பெரும் பாவங்கள் 5

சூனியம்

وَمَا کَفَرَ سُلَيْمٰنُ وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ

 சூனியம் என்பது  மனிதனை அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சூனியம் என்பது எந்தப் பயனையும் பெற்றுத்தராத, மாறாக தீமைகளையே விளைவிக்கும் பாவச்செயலாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ

அவர்களுக்கு எந்தப் பயனும் தராத, அவர்களுக்கு துன்பமிழைக்கும் ஒன்றை- சூனியத்தை- கற்றுக் கொண்டார்கள். (அல்குர்ஆன் 2:102)

وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى

சூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)

1) நிச்சயமாக சூனியம் செய்பவன் காஃபிராவான். அல்லாஹ் கூறுகிறான்:

وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّى يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ

மேலும் ஸுலைமான் (சூனியம் செய்து அல்லாஹ்வை) நிராகரிக்கவில்லை. எனினும் நிச்சயமாக ஷைத்தான்கள் தான் நிராகரித்து விட்டார்கள். அவர்கள் சூனியத்தையும் பாபிலோ(ன் நகரி)னில் ஹாரூத், மாரூத் எனும் இரு மலக்குகளுக்கு இறக்கப்பட்டிருந்த(தாகக் கூறி, பல)வற்றையும் மனிதர்களுக்குக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். மேலும் அவ்விருவரும் நாங்கள் சோதனையாக இருக்கின்றோம். ஆதலால் (இதைக்கற்று) நீ காஃபிராகிவிட வேண்டாம் என்று கூறும்வரை அவர்கள் (அதனை) ஒருவருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன் 2:102)

அழிவின்பால் உங்களை இட்டுச் செல்லக் கூடிய ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள் என்ற நபி மொழியில் இரண்டாவதாக சூனியத்தைக் கூறியுள்ளார்கள்

மூவர் சுவர்க்கம் நுழையமாட்டார்கள்: மதுவிலேயே  மூழ்கியிருப்பவன், உறவினரை வெறுப்பவன்,சூனியத்தை உண்மைப்படுத்துபவன் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அஹ்மத், ஹாகீம், இப்னுஹிப்பான், அபூயஹ்லா)

சூனியத்தால் சம்பாதிப்பது ஹராமான, இழிவான செயலாகும். அறிவிலிகளும் அநியாயக்காரர்களும் பலவீனமான ஈமான் கொண்டவர்களும் தங்களின் எதிரிகளை சூனியத்தின் மூலம் பழிவாங்குவதற்காக சூனியக்காரர்களிடம் செல்கின்றனர். அநீதம் செய்தவர்கள் அதன் எதிர்விளைவாக தங்களை சூனியம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக சூனியக்காரர்களிடம் அடைக்கலம் தேடுகின்றனர்.

சூனியத்தின் ஏழாவது வகை: கண்கட்டி வித்தை

அறிஞர்கள் சூனியத்தை சுமார் ஏழு வகைகளாகப் பிரிக்கின்றனர். அதில் ஏழாவது வகையாக கண்கட்டி வித்தை சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வகை சூனியத்தில், ஒருவர் கயிற்றின் மீது கடந்து செல்லுதல், காற்றில் பறப்பது, தண்ணீரில் நடப்பது, கம்பின் நுனியில் நிற்பது, நாயின் மீது சவாரி செய்வது போன்ற விசித்திரமான செயல்களைச் செய்வதும் அடங்கும்.

இந்த செயல்கள் பார்வையாளர்களை மயக்கி, அவர்களை நம்ப வைக்க சூனியக்காரர்கள் பயன்படுத்தும் தந்திரங்களாகும்.

ஒரு வரலாற்று நிகழ்வு:

ஒரு சமயம், ஒரு சூனியக்காரர் வலீது இப்னு உக்ஃபா என்போரின் சபையில் கயிற்றின் மீது நடந்து, கழுதையின் பின் துவாரத்தின் வழியாக சென்று வாய் வழியாக வெளியேறி கண்கட்டி வித்தைக் காண்பித்துக் கொண்டிருந்ததைக் கண்ட ஜுன்துஃப் இஃப்னு காஃப்  (ரஹ்) என்ற தாபியீ, அந்த சூனியக்காரரை வாளால் வெட்டி கொன்றார்.

இந்த செயலின் மூலம், ஜுன்துஃப் (ரலி) சூனியக்காரர்களை எதிர்க்கும் தைரியத்தை வெளிப்படுத்தினார்.

இதன் காரணமாக, “சூனியக்காரரை கொலை செய்தவர்” என்ற சிறப்புப் பெயரை ஜுன்துஃப் (ரஹ்) பெற்றார்.

கண்கட்டி வித்தை என்பது சூனியத்தின் ஒரு வகையாகும்.

இந்த வகை சூனியத்தில், பார்வையாளர்களை மயக்கி, அவர்களை நம்ப வைக்க சூனியக்காரர்கள் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

சூனியம் என்பது ஒரு தீங்கு விளைவிக்கும் செயலாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.       ( الزواجر عن اقتراف الكبائر. ٢/١٦٥)

எனவே, சூனியக்காரர்களை நம்புவது அல்லது அவர்களின் செயல்களில் பங்கேற்பது தவறானது.

சூனியத்திலிருந்து பாதுகாப்பு பெற சரியான வழி:

எவரேனும் சூனியத்தால் பாதிக்கப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க தவறான வழிகளை  சூனியக்காரர்களை அணுகி, வழிகேடான சடங்குகளைச் செய்து இஸ்லாம் சூனியத்திலிருந்து பாதுகாப்புப் பெற காண்பித்துள்ள  சரியான வழிகளை விட்டுவிடுகின்றனர்.

சூனியத்திலிருந்து பாதுகாப்பு பெற சில வழிகள்:

  1. அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கை வைத்தல்:

சூனியத்திலிருந்து பாதுகாப்பு பெற முதன்மையான வழி, அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கை வைத்தல் ஆகும்.உலகில் நடக்கும் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படி நடக்கின்றன என்பதை நம்புவதன் மூலம், அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை அதிகரித்து.அவனது பாதுகாப்பில் தான் நாம் இருக்கிறோம் என்ற ஆழமான உணர்வு ஏற்படும்.

  1. இஸ்லாமிய கடமைகளை முறையாக நிறைவேற்றுதல்:

இஸ்லாம் விதித்திருக்கும் கடமைகளில் முக்கியமானது தொழுகையாகும் அதை ஜமாத்துடன் பள்ளியில் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் மற்ற நேரங்களில் வருபவர்கள் சுபஹுத் தொழுகையிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த வணக்கம் நம்மை அல்லாஹ்வுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும். 

  1. பாவங்களை விட்டும் விலகி இருத்தல்:

பாவங்கள் செய்வது சூனியத்திற்கு வழிவகுக்கும்.

எனவே,வீட்டில் உருவப்படங்கள், இசைக்கருவிகள் மற்றும் அல்லாஹ்வின் நினைவை விட்டும் திருப்பக்கூடிய சாதனங்கள் வைத்திருப்பது தவறானது. இந்தப் பொருட்கள் வீட்டில் வானவர்களின் வருகையைத் தடுத்து, சைத்தானின் ஆதிக்கத்தை ஏற்படுத்திவிடும்.

  1. குர்ஆன் ஓதுதல் மற்றும் அல்லாஹ்வை தியானித்தல்:

குர்ஆன் ஓதுவது மற்றும் அல்லாஹ்வை தியானிப்பது சூனியத்திலிருந்து பாதுகாப்பு பெற சிறந்த வழிகளாகும்.குர்ஆனின் வசனங்கள் சக்தி வாய்ந்தவை. அவை நம்மை சூனியத்தின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கும்.

  1. அன்றாட சந்தர்ப்ப துவாக்களை ஓதுதல்:

அன்றாட சந்தர்ப்ப துவாக்களை ஓதுவது சூனியத்திலிருந்து பாதுகாப்பு பெற உதவும். காலை மாலை ஓத வேண்டிய துஆக்களை ஓதுவது நபிகளார் காண்பித்து தந்த துஆக்களை புத்தக வடிவிலும் அட்டை வடிவிலும் விநியோகிக்கப்படுகின்றன.அவைகளை ஓதுவதில் கவனம் செலுத்த வேண்டும்

  1. தீய நண்பர்கள் மற்றும், தீய இடங்களை விட்டும் விலகி இருத்தல்:

அல்லாஹ்வுக்கு மாற்றமாக செயல்படுபவர்கள் மற்றும் அல்லாஹ்வுக்கு மாற்றமான செயல்கள் நடைபெறும் இடங்களை விட்டும் நாம் விலகி இருப்பது சூனியத்தின் பாதிப்பை வெட்டும் நம்மை பாதுகாக்கும்.அவர்களுடன் பழகுவது சூனியத்தில் பாதிக்கப்பட வழிவகுக்கும்.  (دروس الشيخ ناصر العقل ٧/١٩)

பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளாத வரையில் நம்முடைய சிறிய பாவங்களை மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான் (4:31)

0Shares