وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم: (مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ. وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ. وَمَنْ سَتَرَ مُسْلِماً، سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ. وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ. وَمَنْ سَلَكَ طَرِيقاً يَلْتَمِسُ فِيهِ عِلْماً، سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقاً إِلَى الْجَنَّةِ. وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلاَّ نَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ، وَحَفَّتْهُمُ الْمَلاَئِكَةُ، وَذَكَرَهمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ. وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ، لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான் 2 யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான் 3 யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். 4 அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். 5யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். 6 மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால் அவர்கள் மீது அமைதி இறங்குகிறது அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர்  மேலும் இறைவன்  அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம்  நினைவுகூருகிறா் 7 அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை  (முஸ்லிம் 2699)

இந்த நபி மொழியில்௳ நபியவர்கள் ஏழு வகையான செய்திகளை கூறியுள்ளார்கள்

ஒவ்வொருவரின் செயலுக்கு ஏற்றக் கூலி கண்டிப்பாக  கொடுக்கப்படும் என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. எனினும் அதன் கூலியோ செயலை விட பன் மடங்கு பெரிதானது. உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் பலவிதமான சிரமங்களின் போது  தேவைகள் ஏற்படுகின்றன. அதற்கு ஒருவர் உதவி செய்யும் பொழுது நாளை மறுமை நாளில் எவரது செல்வமோ, பிள்ளைகளோ, பயனளிக்க முடியாத  பயங்கரமான  அந்த நாளில்  இவர் உலகில் செய்த இந்த சிறிய உதவியினால் அவரது பெரும் சிரமத்தை அல்லாஹ் நீக்கி விடுகிறான். 

முதலாவதாக கூறப்பட்டுள்ள கடும் சிரமத்தை அகற்றிவிடுதல்  என்ற வாசகம். உதாரணமாக ஒருவர் உண்பதற்கு உணவில்லாமல் இருக்கிறார் நோயில் அவதிப்படுகிறார் அல்லது சிறைபிடிக்கப்படடிருக்கிறார் அல்லது வட்டிக் கடனில் சிக்கித் தவிக்கிறார் இது போன்ற  சிரமத்தில் சிக்குண்டவருடைய சிரமத்தை முழுவதுமாக ஒருவர் அகற்றி விட்டால் மறுமையின் பெரும் சிரமத்தை அல்லாஹ் அகற்றி விடுவான் என்பது இங்கு கூறப்பட்டுள்ளது

இரண்டாவது வாசகம்  சிரமத்தில் இருப்பவரின் சிரமத்தை எளிதாக்குதல் அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் எளிதாக்கி கொடுப்பான் இதில் கூறப்பட்டுள்ள சிரமம் என்பதற்கு அறிஞர்கள் கூறும் பொழுது இவரின் அடிப்படை தேவைகளை தவிர்த்து மற்ற காரியங்களிலுள்ள சிரமத்தை எளிதாக்குதல் உதாரணமாக ஒருவர் மற்றவருடன் செய்த கொடுக்கல் வாங்கலில் சிரமம் ஏற்படும் சமயம் நம்மிடம் உதவி கேட்கும் போது ஏதேனும் ஒருவகையில் சிரமத்தை எளிதாக்கி வைத்தல் அதேபோன்று நம்மிடம் கடன் பெற்றதை தவனை வந்த சமயம் அவரிடம் தவணையை  நீட்டிப்புச் செய்தல் நம்மிடம் ஏதேனும் ஒரு பொருளை இரவலாக பெற்று அதை தொலைத்து விட்டால் அதை வாங்காமல் மன்னித்து விடுதல் போன்றவை.

மூன்றாவது வாசகம்  இறை நம்பிக்கையாளரின் குறையை மறைத்தல்இதன் கூலி  இம்மை மறுமையில் அவரின் குறையை அல்லாஹ்  மறைக்கிறான்  இந்த வாசகத்திற்கு இரண்டு விதமான விளக்கங்கள் அறிஞர்கள் கூறுகிறார்கள்.

1  ஒருவர் தனக்கு அல்லது  தனது குடும்பத்தாருக்கு அணிய போதுமான ஆடை இல்லாத போது அவர்களது மானத்தை மறைப்பவர்  இந்த சிறப்பை இம்மையிலும் மறுமையிலும் பெற்றுக் கொள்வார் என்பதாகும்.

2  மறைத்தல் என்பது ஒரு மனிதனிடம் ஏற்படக்கூடிய பாவங்கள் தவறுகள் குறைகள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளும். எனினும் அந்த நபர்களைக் கவனித்து தவறுகளை மறைப்பது  மாறுபடும். உதா : ஒருவர் ஒரு பாவத்தை, தவரை செய்து மனம் வருந்துகிறார். அதை மற்றவர் பார்த்தும் பார்க்காததைப் போல் நடந்துக் கொண்டவர்  இந்த சிறப்பை அடைவார். அதே சமயம் ஒருவர் பாவம் செய்து அதை பகிரங்கப்படுத்தக் கூடியவர், அல்லது பெறுமையாக எண்ணுபவர். இவரைப் பொறுத்தவரை அவர் செய்த பாவத்தை மற்றவரிடம் வெளிப்படுத்தினால் மட்டுமே, தான் செய்த தவறை விடுவார் என்ற பட்சத்தில் அதை பகிரங்கப்படுத்துவது சிறந்ததாகும்.

இந்த நபி மொழியில் 4 வாசகம் மற்றவருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹ் இவருக்கு உதவி செய்வான்  ஒருவர்  தனது  உடலால், பொருளால், அதிகாரத்தால், கல்வியால், அந்த உதவியை தானாக அல்லது பிறரை ஏவுவதன் மூலமாக குறைந்தது அவரின் சிரமம் நீங்க உள்ளத்தால் கவலைக் கொண்டு பிரார்த்தனை செய்வது, இதுபோல் இன்னும் பல முறைகளில், மற்றவரின்  உதவியில் ஈடுபடும் பொழுது இவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான்.   ஹசன் (ரலி) அவர்கள் ஸாஃபித் பன்னானி (ரஹ்)  எபவர்களை  ஒருவரின் உதவிக்காக செல்லும்படி கூறிய பொழுது தான் இஃதிகாஃபில்  இருப்பதாக கூறினார் அதற்கு ஹசன் (ரலி) ஸாஃபித் (ரஹ்)  விடம்   ஒரு முஸ்லிமான சகோதரரின் தேவைக்காகச் செல்வது  ஒரு ஹஜ் செய்த பிறகு மற்றொரு ஹஜ் செய்யும்  நன்மயை விடவும் சிறப்பானதாகும்  என்பதை  ஞாபகமூட்டினார்கள்.

எனவே ஒருவர் மற்றவருக்கு உதவி செய்வதற்கு உறுதிக் கொண்டால் அதை துரிதமான முறையில் நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும் (தலீலுல் ஃபாலிஹீன் 3/38 )

இந்த நபி மொழியில் 5 வது வாசகம் கல்விக் கற்பவருக்கு  சொர்க்கத்தின் பாதையை எளிதாக்குகிறான் இதில் கல்வியின் பாதை என்பது மார்க்கக் கல்வியான குர்ஆன், ஹதீஸ், மார்க்க சட்டங்களை  அடைவதற்காக ஒருவர் நடந்து சென்றுக் கற்கிறார் அல்லது இருந்த இடத்தில் படித்து விளங்குவதில் அல்லது  மனனமிடுவதில்  அல்லது  மற்றவர்களோடு கலந்துரவாடுவதன் மூலமும் ஈடுபடுபவர்கள் அனைவரும் இந்தச் சிறப்பை அடைந்துக் கொள்ள முடியும். 

மேற்குக் கூறப்பட்ட மற்ற வாக்கியங்களை காட்டிலும் இதில் சொர்க்கத்தின் பாதையை எளிதாக்குகிறது என்பதன் காரணம் ஒருவர் எல்லாவித நலவுகளையும் மார்க்கக் கல்வியை கற்பதினால்  மட்டுமே அந்த  நற்காரியங்களை நடைமுறைப்படுத்த முடியும் எனவே தான் சுவனம் செல்ல கல்வியை முக்கியத்துவமாக சொல்லப்பட்டுள்ளது. 

இந்த நபி மொழியில் 6 வது வாசகம் மார்க்கக் கல்விக்காக அல்லாஹ்வின் வீட்டில் ஒன்றுக்  கூடுபவர்களைப் பற்றி நான்கு சிறப்புகள் கூறப்பட்டுள்ளன 1 அமைதி நிலவுகிறது 2 அல்லாஹ்வின் அருள் அவர்களைச் சூழ்ந்துக் கொள்கிறது 3 வானவர்கள் அவர்களின் சபைக்கு வருகிறார்கள் 4 இந்த கூட்டத்தினரைப் பற்றி அல்லாஹ் தன்னிடம் இருக்கும் வானவர்களிடம் புகழ்ந்துப் பேசுகிறான்.
பள்ளியில் ஒன்றுக் கூடுபவர்கள்:  இதில் கல்விக்காக ஒருவர் பள்ளியிலோ  வீட்டிலோ மற்ற இடங்களிலோ ஒன்று சேர்ந்தாலும் இந்தச் சிறப்பை அடைந்துக் கொள்வார்கள் என்பதாகும்.

இந்த நபிமொழியின் 7 வது வாசகம் நற்காரியங்களில் பின்தங்கியவருக்குக் குலச்சிறப்பு மட்டும் பயனளிக்காது  அதாவது ஒருவர் தனது வாழ்வில் அல்லா் மற்றும் அவனது தூதரின் கட்டளைகளை எடுத்து நடந்தால்  மட்டுமே அவர் அல்லாஹ்வின் பார்வையில் உயர்வானவராகவும்  சிறப்பு மிக்கவராகவும் கருதப்படுவார். அவர் எந்த குலம் கோத்திரத்தில் இருந்தாலும் சரியே!. அதே சமயம் ஒருவர் உயர்ந்த குடும்பத்தில் பிறந்து தனது வாழ்வில் எந்த நற்காரியமும் செய்யவில்லையெனில் அவரது குடும்பச் சிறப்பு மட்டும் எப்பயனையும் தராது. எனவே தான் நபிகளாரின் குடும்பத்தில் உள்ள பலர் இணைவைப்பில் இருந்தமையால் நபியவர்கள் அவர்களை  தனது நேசத்திற்குரியவர்கள் இல்லை என்றும் கூறுகிறார்கள்.  (ஹதிய்யா ஷரஹ் ரியாலுஸ்ஸாலிஹீன்)

எனவே நாம் நம்மால் முடிந்தவரை பிறரின் சிரமங்களை அகற்றுவதிலும் மார்க்கக் கல்வியிலும் கவனம்  செலுத்துவோமாக!

0
Would love your thoughts, please comment.x
()
x