பெரும் பாவங்கள் 8

பெற்றோருக்கு மாறு செய்தல்

பெற்றோருக்கு கண்ணியப்படுத்துவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது அதற்கு மாற்றமாக பெற்றோருக்கு மாறு செய்வதை இஸ்லாம் பெரும் பாவமாக கருதுகிறது
அல்லாஹு குர்ஆனில் கூறுகிறான் உமது இரட்சகன் ஏவுகிறான் அவனைத் தவிர நீங்கள் வேறு யாரையும் வணங்க வேண்டாம் இன்னும் பெற்றோருக்கு உபகாரமாக நடந்துக் கொள்ளுங்கள் என்றும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ முதுமை அடைந்த நிலையில் உன்னிடம் இருக்க அவர்களை ச்சீ என்றும் சொல்ல வேண்டாம் அவர்களை வீட்டை விட்டு விரட்டவும் வேண்டாம் இன்னும் அவர்களுக்கு கனிவான வார்த்தைகளைக் கூறுங்கள் இன்னும் அவ்விருவர் மீது இரக்கம் காட்டி பணிவாக நடந்து கொள்ளுங்கள் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள் எங்கள் ரட்சகா அவர்கள் எங்களை சிறுபிராயத்தில் இரக்கம் காட்டியது போல் அவ்விருவர் மீது நீ இரக்கம் காட்டுவாயாக
நபி அவர்கள் கேட்டார்கள் உங்களுக்கு பெரும் பாவங்களை பற்றி கூறவா அதில் பெற்றோருக்கு மாறு செய்வதையும் குறிப்பிட்டார்கள் மற்றொரு அறிவிப்பில்  அல்லாஹ்வின் திருப்தி தந்தையின் திருப்தியிலும்  அல்லாஹ்வின் அதிருப்தி தந்தையின்  அதிருப்தியிலும்  இருக்கிறது 

மற்றொரு அறிவிப்பில் தந்தை என்பவர் சுவனத்தின் தலைசிறந்த வாசலாகும் நீ நாடினால் அதை பாதுகாத்து அதன் வழியாக சொர்க்கத்தில் செல்லும் நீ விரும்பினால் அதை பாலாக்கிக் கொள் இதுபோன்ற இன்னும் ஏராளமான அறிவிப்புகள் வந்துள்ளன

இப்னு முனஃப்பிஹ் கூறுகிறார்கள் அல்லாஹ் மூஸாவிடத்திலே சொன்னான் மூஸாவே  யார் பெற்றோரை கண்ணியப்படுத்துகிறாரோ அவரது வாழ்க்கையை விசாலமாக்குவேன் வயதை நீட்டிக் கொடுப்பேன் இவரிடம்  உபகாரமாக நடந்து கொள்ளும் பிள்ளையை கொடுப்பேன் யார்  பெற்றோருக்கு மாறு செய்கிறாரோ அவரது வாழ்நாளை குறைத்து அவருக்கு மாறு செய்யக் கூடிய பிள்ளையை கொடுப்பேன் என்றும் வந்துள்ளது

எனவே நாம் பெற்றோருக்கு உபகாரமாக நடந்துக் கொள்ளும் நல்லவர்களாக நாம் வாழ்வோமாக!

0Shares