قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏

(நபியே!) இறைஞ்சுவீராக: “என் இறைவனே! எந்த ஒரு வேதனையைப் பற்றி இவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகின்றதோ அதனை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே நீ நிகழச்செய்தால், என் இறைவா! கொடுமை இழைக்கும் இந்த சமூகத்தாருடன் என்னையும் சேர்த்து விடாதே!”

வசனம் 23 93 – 100
இணை வைப்பவர்களையும், அல்லாஹ்விற்கு குமாரர் இருப்பதை வாதிடுபவர்களையும் பற்றி கூறிய பின்னர் அவர்களுக்கு வேதனை இறக்கப்படும் என்பதையும் அல்லாஹ் நபிகளாருக்கு அறிவித்திருந்தான். எனினும் அவ்வேதனை நபிகளாரின் வாழ்நாளில் நிகழுமா அல்லது நபி(ஸல்) மரணித்த பின்பு நிகழுமா என்பதை குறிப்பிடவில்லை. எனவே இவ்விடத்தில் அல்லாஹ் நபிகளாரிடம் இவ்வாறு பிரார்த்திக்கும்படி கூறுகின்றான்.
94 என்ற நபியே! (ஸல்) நீங்கள் இவ்வாறு பிரார்த்தனை செய்யுங்கள். “அந்த இணைவைப்பாளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையை எனக்கு காண்பிக்க செய்வாயாக ! எனினும் அச்சமயம் அந்த நாசகார கூட்டத்தில் என்னை ஆக்கிவிடாமல் அவர்களிலிருந்து பாதுகாப்பாயாக” என்று பிரார்த்திக்குமாறு கூறினான்.
95  நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவ்வேதனையை இறக்கி வைப்பதற்கு நாம் எப்போதும் ஆற்றல் பெற்றோர்களாகவே இருக்கின்றோம். எனினும் அவர்களுக்கு உடனடியாக இறக்கப்படவில்லையே என்று தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். அவர்களை தண்டிக்காமல் பிற்படுத்தி இருப்பதிலும் ஒர் ஞானமுண்டு.
96 அந்த இணைவைப்பாளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவ்வேதனை கண்டிப்பாக வந்தே தீரும். அதில் எவ்வித ஐய்யமும் இல்லை என்று வந்த பிறகு நம்பிக்கையாளர்களுக்கு ஒரு வித நிம்மதி ஏற்பட்டது. எனினும் அவர்களின் மூலம் ஏற்படும் சிரமங்களுக்கு தாங்கள் பதிலடி கொடுக்க வேண்டாம். அவர்களின் அநியாயங்களையும் அத்துமீறல்களையும் பொறுத்துக் கொண்டு அழகிய பண்புகளால் அவர்களை அணுகுங்கள். இதுவே உயர்ந்த இஸ்லாமிய நெறிமுறையில் உள்ளதாகும். அவர்கள் என்னைப் பற்றி கூறும் பொய்களையும் தீய வார்த்தைகளையும் உங்களைப் பற்றி கூறும் தீய சொற்களையும் நாம் அறிந்தே வைத்திருக்கிறோம்.
97 உயர்ந்த நற்குணத்தை பற்றி கூறிய பின் அதற்கு தேவையான இரண்டு பிரார்த்தனைகளை இங்கு குறிப்பிடுகிறான். ஒன்று எந்த ஒரு காரியத்திலும் ஷைத்தான் குறிக்கிடுவதில் இருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடிக் கொண்டே இருக்க வேண்டும் எனது இரட்சகா ! “ஷைத்தானின் ஊசலாட்டங்களில் இருந்தும் அவனின் வழிகேடான செயலில் இருந்தும் நான் உன்னிடமே பாதுகாப்பு தேடுகிறேன்.”
அதிலும் குறிப்பாக மனிதன் இவ்வுலக வாழ்க்கையை விட்டு மறு உலக வாழ்க்கைக்கு பயணிக்கும் சமயம் அவனது ஊசலாட்டங்கள் மிகவும் அதிகமாக இருக்கும் எனவே அத்தருணத்திலும் தன்னை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த பிரார்த்தனை கூறப்படுகிறது. ‘என் இரட்சகா ! எனக்கு மரணம் நேரம் நெருங்கும் அச்சமயத்திலும் அவன் என்னிடம் குறுக்கிடாமல் இருக்க உன்னிடமே பாதுகாவல் தேடுகிறேன்.’
98 அழியும் இவ்வுலகை விட்டு அழியாத மறு வாழ்வை நோக்கி அடியெடுத்து வைக்கும் அவன், தான் செய்த கருமங்களால் அங்கு தனக்காகன அழிவுகளையும் அவலங்களையும் கண்டு அந்தோ பரிதாபமே ! எனக்கு வழங்கப்பட்ட இவ்வாழ்வை நான் வீணடித்து விட்டேனே!‌ மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால் வாய்ப்பை பயன்படுத்தி இறைவன் விரும்பும் வழியில் வாழ்வை அமைத்து வளமான மறுவாழ்வில் வெற்றி பெற்று விடுவேனே என்று வாய்ப்பு கேட்டு ! கத்துவான் கதருவான். எனினும் அவனின் இந்த கத்தலும் கதறுதலும் அச்சமயம் கண்டுகொள்ளாத வீணான வார்த்தைகளாக மாறிவிடும். இன்னும் சொல்லப்போனால் அவன் மரணித்த பின் இவ் உலகை விட்டு சென்றுவிட்டால் மறு உலக வாழ்விற்காக எழுப்பப்படும் நாள் வரை அந்த புதைக்குழியில் தங்கியிருப்பான் . மேலும் அவன் அங்கிருந்து ஒருபோதும் அவனால் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்பி வரவே இயலாது.
கதாதா (ரஹ்) கூறுகிறார்கள் ‘நிராகரித்தவன் மரண சமயம் மறுமை வாழ்வை மறந்து மனம் போன போக்கில் வாழ்ந்து தனது மரண நேரத்தில் இவ்வுலகில் நற்கருமங்கள் செய்வதற்காகவே மீண்டும் அனுப்பப்பட வேண்டுமென எண்ணுவான். அவன் உலக செல்வங்களை ஈட்டவோ, களியாட்டங்களில் காலத்தை கழிக்கவோ எண்ண மாட்டான். அந்த நிலை வரும் முன் மறுமைக்காக தயாரிப்பு செய்யும் அந்த நல்லோர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக’ என்று பிராத்தித்துள்ளார்கள்.

0
Would love your thoughts, please comment.x
()
x