நிராகரிப்பு

அல்லாஹ் மற்றும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களால் கொண்டுவரப்பட்ட போதனைகளை மறுப்பதே நிராகரிப்பு (குஃப்ர்) ஆகும். இது இணைவைப்பை விட மோசமான குற்றமாக கருதப்படுகிறது.

நிராகரிப்பின் வகைகள்

இஸ்லாத்தில் நிராகரிப்பு இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகிறது:

1 பெரிய நிராகரிப்பு: இது மார்க்கத்தில் கூறப்பட்ட அனைத்தையும் அல்லது ஏதேனும் ஒன்றை மறுப்பது. இது புறக்கணித்தல், பொய்ப்படுத்துதல், பெறுமையடித்தல்,சந்தேகம், அல்லது மறைத்து வைத்தல் போன்ற வழிகளில் ஏற்படும்.

நிராகரிப்பாளர்கள் நரகில் நிரந்தர வேதனைகளை அனுபவிப்பார்கள்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் வேற்றுமையை ஏற்படுத்த விரும்புகின்றார்களோ, மேலும் நாங்கள் இறைத்தூதர்களில் சிலரை ஏற்றுக்கொள்வோம்; சிலரை ஏற்கமாட்டோம் என்று கூறுகின்றார்களோ, மேலும், இறைநம்பிக்கைக்கும் நிராகரிப்புக்கும் இடைப்பட்ட ஒரு வழியினை அமைத்திட விரும்புகின்றார்களோ.

அவர்கள்தாம் உண்மையில் அப்பட்டமான நிராகரிப்போர் ஆவர். இந்நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம்.

நபியவக்கள் கூறியுள்ளார்கள்

"யார் குறி சொல்பவரிடம் வந்து அவர் கூறியதை உண்மைப்படுத்துகிறாரோ அவர் முஹம்மதின் மீது இறக்கப்பட்டதை மறுத்துவிட்டார்" (திர்மிதி)

“யார் ஒரு ஜோதிடனை நம்பி, அவன் கூறியதை உண்மை என்று நம்பினாரோ, அவர் நமது (இஸ்லாமிய) மார்க்கத்தின் எந்த விஷயத்தையும் நம்பவில்லை” (அஹ்மத்)

போன்ற அறிவிப்புகள் வந்துள்ளன.

இவைகளை பெரிய நிராகரிப்பு என்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர் இவ்வாறான சிந்தனையில் இருப்பவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிடுவான் மேலிம்  மறுமையில் நிரந்தரமாக நரகில் தங்குவான்.

சிறிய நிராகரிப்பு: இது நபிமொழிகளில் சில குணங்களை, செயல்களை, அல்லது வார்த்தைகளை இறைமறுப்பு என்று கூறப்பட்டிருக்கும்.

உதாரணமாக கணவன் செய்த உபகாரத்தை மறுப்பது அல்லாஹ் அல்லாதவர்கள் மீது வாயளவில் சத்தியம் செய்தல் ஒரு முஃமினானவரை கொலை செய்தல் இது  போன்றவைகள் இதில் சேரும்

இந்த இரண்டாம் வகை செயல்பாடுகள்  ஒருவரிடம்  வெளிபடுவதினால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட மாட்டார் எனினும் அவரது ஈமானில் குறைவை ஏற்படுத்தும் இவரிடம் நிராகரிப்பவர்களின் செயல்பாடுகள் வெளிப்படுவதாக கருதப்படும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். (أصول الإيمان – نخبة من العلماء ٦٥)

நிராகரிப்பு என்பது மிகப்பெரிய குற்றமாகும். அல்லாஹ் நம் அனைவரையும் இவ்வுரு நிராகரிப்பிலிருந்து காப்பாற்றுவானாக.

உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம் 4/31

0
Would love your thoughts, please comment.x
()
x