عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال ( سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله إمام عدل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ) صحيح البخاري ‘

அல்லாஹ்வின் (அர்ஷின்) நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இல்லாத கியாமத் நாளில் அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

  1. நீதமிகு தலைவர்
  2. அல்லாஹ்வை வணங்கியே வளர்ந்த ஒரு வாலிபர்.
  3. உள்ளத்தை இறை இல்லத்துடன் இணைத்துக் கொண்ட மனிதர்.
  4. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.
  5. அழகும், கவர்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்றுரைக்கும் மனிதன்.
  6. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.
  7. தனிமையில் தியானத்தில் ஈடுபடும்போது, அல்லாஹ்வின் அச்சத்தால் அழும் மனிதன்.’

அறிவிப்பவர்: அபூஹுரைறா (ரலி) நூல்: புகாரி 6806 

மறுமை நாளில், மஹ்ஷர் மைதானத்தில் எல்லா மனிதர்களும்  ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது (அர்ஷின்) நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான். அல்லாஹ்வின் (அர்ஷின்) நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது. ஒவ்வொரு மனிதனும் தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்வதற்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, மேலே கூறப்பட்டுள்ள நபிமொழியில் சிறப்பிக்கப்பட்ட ஏழு வகையினர் மட்டும்  எந்தக் கவலையுமின்றி, நிம்மதியாக இருப்பார்கள். இங்கு ஏழுபேர் என்று ஹதீஸில் கூறப்பட்டாலும் இதன் பொருள் இத்தன்மைக் கொண்ட ஏழு கூட்டத்தினர் என்பதாகும். அதனால்,.அந்த ஏழுபேர் தகுதியில் இருக்கும் பல ஆயிரம், லட்சம், நபர்கள் இருந்தாலும் அதில் இணையலாம் என்றே புரிந்து கொள்ளவேண்டும். இனி அந்த ஏழுவகைக் கூட்டம் பற்றி சற்று விரிவாக காண்போம்.

 நீதிமிகு தலைவர் : இஸ்லாமிய கண்ணோட்டத்தில், தலைமைத்துவம் என்பது ஒரு அமானிதப் பொறுப்பாகும். தலைவர்கள் தாங்கள் தலமைப் பொருப்பை அடைந்துவிட்டோம் என்று எண்ணுவதைக் காட்டிலும், தங்களின் பொருப்பிற்கு அல்லாஹ்விடம் பதிலளிக்க வேண்டியிருக்கும் என்பதையும் எச்சரிக்கிறது.  

தலைவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள்:

மறுமையில் நிழல் பெறும் முதலாவது வகையினர் நீதமான ஆட்சியாளர்கள் ஒருவர் நீதமான ஆட்சியாளராக என்ற தகுதி பெறுவதற்கு  இரண்டு  தகுதிகள்  இருக்க வேண்டும் 1  ஆட்சி பொறுப்பிற்கு ஞானம் பெற்றுருப்பது 2 பொறுப்பில் நம்பிக்கையாளராக இருத்தல்

கல்வித் தகுதி என்பது, தான் வழங்கும் எந்தத் தீர்ப்பானாலும் மார்க்கம் வழிகாட்டும்  முறையில் தீர்ப்பளிக்க வேண்டும். காரணம் இஸ்லாம் வழங்கும் தீர்ப்பை விட நீதமான தெளிவான ஒரு தீர்ப்பை எவராலும் வழங்க முடியாது. ஒருவர் இஸ்லாம் கூறாத ஒரு சட்டத்தை வழங்கினால் அவர் அநீதம் செய்தவராகவே கருதப்படுவார். 

 நம்பகத்தன்மை   என்பது, தன்னிடம் வரக் கூடிய உறவினர், விரோதி, ஏழை, பணக்காரன், படித்தவர், பாமரர், போன்ற எவ்வித பாரபட்சமில்லாமல்   நடந்து கொள்ள வேண்டும். தன்னிடம் வருபவர்களில்  ஒருவர் இறை நம்பிக்கையாளராகவும் மற்றொருவர் இறை மறுப்பாளராக இருந்தாலும் கூட இறை நம்பிக்கையாளருடன்  நடந்துக் கொள்வதைப்   போன்று மற்றவரிடமும் நடந்து கொள்ள வேண்டும். என்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் எல்லா சந்தர்பத்திலும்  தனது பொறுப்பில் நீதத்தை நிறைவேற்றுவது என்பது மிக சிரமமான காரியமாகும். அவ்வாறு நிறைவேற்றினால் மறுமையில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவார் என்பது தெளிவான விஷயமாகும். (ஷரஹ் ரியாழுஸ்ஸாலிஹீன் – இப்னு உஸைமீன் 1/459)

0
Would love your thoughts, please comment.x
()
x