குர்ஆன் பல விசேஷமான சிறப்புகளைக் கொண்ட மக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. நாம் அந்த விசேஷமான குழுவைச் சேர்ந்தவராக இருந்தால், நாமும் அல்லாஹ்வினுடைய சிறப்பான கருணையினால் அந்த சிறப்பைப் பெரும் தகுதிபெறுவோம். அந்தச் சிறப்புப் பிரிவுகளில் ஒரு குழுவை குர்ஆன் ‘உலுல் அல்பாப்’ என அழைக்கும், ‘அறிவுடைய மக்கள்’.
குர்ஆனில் அல்லாஹ் அடியார்களை இரண்டு விதங்களில் சிந்திக்கும் படி கட்டளையிடுகிறான் ஒன்று அவன் படைத்திருக்கும் படைப்பினங்களைப் பற்றி சிந்திக்கச் சொல்வது மற்றொன்று அவன் வழங்கிருக்கின்ற வேதமான குர்ஆனிலுள்ள கருத்துக்களையும் அதன் சட்டதிட்டங்களையும் ஆழ்ந்து சிந்திப்பது. இந்த இரண்டாம் வகைரயே குர்ஆனில் அதிகமான இடங்களில் சிந்திப்பதற்கு தூண்டப்பட்டுள்ளது.( இந்த வசனம் முதல் வகையைச் சார்ந்தது)
மனிதனுக்கு அல்லாஹ் படைப்பினங்களைச் சிந்திக்கக் கூறியிருப்பதன் காரணம் அவைகளைச் சிந்திப்பதன் மூலம் அவைகளை படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானத்தை மனிதன் தனது உள்ளத்தில் ஆழப் பதிய வைக்க வேண்டும் என்பதுதான்.
உலகில் உள்ள அனைத்து படைப்பினங்களும் சுயமான எந்த ஆற்றலுமற்றவை என்பது தெளிலான விஷயமாகும். அவை அனைத்தும் இல்லாமையிலிருந்து உருவாக்கப்பட்டவை இதன் மூலம் மனிதன் அவைகளை உருவாக்கியவன் இருப்பதையும் அவனது ஆற்றலையும் அவனது நாட்டத்தின் படியே அனைத்தும் நிகழ்கின்றன அவன் யாவற்றையும் முற்றும் அறிந்தவன் என்ற செய்திகளையும் அவன் விளங்கிக் கொள்கிறான்.
அவ்வாறே உலகிலுள்ள எல்லா படைப்பினங்களும் ஒரே தன்மைக் கொடனதாக இருப்பதிள்ளை மாறாக ஒவ்வொரு படைப்பினங்களுக்கும் பிரத்யோகமான சில தன்மைகளை நாம் காண முடிகின்றது இதன் அவைகள் எதேர்ச்சியாக நிகழ்வதில்லை என்றும் அவைகளைப் படைத்தவனின் நாட்டப் படியே அனைத்தும் நடைபெறுகின்றன என்ற செய்திகளையும் அவன் விளங்கிக் கொள்கிறான்.
அவ்வாறே அந்தப் படைப்பினங்களின் மூலம் மனிதன் பல வகையான நலவுகளையும் உபகாரங்களையும் பயன்களையும் அடைவதன் மூலம் அவைகளை படைத்த அல்லாஹ் மிகவும் இரக்கமுள்ளவன் அவன் புகழுக்குரியவன் அவன் ஞானமிக்கவன் என்ற செய்திகளையும் அவன் விளங்கிக் கொள்கிறான்.
அவ்வாறே உலகிலுள்ள படைப்பினங்களின் மூலம் மனிதனுக்கு பல விதமான ஆபத்துகளும் இடையூறுகளும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன இதன் மூலம் அவைகளை படைத்த அல்லாஹ்வின் கோபத்தையும் தண்டனைகளையும் பிடியையும் மனிதன் விளங்கி தனது உள்ளத்தில் அவனது அச்சத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.
அந்தப் படைப்பினங்களின் மூலம் மனிதனுக்கு பல வகையில் பாதுகாப்பும் கண்ணியமும் சிறப்பும் மதிப்பும் கிடைக்கின்றன இதன் மூலம் அவைகளை படைத்த அந்த அல்லாஹ் மிகவும் நேசத்திற்குரியவன் கண்ணியமானவன் என்பதை அவன் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வாரே இந்த படைப்பினங்களின் மூலம் மனிதனுக்கு பல விதங்களில் இடையூறுகளும் கேவலங்களும் தோல்விகளும் அவமானங்களும் ஏற்படுகின்றன. இதன் மூலம் அவைகளை படைத்த அந்த அல்லாஹ்வின் கோபத்தையும் தண்டனைகளையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறே உலகிலுள்ள படைப்பினங்கள் அற்பமான அல்லது மிகமிக பலவீனத்திலிருந்து (மரங்கள், மனிதர்கள்) சிறிது சிறிதாக முதிர்ச்சிடைவதை நாம் பார்க்கிறோம் இதன் மூலம் பலவீனத்திலிருந்து முதிர்ச்சியை அடைய வைத்த அவன் உலக அழிவிற்குப் பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான் என்ற நம்பிக்கையை அவன் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறே உலகம் சீராக இயங்குவதற்குப் பல படைப்பினங்களைக் காரணக் காரியங்களாக ஏற்படுத்தி வைத்துள்ளான் அவைகள் இன்றி இவ்வுலகம் இயங்குவது சாத்தியமற்றதாகிவிடும் என்பதை விளங்கும் பொழுது அவ்வாறே இவ்வுலகில் மனிதவாழ்வு கெட்டுவிடாமல் சீராகவும் சிறப்பாகவும் இயங்க அவர்களுக்கு நேரான வழிகாட்டும் தூதுவர்களை அல்லாஹ் அனுப்பி இருப்பதையும் அவகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
‘உலுல் அல்பாப்’ என்றால் யார்?
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பகுத்தறியும் ஆற்றலை அல்லாஹ் அருளியிருக்கிறான். அதை பலர் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவர் ‘உலுல் அல்பாப்’ என்பவர்கள் பகுத்தறிவை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றிருக்க மாட்டார்கள், அதை அல்லாஹ் விரும்பும் முறையில் பயன்படுத்துபவர்கள் அவர்கள் வானத்தைப் பார்த்து அதன் விசாலத்தையும் , அதன் எல்லையில்லா அழகையும் ,கண்டு கருணையாளனும் , மிகச் சிறந்த படைப்பாளனும், அழகானவனும், அழகை விரும்புபவனும், நுட்பமானவனுமான அல்லாஹ்வின் இருப்பையும், அவனது உயர்வையும் உணர்வார்கள்.
உலுல் அல்பாபின் தன்மைகள்:
அல்லாஹ் படைத்த வானம், பூமி, மரங்கள், மலைகள், மலர்கள் இரவு பகல் மாறி மாறி வருவதும் கோடைக் காலத்தில் பகல் பொழுது நீண்டும் இரவு குருகியும் அதேபகல் குளிர்க் காலத்தில் குருகியும் இரவு பொழுது நீண்டிருப்பதும் , அதிலுள்ள இன்னும் பல அட்தாச்சிகளும் அவர்களுடைய இதயங்களுக்குள் மிக எளிதாக புகுந்து விடுகின்றன: அதனால், அவர்கள் இயல்பிலேயே இயற்கை அழகையும், வேத வெளிப்பாடையும் விரும்பி எந்நேரமும் அல்லாஹவைப் பற்றி நினைவுகூர்பவர்களாக , வேத்தை சிந்தித்து ஓதுபவர்களாக , தங்களுடைய வாழ்வில் எப்போதும் அவனது உயர்வான தன்மைகளைப் பற்றி உணர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.. . . அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;.
உலகில் நாம் காணும் அற்புதமான படைப்புகள் மனித அறிவை திகைப்படையச் செய்கின்றன. இந்த அற்புதங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிக்கும் ஆற்றல் பெற்ற ஒரே இறைவனை வணங்குவதே நியாயமானது என்பதை அந்த அறிவுடையோர் உணர்கிறார்கள்.
மேலும் அவர்கள் தங்கள் இரட்சகா இந்த படைப்பினங்களில் எதையும் நீ வீனாக படைக்கவில்லை காரணம் நீயோ வீனான செயல்கள் யாவற்றையும் விட்டும் மகாதூய்மையானவன் என்று கூறுவார்கள்
இது அவர்களின் முதல் தன்மையாகும்
(இஃப்னுல் கைய்யிம் – இஃப்னு கஸீர் – இஃப்னு உஸைமீன்)