سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِيْهَاۤ اٰيٰتٍۭ بَيِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ

(மனிதர்களே! இது) ஓர் அத்தியாயம். இதை நாமே இறக்கி (இதிலுள்ள சட்ட திட்டங்களை) நாமே விதித்துள்ளோம். மேலும், இதைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு தெளிவான வசனங்களையே நாம் இதில் இறக்கிவைத்தோம்.

வசனம் 1
பல வசனங்களைக் கொண்ட ஓர் அத்தியாயத்தை நாம் இறக்கி வைத்துள்ளோம். இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் பல வசனங்கள் நம்பிக்கையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய கடமைகளையும், அந்தக் கடமைகளை தவறுபவர்களுக்கு நிலைநாட்டப்பட வேண்டிய தண்டனைகளையும், ஒன்றன்பின் ஒன்றாக விவரித்திருக்கின்றோம். மேலும் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கும் பல தெளிவான சான்றுகளையும் அத்தாட்சிகளையும் இறக்கி வைத்துள்ளோம். அவைகளை சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு அதில் உள்ள கருத்துக்களை விளங்கி படிப்பினை பெற்று தனது வாழ்வை அல்லாஹ் விரும்பும் முறையில் தனது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு அவ்வாறு இறக்கி உள்ளோம் .
—————————————————————————–
இந்த வசனத்தில்(நாம் இறக்கி வைத்ததோம்)  என்று பன்மையாக  கூறியிருப்பது‌ தனது கண்ணியம் மேன்மையை உணர்த்துவதற்காகவும், மேலும் இங்கு இந்த அத்தியாயத்தின் முக்கியத்துவத்தை காட்டுவதற்காகவும் கூறப்பட்டதாகும். இவ்வாறே குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தன்னைப் பற்றி கூறுகையில் பன்மையான சொல்லில் கூறுவது வழக்கமாகும்.

வசனம் 2
திருமணமாகாத ஆண் பெண் விபச்சாரம் செய்திருந்தால் அவர்களில் ஒவ்வொருவருக்கும் 100 கசையடி அடிக்க வேண்டும். நீங்கள் உண்மையில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பின் அவர்களுக்கு தண்டனைகளை நிறைவேற்றும் சமயம் அவர்கள் மீது இரக்கம் கொண்டு தண்டனைகளை நிறைவேற்றுவதை விட்டும் பின்வாங்கி விட வேண்டாம். மேலும் தண்டனைகள் நிலைநாட்டப்படும் சமயம் விசுவாசம் கொண்ட ஒரு சிறிய கூட்டமாவது அதை காணும் விதமாக நிறைவேற்றுங்கள்.
காரணம் உங்களை காட்டிலும் தண்டனைகளை நிறைவேற்ற சொல்பவன் மகாகிருபையாளன் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அறிஞர்கள் கூறுகின்றனர் தண்டனைகளை நிலைநாட்டும் சமயம் ஏதேனும் ஒரு நம்பிக்கையாளர்களின் ஒரு கூட்டம் காண வேண்டும் அவர்கள் காணாத முறையில் நிலைநாட்டப்பட்டால் தண்டனைகளை மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.
تفسير عثيمين

இவ்விடத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய இரண்டு தண்டனைகளில் ஒன்றை (100 கசையடி) மட்டும் கூறப்பட்டுள்ளது. மற்றொன்று விபச்சாரம் செய்தவரை அவர் செய்த இடத்தை விட்டும் வேறு இடத்திற்கு ஒரு வருட காலம் நாடு கடத்த வேண்டும். அவர் செல்லும் அவ்விடம் விபச்சாரத்தை அனுமதிக்கப்படாத இடமாக இருக்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
تفسير عثيمين

இந்த தண்டனையின் மூலமாக ஏற்படக்கூடிய பயனை அறிஞர்கள் கூறும்போது ஒருவன் தவறு செய்து இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு மாற்றப்படுவதினால் அந்த தவற்றை அவன் மறந்து விடுகிறான். மேலும் அறிமுகமில்லாத ஒர் இடத்திற்கு செல்வதினால் அவ்விடத்தில் தன்னை ஓர் அந்நியனாகவே கருதுவான். எனவே இங்கு தனது இச்சையை தூண்டும் செயலில் கவணம் செலுத்த மாட்டான்.
மேலும் தான் செய்த தவற்றிற்கு தண்டனையாக அனுப்பப்பட்டதை எண்ணும் போது ஒருபோதும் இச்சை பற்றிய சிந்தனையே ஏற்படாது.

0
Would love your thoughts, please comment.x
()
x