இஸ்லாமிய முத்துக்கள்
அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன் புகழனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனது நண்பர் முஃப்தி தமீமுல் அன்சாரி பாகவி அவர்கள் இணையதளம் உருவாக்குவது பற்றி கற்றுக்கொள்ளுமாறு எனக்கு அறிவுறுத்தினார். அல்லாஹ்வின் அருளால், நான் அதை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பின்னர், சில அரபு மொழி இஸ்லாமிய இணையதளங்களைப் பார்வையிட்ட போது, நாமும் தமிழில் இதுபோன்ற ஒன்றை உருவாக்கலாம் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதற்காக, சில தலைப்புகளையும் தேர்ந்தெடுத்தேன். எனது இந்த இணையதலம் உருவாவதற்கு பல வகையில் உதவியாகவும் ஊக்கமளித்தும் ஆலோசனைகள் வழங்கிய சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் இம்மை மறுமையின் எல்லா நலவுகளையும் அல்லாஹ் தந்தருள்வானாக !
மேலும் இந்த இணையதளம் நன்மையான காரியங்களில் தோய்வின்றி நடைபெற உதவி செய்வானாக !