பெரும் பாவங்கள் 3

நயவஞ்சகம் 

اِنَّ الْمُنٰفِقِيْنَ فِى الدَّرْكِ الْاَسْفَلِ مِنَ النَّارِ‌ ۚ وَلَنْ تَجِدَ لَهُمْ نَصِيْرًا ۙ‏

நிச்சயமாக (இவ்வேஷதாரிகளாகிய) முனாஃபிக்குகள் நரகத்தின் மிகவும் கீழான அடித்தளத்தில் இருப்பார்கள், இன்னும் (அங்கு) அவர்களுக்கு உதவியாளரை நீர் காணவே மாட்டீர்.

நயவஞ்சகம் என்பது உள்ளத்தில் உள்ளதை மறைத்து, வெளிப்படையாக  மற்றொன்றைக் காட்டுவதாகும். இது இஸ்லாத்தில் மிகக் கண்டிக்கத்தக்க குணமாகும்.

நயவஞ்சகத்தின் வகைகள்:

அறிஞர்கள் நயவஞ்சகத்தை இரண்டு வகைகளாக பிரிக்கிறார்கள்:

1 உள்ளத்தில் கொள்கையை  மறைத்து வைத்தல்:

 இஸ்லாமிய கொள்கைகளை உள்ளத்தால் நம்பாமல், வெளிப்படையாக முஸ்லிம்களைப் போல நடந்துக்  கொள்வது. இது நயவஞ்சகத்தின் மிக மோசமான வகை ஆகும்.

وَاِذَا لَقُوْا الَّذِيْنَ اٰمَنُوْا قَالُوْاۤ اٰمَنَّا ۖۚ وَاِذَا خَلَوْا اِلٰى شَيٰطِيْنِهِمْۙ قَالُوْاۤ اِنَّا مَعَكُمْۙ اِنَّمَا نَحْنُ مُسْتَهْزِءُوْنَ‏

இன்னும், அவர்கள் விசுவாசங்கொண்டோரை சந்தித்தால், “நாங்களும் (உங்களைப் போல்) விசுவாசங்கொண்டிருகிறோம்” எனக்கூறுகிறார்கள்; மேலும், அவர்கள் தங்களின் (இனத்தவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்து விட்டால், “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.(விசுவாசம் கொண்டதைப் போல் நடித்து விசுவாசிகளை) நாங்கள் பரிகாசம் செய்யகூடியவர்கள்தாம்” எனக் கூறுகின்றனர்.

இவ்வகையான நயவஞ்சக  கொள்கைக் கொண்டவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுவார் 

2 உள்ளத்தில் குணத்தை மறைத்தல்

 உள்ளத்தில் வெறுப்பு அல்லது கோபத்தை வைத்துக் கொண்டு , வெளிப்படையில் அன்பாக நடந்துக் கொள்வது.

நயவஞ்சகர்களின் அறிகுறிகள்:

நபி (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களின் பண்புகளை பற்றி பல ஹதீஸ்களில் விளக்கியுள்ளார்கள்.

'நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய முனாஃபிக் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான்;. பேசினால் பொய் பேசுவான்;. ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான்;. விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்' என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல்: புகாரி)

( أصول الإيمان. ٦٧) 

எனவே நாம் நயவஞ்சகத்தின் தீய குணங்களைப்  பற்றி அறிந்து கொண்டு, அதிலிருந்து விலகி இருக்க வேண்டும். நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து, அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைவோமாக 

உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ள பெரும் பாவங்களைத் தவிர்த்து வந்தீர்களானால் உங்களுடைய சின்னஞ்சிறு தவறுகளை உங்கள் கணக்கிலிருந்து நாம் நீக்கி விடுவோம்; மேலும் உங்களை கண்ணியமான இடத்தில் நுழைய வைப்போம் 4/31

0Shares