அத்தியாயம் 24 சூரத்துந் “நூர்”
இந்த அத்தியாயத்தின் பெயர் “பேரொளி” என்பதாகும்.
இதற்கு இப்பெயர் கூற இரண்டு வித காரணங்களை அறிஞர்கள் கூறுகின்றனர்.
1 இந்த அத்தியாயத்தில் பேரொளி என்ற வார்த்தை வந்துள்ளது.
2 இந்த அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் அதிகமான வசனங்கள் பத்தினித்தனத்தை பாதுகாப்பாதும் உயர்வான நற்குணத்தை போதிக்கும் கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. இவைகளில் கூறப்படும் போதனைகளை கடைபிடிக்கும் போது மனிதனின் உள்ளத்தில் ஒரு வித பிரகாசம் ” பேரொளி” ஏற்படும் என்ற அடிப்படையில் இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அத்தியாயம் மதினாவில் இறங்கியதாக எல்லா அறிஞர்களும் ஏகோபித்து கூறுகின்றனர்.
இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் வசனங்களின் கருத்துக்கள் அனைத்தும் மானத்தை பாதுகாப்பதும் பத்தினித்தனத்தை பேணுவது சம்பந்தமான சட்ட திட்டங்களும், உயர்வான குணங்களும் பற்றி கூறப்படுகின்றன.
இந்த அத்தியாயம் அமைந்திருக்கும் முறை.
1 இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் சட்டதிட்டங்களையும் உயர்வான குணங்களையும் ஏற்று அதற்கு வழிபட வேண்டும் என்ற செய்தியுடன் துவங்கப்படுகிறது.
2 விபச்சாரத்தின் தண்டனைகளும் அதை நிறைவேற்றும் முறையை வழிகாட்டப்படுகிறது.
3 அவதூறு பேசுபவர்களின் தண்டனைகளும் அதனால் அவர் இழக்கும் மதிப்பையும் கூறப்படுகிறது.
4 மனைவி ஒழுக்கக்கேடாக நடந்ததை கணவனே கண்டால் அதன் சட்டமும் நடைமுறைப்படுத்தும் விதங்களும் கூறப்படுகிறது.
5 நம்பிக்கையாளர்களின் தாயான ஆயிஷா (ரலி) அவர்களின் வாழ்வில் நடந்த அவதூறு சம்பவமும் அதில் நாம் எடுக்கவேண்டிய படிப்பினைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
6 வீட்டில் நுழையும் போது அனுமதி பெறும் ஒழுக்கங்களும் பார்வையை பேணுவதையும் மறைவிடத்தை பாதுகாப்பதும்.
7 பெண்கள் தங்களின் அலங்காரங்களை மறைத்துக் கொள்வதும் அதை பார்ப்பதற்கு ஆகுமானவர்கள் யார் என்பதை விவரிக்கப்பட்டுள்ளது.
8 உங்களுக்கு கீழ் உள்ள ஆண் பெண் அடிமைகளுக்கு முறையான திருமணம் செய்து வைத்தல் பற்றியது.
9 இப்பிரபஞ்சத்தில் அல்லாஹ்வின் ஆற்றலை பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளது.
10 நயவஞ்சகர்களின் தீய குணங்களும் அவர்களின் தீய முடிவுகள் பற்றியதும்.
11 நம்பிக்கையாளர்கள் முறையாக மார்க்கத்தை கடைபிடித்தால் பூமியில் ஆட்சி அதிகாரமும் நிம்மதியான வாழ்விற்கு உண்டான வாக்குறுதி தரப்பட்டுள்ளது.
12 உண்மையான நம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய உயர்வான பண்புகள் பற்றி கூறப்பட்டுள்ளது. تفسير المحرر , تفسير عثيمين