அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிப்பது

4:48 اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏

நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான், இதனைத் தவிர (மற்ற) எதனையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான், எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாகக் கற்பனை செய்துவிட்டார்.

யார் அல்லாஹ்வுக்கு இணைக்  கற்பிக்கிறார்களோ, அவர்களுக்கு சுவனம் தடை செய்யப்பட்டு, நரகம் தான் அவர்களின் தங்குமிடம். அவர்களுக்கு எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள்.

குர்ஆனில் கடுமையாக எச்சரிக்கப்பட்ட இந்த இணைவைப்பை அறிஞர்கள்  இரண்டு வகைகளாக பிரிக்கிறார்கள்:

  1. பெரிய இணைவைப்பு:       
  2. சிறிய  இணைவைப்பு: 

                        பெரிய இணைவைப்பு என்பது 1 அல்லாஹ்வின் ஆற்றலில் இணைவைப்பது  உதாரணமாக உலகத்தை அல்லாஹ்வுடன் சேர்ந்து மற்றவர்களும் படைத்தார்கள் என்று அல்லது உலகை நிர்வகிப்பதில்  அல்லாஹ்வுக்கு உதவியாளர்கள் இருப்பதாக நம்புவது.

  2  வழிபாட்டில் இணைவைப்பது  அல்லாஹ்வுக்குரிய வணக்கங்களை சிலைகளுக்கும், மனிதர்களுக்கும் செலுத்துவது. அல்லாஹ்வின் பெயரால் சிலைகளுக்கு பிரார்த்தனை செய்வது.அல்லாஹ் அல்லாத மற்றவர்களின்  பெயரில் நேர்ச்சை செய்வது, அல்லாஹ் அல்லாத மற்றவர்களின் பெயரில் பிராணிகளை பலி கொடுப்பது போன்றவை.

இவ்வகையான  இணைவைப்பினால்  ஒருவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுவார் 

சிறிய  இணைவைப்பு:

அதாவது ஹதீஸில் சில  பாவங்களை  இனைவைப்பு என்று கூறப்பட்டிருக்கும்  அந்த  பாவங்களை செய்வது உதாரணமாகஅல்லாஹ் அல்லாத மற்ற படைப்பினங்கள் மீது நாவளவில் சத்தியம் செய்வது, முகஸ்துதி “அல்லாஹ் நாடினாலும் மற்றவர்கள் நாடினாலும் காரியங்கள் நடைபெறும்” என்று வார்த்தையால் மட்டும் சொல்வது போன்றவை

இந்த வகை இணைவைப்பில், ஒருவர் தனது செயல்களால் இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை என்றாலும், அவரது ஈமான் (இறை நம்பிக்கை) குறைவடைகிறது.

பெரியபெரிய இணைவைப்பின் விபரீதங்கள்

  • இது அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது.
  • வெளிப்படையான இணைவைப்பு ஒரு பெரிய குற்றமாகும், இது ஒருவரை நிரந்தர நரக நெருப்பில் தள்ளிவிடும்.
  • இது இறை  நம்பிக்கையை சிதைத்து, எல்லா நற்செயல்களையும் வீனாக்கி விடுகிறது.

சிறிய  இணைவைப்பின் விபரீதங்கள்

  • சிறிய  இணைவைப்பு ஒருவரின் ஈமானை (இறை நம்பிக்கையை) பலவீனப்படுத்துகிறது.
  • இது ஒருவரை அல்லாஹ்வின் சிந்தனையிலிருந்து திசை திருப்புகிறது.
  • இது ஒருவரின் நல்ல அமல்களின் மதிப்பைக் குறைக்கிறது.

எனவே நாம் நமது வாழ்நாள் முழுவதும் இருவிதமான இணைவைப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும். அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, அவனை மட்டுமே வணங்கி  வழிபட அல்லாஹ்  உதவி  செய்வானாக. 

              (الكبائر – ٩ أصول الإيمان ٦١. تقوية الإيمان ٤٧)

உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம் 4/31

0
Would love your thoughts, please comment.x
()
x