குர்ஆன் பாடம் 7

நான்கு வகை மனிதர்கள்

تِلْكَ الدَّارُ الآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لا يُرِيدُونَ عُلُوًّا فِي الأرْضِ وَلا فَسَادًا وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ:

‘பூமியில்  கௌரவம் பெறுவதையும் குழப்பம் விளைவிப்பதையும் விரும்பாதவர்களுக்கே அந்த மறுமையின் வீட்டை நாம் சொந்தமாக்கி வைப்போம்;  பயபக்தியுடையவர்களுக்கே (உயர்வான) முடிவு உண்டு’.  

(அல்குர்ஆன் : 28:83)

மேற்கூறிய  குர்ஆனிய வசனம் நான்கு வகை மனிதர்களை இனம் பிரித்துக் காட்டுகிறது என ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமியா (றஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

முதல் தரப்பினர் :

உலகில் தமக்கு கௌரவம் கிடைக்க வேண்டும் என விரும்புவதோடு பூமியில் குழப்பங்களை விளைவிப்போர். இத்தகையோர் பிர்அவ்ன் போன்ற ஆட்சியாளர்கள் மற்றும் தலைவர்களாவார்கள்.

இரண்டாம் தரப்பினர் :கௌரவத்தை எதிர்பார்க்க மாட்டார்கள், ஆனால் குழப்பம் விளைவித்துக் கொண்டிருப்பார்கள். இத்தகையோர் திருடர்கள், கொலையாளிகள், கொள்ளையர்கள் போன்றோர்.

மூன்றாம் தரப்பினர் :

குழப்பம் விளைவிக்கமாட்டார்கள், ஆனால் கௌரவம் பெறுவதை இலக்காக கொண்டிருப்பர். ஏதேனும் ஒரு கொள்கையை சுமந்துகொண்டு பிறர் மீது ஆதிக்கம் செலுத்துவோர் இவ்வகையில் அடங்குவார்கள்.

நான்காம் தரப்பினர் :

கௌரவத்தையும் எதிர்பார்க்கமாட்டார்கள், குழப்பமும் விளவிக்கமாட்டார்கள். இத்தகையோரே சுவனவாதிகள். இவர்கள் அல்லாஹ்விடம் உயர்ந்தவர்களாக கருதப்படுவார்கள். மேற்கூறிய  வசனத்தில் இறுதி வெற்றி  இவர்கள் குறித்தே  பேசுகிறது 

(மஜ்மூவுல் ஃபதாவா 28/392)

0Shares