اِنَّمَا يَخْشَى اللّٰهَ مِنْ عِبَادِهِ الْعُلَمٰٓؤُا ؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ غَفُوْرٌ‏

நிச்சயமாக அல்லாஹ்வை அவனுடைய அடியார்களில் பயப்படுவதெல்லாம் (அவனைப்பற்றி அறிந்த) கல்விமான்கள் தாம். (அல்குர்ஆன் : 35:28)

அல்குர்ஆன் விரிவுரையாளரகள்  கூறுகிறார்கள் :

இந்த வசனத்தில் கல்வியாளரின் அடையாளம் பற்றிக் குறிப்பிடப் பட்டிள்ளது அதாவது ஒருவரிடம் கல்வி இருப்பதன் அடையாளமே அவரின் உள்ளத்தில்  அல்லாஹ்வின் அச்சம் மேலோங்கி இருப்பதுதான்  அச்சமில்லையெனில்  சாத்தியமில்லை. ஒருவரிடம் அல்லாஹ்வைப் பற்றிய அறிவில்லாமல் அச்சமிருக்கிறது என்று சொல்வதும் , அல்லாஹ்வின் அச்சமற்று இருப்பவரை அல்லாஹ்வைப் பற்றிய  அறிவைப் பெற்றவர் என்று சொல்வதும் தவறான இரு கருத்துக்களாகும். ஏனெனில் ஒருவர் ஏதேனும் ஒன்றைப் பற்றி அஞ்ச வேண்டுமெனில் அதன் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றி அறிந்தவரால் மட்டுமே அது உண்டாகும். உதா: நெருப்பு, சிங்கம், தனது எதிரியைக் கண்டு அஞ்சுபவர் அவர்களின் மூலம் தனக்கு ஏற்படும் ஆபத்தைப் பற்றி அறிந்து வைத்ததினால் தான் அவர்களைக் கண்டு அஞ்சுகிறார்.அவ்வாரே ஆபத்தை அஞ்சாதவர் ஆபத்தில் விழுவதை யோசிப்பதில்லை உதா: தற்கொலை செய்பருக்கு தனது  மரணத்தைப் பற்றிய  பயமின்றி  இருப்பதினாலே  ஏற்படுகிறது.  அவ்வாரே அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் ஏற்பட அவர் அல்லாஹ்வின்  (அழகிய உயர்வான பண்புகள்) பற்றி அறிந்திருந்தால் மட்டுமே அச்சமுண்டாகும் என்பது தெளிவான விஷயமாகும். எனவே ஒருவர் மார்க்க அறிஞர் என்றால் அவரிடம் அல்லாஹ்வின் அச்சமே மேலோங்கி இருக்க வேண்டும்.

அல்லாஹ்வை அதிகம் அறிந்திருப்பவரின் அடையாளம்:

அல்லாஹ்வின் அச்சமானது அவரைப் பாவத்திலிருந்து தவிர்ந்து நடக்க வைப்பதோடு, தான் அஞ்சுகின்ற அல்லாஹ்வை (மறுமையில்) சந்திப்பதற்கு (இம்மையில்) தயார் செய்ய வைக்கும்۔ இது கல்வியின் தனிச்சிறப்பிற்குச் சான்றாக இருக்கின்றது. 

ஏனெனில், கல்வி (நம்மை) இறையச்சத்தின் பக்கம் அழைத்துச் செல்லும்.          (இப்னுல் கய்யிம் / தஃப்ஸீர் ஸஅதீ)

எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை அறிந்து நேசத்தோடும் அச்சத்தோடும் வாழ அல்லாஹ்விடம் பிரார்திப்போமாக!

0
Would love your thoughts, please comment.x
()
x