற்கு என்ன வசனம் என்று பிலால் (ரலி) கேட்டபோது, அல்லாஹ்வின் படைப்புகள் மற்றும் நரக வேதனைப் பற்றி கூறும் அல்குர்ஆன் 3:190 முதல் 191 வரையிலான வசனங்கள் என்று கூறி ஓதும் சமயம் அழ ஆரம்பித்தார். இது பயத்தினால் ஏற்பட்ட  அழுகையாகும்.

  1.  كتاب دروس الشيخ عائض القرني ٤/٣٠٢

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தால் ஏற்படும் அழுகை என்பது மிக உயர்ந்த பண்பாகும். இது நல்லடியார்களின் சிறந்த குணங்களில் ஒன்றாக இருப்பதினால்  இதற்கு மறுமையில் மகத்தான நன்மைகள் கிடைக்கும். மேலும் இவ்வாறு அழுவதன் மூலம் ஈமானிய உணர்வு மேலோங்கி மனம் தூய்மையடைகிறது. இந்த அழுகை முகஸ்துதிக்காகவும், பாராட்டுக்காவும்   இல்லாமல், அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த அழுகை அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றி நன்கு புரிந்தவர்களுக்கே உண்டாகும். அல்லாஹ்வின் கன்னியம், உயர்வு, மேன்மை, கம்பீரம், அடக்கியாலும் அதிகாரம், நினைப்பவற்றை நடைமுறைபடுத்தும் பரந்த  அவனது ஆற்றல், போன்ற அவனது எண்ணற்ற பண்புகளை உணரும் போது, அவனது அச்சம் மேலோங்கி இத்தகைய அழுகை ஏற்படுகிறது. ஒருவர் அல்லாஹ்வை  ஆழமாகப் புரிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு  தனது அழுகையை உணர்வார் என்பது நிச்சயம். குர்ஆன் மற்றும் நபிமொழிகளின்படி, அல்லாஹ்வை மிக ஆழமாக  அறிந்தவர்கள் நபிமார்கள் ஆவார்கள். நபியவர்கள் (ஸல்) அனைத்து சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை, தான் சந்திப்பதைப் பற்றியும், தனது சமுதாந்த்தின் நிலையை எண்ணியும் கவலையால் அழுதுள்ளாரகள். அவர்களது அழுகை, அல்லாஹ்வைப் பற்றிய அவர்களது ஆழ்ந்த அச்சத்திற்கு சான்றாகும்.

البكاء في الكتاب والسنة ١٨-٢١

ஒரு முஃமினுக்கு ஏற்படக்கூடிய அழுகை என்பது மூன்று வகைகள்.

1 மறுமை வாழ்வின் ஆசையினால் வரும் அழுகை: 

இந்த வகை அழுகையில், சொர்க்கத்தின் அழகு, அதில் உள்ள எண்ணற்ற இன்பங்கள், உயர்ந்த மாளிகைகள், சுவையான உணவுகள் மற்றும் பல்வேறு சுவைகளில் தயாரிக்கப்பட்ட பானங்களை நினைத்து, மறுமை வாழ்வின் மீது ஒரு அதீதஆசையினால் அழுகிறார்.

2 அல்லாஹ்வின் அழகிய பண்புகளை எண்ணுவதினால் வரும் அழுகை

 அதாவது அல்லாஹ்வின் உபகாரம் செய்யும் பண்புகளான அருளாளன், கொடையாளன், மன்னிப்பவன், இரக்கமுள்ளவன், கண்ணியமானவன் போன்றவற்றின் காரணமாக அன்பை உணர்கிறார். அல்லாஹ் தனக்கு செய்த எண்ணற்ற உதவிகள், அருட்கொடைகள் மற்றும் அற்புதங்களை நினைத்து, அடியானுடைய உள்ளத்தில் அல்லாஹ்வின் மீது  கொண்டிருக்கும் இயற்கையான அன்பினால் ஏற்படும் அழுகை.

3 அல்லாஹ்வின் உயர்வான பண்புகளை அறிந்ததினால் வரும் அழுகை.

இந்த வகை அழுகை அல்லாஹ்வின் கன்னியம், உயர்வு, மேன்மை, கம்பீரம், அவனது அடக்கியாலும் அதிகாரம், நினைப்பவற்றை நடைமுறைபடுத்தும் பரந்த  ஆற்றல், போன்ற அவனது எண்ணற்ற உயர்வான பண்புகளை அறியும்  போது, அவனது அச்சம் மேலோங்கும் பொழுது இத்தகைய அழுகை ஏற்படுகிறது.

அடியான் தன்னுடைய உள்ளத்தில் அவனுக்காக ஒரு தனித்துவமான அன்பை உணர்கிறார். இந்த உண்மையான அன்பென்பது ஒரு மனிதனை அவன் நேசிப்பதை அடைவதையே  தன்னுடைய வாழ்வின் இலக்காக மாற்றிவிடுகிறது.  كتاب موسوعة فقه القلوب٢/٧٧٠-٧٧٢

எனவே நாம் எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வை அவனது அழகிய பன்புகளை  நேசிக்கவும், அவனது உயர்வான பண்புகளை அறிந்து அவனை அடைவதையே நோக்கமாகக் கொண்டும் வாழ்வோமாக !

0
Would love your thoughts, please comment.x
()
x