يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلا أُولُو الألْبَابِ

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இந்த) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, நிச்சயமாக அவர் கணக்கில்லாத நன்மைகள் கொடுக்கப்பட்டவராக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோரைத் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. (அல்குர்ஆன் : 2:269)

அறிஞர்கள் கூறுகிறார்கள்: 

இதில் கூறப்பட்டுள்ள (ஹிக்மத்) என்பது குர்ஆன், ஹதீஸ், மார்க்க விளக்கம், கல்வியறிவு,  இறையச்சம் ஆகியவற்றைக் குறிக்கும். 

 இறையச்சம் தான் ஒவ்வொரு ஞானத்திற்கும் தலையானது.

 நபி (ஸல்) அவர்கள், “ஞானத்தின் தலை இறையச்சமாகும்” என்று கூறினார்கள்.

‘ஹிக்மத்’ என்பது நபிவழியை (சுன்னத்) குறிக்கும் என அபூமாலிக் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “ஹிக்மத் என்பது இறை மார்க்கம் தொடர்பான விளக்கத்தைக் குறிக்கும் என்றே எனது உள்ளத்தில் தோன்றுகிறது. இது  உள்ளங்களில் நுழைந்துவிட்டால் அல்லாஹ்வின் அன்பும் அருளும் ஏற்பட்டு விடும் .எனவே தான் இந்த மார்க்க அறிவை, தான் நாடியோருக்கு மட்டுமே அல்லாஹ் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளான்

அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் தனித்திறமைகளை வழங்குகிறான். சிலருக்கு உலக விஷயங்களில் சிறந்து விளங்கும் திறமை, சிலகுக்கு மார்க்க விஷயங்களில் சிறந்து விளங்கும் திறமை வழங்கப்படுகிறது. ஒருவர் உலக விஷயங்களில் சிறந்த அறிவாளியாக இருக்கலாம், ஆனால் மார்க்க விஷயங்களில் குறைந்த அறிவு பெற்றிருப்பார். மற்றொருவர் உலக விஷயங்களில் குறைந்த அறிவு பெற்றிருந்தாலும், மார்க்க விஷயங்களில் சிறந்த அறிவு பெற்றிருப்பார். இவ்விருவரில் மார்க்கக் கல்வி கொடுக்கப்பட்டவரே அல்லாஹ்விடம் சிறப்பு பெற்றவராவார் .

இதன் காரணம்

உலக விஷயங்களைப் பற்றிய அறிவு (பொது அறிவு) என்பது கற்பிக்கப் படுவதிலும்,  புத்தகங்கள் படிப்பதிலும், அனுபவங்கள் மூலமும் பெறப்படும் இதை எல்லோராலும் அடைய முடியும். ஆனால் மார்க்க அறிவு என்பது அல்லாஹ்வின் கட்டளைகள், நபிமொழிகள் மற்றும் இஸ்லாமிய நெறிமுறைகள் பற்றிய அறிவு.  இது குர்ஆன், ஹதீஸ் மற்றும் மார்க்க அறிஞர்களின் விளக்கங்கள் ,போதனைகள் மூலம் பெறப்படும்  மார்க்க அறிவு இது அல்லாஹ்வினால் வழங்கப்படும்  சிறப்பான வெகுமதியாகும், அது அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை  தான் விரும்பியவருக்கே வழங்குகிறான்.

மேலும் இந்த வசனத்தில் அல்லாஹ் யாருக்கு ஞானத்தை வழங்குகிறானோ அவர் அதிகமான நலவுகள் கொடுக்கப்பட்டு விடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளான் இதன் மூலம் ஒருவருக்கு அல்லாஹ்வின் நாட்டப்படி  ஞானம் கொடுக்கப்பட்டு விட்டாளும்  முழுமையான ஞானத்தை  அவர் பெற்றுவிட முடியாது ஏனெனில் ஞானம் கொடுக்கப்பட்ட அவருக்கு மறதி ஏற்படலாம் அல்லது அதை அவர் தவறாக விளங்கிக் கொள்வார் அல்லது தனது தவறான அணுகுமுறையின் மூலமும் பல தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவே எல்லா சமயங்களிலும் ஞானம் வழங்கப்பட்ட நபரும் கூட  அல்லாஹ்விடம் நேர்வழியையும் சரியான ஞானத்தையும் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் ஏனெனில் மனிதன்  ஒரு செய்தியை நல்லதென எண்ணி பேசி விடுவான் பிறகு, தான் பேசியது தவறு என்பதை உணர்ந்து கொள்கிறான் அதனால் ஒவ்வொரு மனிதனும் அல்லாஹ்விடம் எல்லா சமயத்திலும் நலவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் (இப்னு கஸீர் – இப்னு உஸைமீன்)

(எனவே இவ்விரு அறிவுகளில் அல்லாஹ் விரும்பும் வெகுமதியான மார்க்கக் கல்வியை பெறவும் அதை முறையாக  விளங்கவும்  அல்லாஹ்விடம் கேட்போமாக) 

0
Would love your thoughts, please comment.x
()
x