يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; ஒருபோதும் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான் (அல்குர்ஆன் 2:208)
இமாம் பஃகவி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:
இவ்வசனமானது வேதம் கொடுக்கப்பட்டோரிலுள்ள அப்துல்லாஹ் இப்னு ஸலாம் அல்-நதீரி மற்றும் அவரைப் பின்பற்றிய சில முஃமின்கள் குறித்து இறக்கியருளப்பட்டதாகும்.
ஏனெனில், அவர்கள் இஸ்லாத்தில் நுழைந்த பிறகும் ‘ஸப்பாத்’ சனிக்கிழமையின் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கக் கூடியவர்களாகவும், ஒட்டக இறைச்சியையும் அதன் பாலையும் (தவிர்ப்பதன் மூலம்) வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். மேலும் அவர்கள், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே, தவ்ராத் அல்லாஹ்வின் வேத நூலாகும். எனவே, அதை நமது இரவுத் தொழுகையில் ஓதுவோம்” எனவும் கூறினார்கள். இவர்களுக்குப் பதிலளிக்கும் பொருட்டே அல்லாஹ் மேற்குறித்த ஆயத்தை இறக்கி வைத்தான்.
அல்லாஹ் அருளினான்:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்
முஜாஹித் (ரஹ்) கூறுகிறார்கள் : இஸ்லாத்தில் நுழைந்துவிடுங்கள் என்பதன் விளக்கமாவது, “(ஜாஹிலிய்யத் மற்றும் முந்தைய வேத நடைமுறைகளை விட்டுவிட்டு) இஸ்லாமிய மாக்கத்தின் சட்டதிட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்குள் நுழையுங்கள்.” என்பதாகும்.
كَافَّةً என்றால்
முழுமையாக என்பது பொருள்.
சிலர் கூறுகிறார்கள் ‘முழுமையாக’ என்பதன் விளக்கமாவது “இஸ்லாத்தினுள்ளும் அதன் (ஷரீஅத்) சட்டதிட்டங்களினுள்ளும் பரிபூரணமாக நுழைந்துவிடுங்கள், வேறு (மார்க்கங்களிலிருந்தோ அல்லது புதிதாகவோ) எதையும் தேடுவதை விட்டுவிடுங்கள்.
السِّلْمِ (அல்-ஸில்ம்) என்ற சொல்லானது ‘விருப்பத்துடன் கீழ்படிதலைக்’ குறிக்கும் மூலச்சொல்லிலிருந்து வந்ததாகும் அத்துடன் உடன்படிக்கையும் சிலவேளைகளில் السِّلْمِ என்று அழைக்கப்படுகிறது
இவ்வசனம் குறித்து ஹுதைபா இப்னு அல் யமான் (ரலி) கூறுகிறார்கள்:
“இஸ்லாம் எட்டுப் பங்குகளைக் கொண்டுள்ளது அவையாவன தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ், உம்ரா, ஜிஹாத், நன்மையை ஏவுவது, மற்றும் தீமையைத் தடுப்பது என்பனவாகும். “யாரொருவர், இவற்றில் பங்கெடுத்துக் கொள்ளவில்லையோ அவர் வெற்றி பெற மாட்டார்”.
ـ ( ولا تتبعوا خطوات الشيطان ) أي آثاره فيما زين لكم من تحريم السبت ولحوم الإبل وغيره ( إنه لكم عدو مبين ) ـ
وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ
“தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்”
அதாவது ஸப்பாதைக்(சனிக்கிழமையை) கடைப்பிடிப்பதும், ஒட்டக இறைச்சியை தவிர்ப்பதும் இன்னும் இதுபோன்றவைகளையும் நன்மையான காரியங்கள் என்ற சிந்தனை வருவதே நம்மிடம் அவன்(ஷைத்தான்) ஆதிக்கம் செலுத்துவதாகும் (எனவே இஸ்லாத்தில் கூறப்படாத எந்த ஒன்றயும் நன்மையானதாக எண்ண வேண்டாம்)
إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
ஷைத்தானை பி்ன்பற்ற வேண்டாம் என்று சொன்ன பிறகு அதன் காறணத்தை இங்கு விவரிக்கிறான். நிச்சயமாக, “அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்” என்று குறிப்பினுகிறான். (த்ஃப்ஸீர் பஃஙவீ- உஸைமீன் )