يَسْــٴَــلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِؕ قُلْ فِيْهِمَآ اِثْمٌ کَبِيْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ
(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன.
இந்த வசனத்தில் இஸ்லாத்திற்கு முந்தைய காலத்தில் மதுவை குடிப்பதற்கும் வியாபாரம் செய்து சில பயன்களையும் அடைந்து வந்தனர் இஸ்லாத்தை ஏற்றப் பின்னரும் அவ்வாரு செய்வதில் தவறேதும் உள்ளதா ? என்று நபியிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு முதல் கட்டமான பதில் இவ்வாறு இறங்கியது.
மது அருந்தும் போது அருந்துபவனுக்கு இன்பமாகவும் அறிவிற்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அதை வியாபரம் செய்வதினால் பொருளாதார லாபமும் பெறுவதாக தெரியலாம் எனினும் அதிலுள்ள ஒரு பயனிலும் ஒரு கேடே மிகப் பெரியதாகும் அதன் பாதிப்பும் பயங்கரமானதாகும் அப்படியானால் பல பயன்கள் இருப்பதாக எண்ணினால் எந்த அளவு பயங்கரங்கள் அதிகமிருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காண்பிக்கிறான்.
அரபு வாழ்க்கையில் மதுபானம் முக்கிய பங்கு வகித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்களின் சமூக நிகழ்வுகளில் விருந்தோம்பலுக்கும், திருமணங்கள், விழாக்கள், கேளிக்கைக்கும், மகிழ்சி மற்றும் துக்கம் போன்ற எல்லா நிகழ்வுகளிலும் மதுபானம் பரிமாறப்பட்டது.
அரபு கவிஞர்களும் எழுத்தாளர்களும் தங்கள் கவிதைகளில், இலக்கியங்களில், மற்றும் வரலாறு நூல்களிலும் மதுபானத்தை பற்றி அடிக்கடி எழுதினார்கள். காதல், மகிழ்ச்சி, துக்கம் போன்ற பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்த மதுபானம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது.
மதுபானத்திற்கு அரபிகள் அதைக் குடிக்கத் தூண்டும் வகையில் அழகிய பொருள் தரும் பல்வேறு பெயர்களை பயன்படுத்தினர். இது அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதை காட்டுகிறது. ( அஸ்ஸீரதுன் நபவிய்யா அபுல் ஹசன் அலீ அந்நதவீ – 147 )
அரபுகளிடத்தில் மதுபானம் என்பது பழத்தில் சதையோடு ஒட்டி் கொண்டிருக்கும் தோல் போல அவர்களது வாழ்வில் மிகவும் ஊடுருவி இருந்தது இந்த போதையின் தாக்கம் மிகப் பெரும் இழப்பிற்கு காரணமாகவும் அமைந்திருக்கின்றது பமதுவிற்காகவே தனது கண்ணியத்தையும் கௌரவத்தையும் இழந்த பல சம்பவங்கள் வரலாறு நூல்களில் காணக் கிடைக்கின்றன அதில் ஒன்று மக்கமாநகரின் காபா என்னும் புனித ஆலயத்தின் சாவி ஒரு கோத்திரத்தாரின் பொறுப்பில் இருந்து வந்தது அந்த கோத்திரத்தின் ஒருவர் மற்ற கோத்திரவரோடு மது அருந்திய சமயம் மதுவில் ருசியைக் கூட்டுவதற்காக அதில் கலக்கப்படும் ஒரு தொவயலின் மேல் உள்ள ஆவளினால் அதை வைத்திருபவரிடம் தனக்கு அந்த தொவயலைக் கேட்க அதன் உரிமையாளர் தனக்கு கஃபாவின் சஅவியை ஒப்படைத்தால் தான் தருவதாக கூறினார் இதன் படி குடிபோதையில் இருந்தவர் தனது கோத்திரத்திற்கு கண்ணியத்தை தந்த புனித காபாவின் சாவியை அந்த தோலுக்கு பகரமாக விற்றுவிட்டார் பிறகு அதனை நினைத்து அளவில்லா கைசேதப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது (ஷிஃபாவுல் ஃகராம்)
அந்த அளவிற்கு மது அவர்களின் வாழ்வில் இடம் பிடித்திருந்தது. நபி(ஸல்) அவர்கள் தமது அழைப்புப் பணியின் ஆரம்ப கட்டத்தில் மதுவைத் தடை செய்யவில்லை. ஆனால், மதுவின் தீமைகளை உணர்ந்த சிலர் மதுபானம் தடை செய்யப்பட்டால் நல்லது என்று நினைத்திருந்தனர் இந்த நிலையில் சிலர் தாங்களாகவே வந்து மது பற்றிக் கேட்டார்கள். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது.
‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவு படுத்துகின்றான்.’ (2:219)
இதில் மது, சூது இரண்டிலும் நன்மைகள் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. விற்பனை மூலம் பொருளாதார நலனை ஒரு கூட்டம் பெறலாம். ஆனால், மது மற்றும் சூது இரண்டிலும் ஏற்படும் பாதிப்புக்கள் அதில் ஏற்படும் நன்மைகளை விடப் பெரியது என்று கூறி மது மீது வெறுப்பு ஏற்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக,
‘நீங்கள் போதையுடன் இருக்கும் போது தொழுகையை நெருங்காதீர்கள்’ (4:43)
என்ற வசனம் அருளப்பட்டது. தொழுகை நேரத்தில் மது அருந்த வேண்டாம் என்ற தடை வந்ததில் ஆழமான நுணுக்கம் இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர் உதாரணமாக : ஒரு முஸ்லிம் தினமும் ஐவேளை தொழ வேண்டும். தொழும் போது போதையுடன் இருக்கக் கூடாது என்றால் தொழுகைக்கு சில மணி நேரத்திற்கு முன்னரே குடிப்பதை அவசியம் நிறுத்தியாக வேண்டும். இப்படிப் பார்க்கும் போது அதிகாலை சுபஹ் தொழுகைக்கும், பகல் லுஹர் தொழுகைக்குமிடையில் அவர்கள் குடிப்பதற்கு ஓரளவு நேரம் இருந்தது. இந்நேரம் பணிகளில் ஈடுபடும் நேரமாகும். இஷா தொழுகைக்குப் பின்னர் குடிப்பதற்கு வாய்ப்பிருந்தது. இந்த சட்டத்தைப் போட்டு மதுப் பிரியர்கள் மதுவை விட்டும் தூரமாக்கப் பட்டார்கள். ( شرح عمدة الأحكام- ابن جبرين ٧٠/٤ )
அடுத்த கட்டமாக பின்வரும் வசனம் அருளப்பட்டது.
‘நம்பிக்கை கொண்டோரே! மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டவைகளும், குறிபார்க்கும் அம்புகளும் ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலிலுள்ளவைகளாகும். எனவே, நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
‘ஷைத்தான் விரும்புவதெல்லாம் மது, சூதாட்டம் என்பவற்றின் மூலம், உங்களுக்கிடையில் பகைமையையும், குரோதத்தையும் ஏற்படுத்தவும், உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், மற்றும் தொழுகையை விட்டும் தடுத்து விடவுமேயாகும். எனவே, நீங்கள் விலகிக்கொள்வீர்களா?’ (5:90-91)
மது, சூது மூலம் கோபமும் குரோதமும் ஏற்படுகிறது. இறை நினைவையும், தொழுகையையும் விட்டும் ஷைத்தான் உங்களைத் தூரமாக்குகின்றான். எனவே, இது கூடாது தடை செய்யப்பட்டது. நீங்கள் விலகிக் கொள்வீர்களா? என்ற வசனம் அருளப்பட்டதும் விலகிக் கொண்டோம் விலகிக் கொண்டோம் என முஸ்லிம்கள் மதுவை முழுமையாக ஒழித்தனர். இந்த கட்டளைக் கேள்விபட்டப் பின் குடித்துக் கொண்டிருந்தவர்களும் வீட்டில் வைத்திருந்தவர்களும் வியாபாரத்திற்காக வாங்கியவர்களும் கீழை ஊற்றிவிட்டனர். ( இப்னு கஸீர் )