تِلْكَ الدَّارُ الآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لا يُرِيدُونَ عُلُوًّا فِي الأرْضِ وَلا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ:

பூமியில் கௌரவம் பெறுவதையும் குழப்பம் விளைவிப்பதையும் விரும்பாதவர்களுக்கே அந்த மறுமையின் வீட்டை நாம் சொந்தமாக்கி வைப்போம்; பயபக்தியுடையவர்களுக்கே (உயர்வான) முடிவு உண்டு’. (அல்குர்ஆன் : 28:83)

இதற்கு முந்திய வசனத் தொடரில் காரூனுக்கு  உலகில் கொடுக்கப்பட்ட (பனம் ,பதவி, அறிவு, ஆற்றல் இன்னும் பல )  உலக செல்வங்களின் மூலம்  தமக்கு கௌரவம் கிடைக்க வேண்டும் என விரும்புவதோடு பூமியில் குழப்பங்களை விளைவித்து அழிவிற்கு உல்லானதைப் பற்றிக் கூறப்பட்டப் பின் உலக செல்வங்கள் பெற்ற நல்லோர்களின் பண்பைப் பற்றி இங்கு விவரிக்கப்படுகிறது. 
 
 குர்ஆனிய இந்த வசனத்தில்  நான்கு வகை மனிதர்களை இனம் பிரிக்களாம்  என அறிஞர்கள் கூறுகிறார்கள் :

முதல் தரப்பினர் :

உலகில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் (பனம் ,பதவி, அறிவு, ஆற்றல் இன்னும் பல )  உலக செல்வங்களின் மூலம்  தமக்கு கௌரவம் கிடைக்க வேண்டும் என விரும்புவதோடு பூமியில் குழப்பங்களை விளைவிப்போர். இத்தகையோர் பிர்அவ்ன் போன்ற ஆட்சியாளர்கள் மற்றும் தலைவர்களாவார்கள்.

இரண்டாம் தரப்பினர் : உலக செல்வங்களின் மூலம் கௌரவத்தை எதிர்பார்க்க மாட்டார்கள், ஆனால் குழப்பம் விளைவித்துக் கொண்டிருப்பார்கள். இத்தகையோர் திருடர்கள், கொலையாளிகள், கொள்ளையர்கள் போன்றோர்.

மூன்றாம் தரப்பினர் :

தனக்குக் கிடைத்திருக்கும் உலக செல்வங்களின் மூலம்  குழப்பம் விளைவிக்கமாட்டார்கள், ஆனால் கௌரவம் பெறுவதை இலக்காகக் கொண்டிருப்பர். ஏதேனும் ஒரு கொள்கையை சுமந்துகொண்டு பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவோர் இவ்வகையில் அடங்குவார்கள்.

நான்காம் தரப்பினர் :

தனக்குக் கிடைத்திருக்கும் உலக செல்வங்களின் மூலம் கௌரவத்தையும் எதிர்பார்க்கமாட்டார்கள், குழப்பமும் விளவிக்கமாட்டார்கள். இத்தகையோரே சுவனவாதிகள். இவர்கள் அல்லாஹ்விடம் உயர்ந்தவர்களாக கருதப்படுவார்கள். மேற்கூறிய  வசனத்தில் இறுதி வெற்றி  இவர்கள் குறித்தே  பேசுகிறது 

உலகில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் (பனம் ,பதவி, அறிவு, ஆற்றல் இன்னும் பல )  உலக செல்வங்களின் மூலம்  தமக்குக் கிடைத்திருக்கும் அவைகளை அழகு, இன்பம் என்ற முறையில் பயன்படுத்துவதால் அவரின் எந்த குற்றமுமில்லை.

(மஜ்மூவுல் ஃபதாவா 28/392 – தஃப்ஸீர் இஃப்னு கஸீர்- தஃப்ஸீர்  ஸஅதீ)

0
Would love your thoughts, please comment.x
()
x