இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பெரும்பாவங்களில் பத்தாவது: ரமலான்
மாதத்தில் எவ்வித தங்கடமும் இல்லாமல் நோன்பை விட்டு விடுதல்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஐந்து நேரத் தொழுகைகளும் ஒரு ஜும்ஆ முதல் அடுத்த ஜும்மா வரையிலும் ரமலான் நோன்பு மறு ரமலான் வரையிலும் பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்திருந்தால் இடையிலே ஏற்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும். நூல் : புஹாரி,முஸ்லிம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது 1 : வழங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை இன்னும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என்று சாட்சி சொல்லுவது.
2 : தொழுகைய நிலை நாட்டுவது.
3 : ஜகாத்தை நிறைவேற்றுவது. 4:
ரமலான் மாதம் நோன்பு  நோற்பது*
5 : ஹஜ் செய்வது.

இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்:
இஸ்லாத்தின் அடிப்படை மூன்றின் மீது அமைந்திருக்கின்றது 1: சாட்சி  சொல்லுவது.
2: தொழுகையை  நிலைநாட்டுவது. மூன்று:
நோன்பு நோற்பது. இவைகளில் ஏதேனும்  ஒன்றை ஒருவர் விட்டுவிட்டால் அவர் நிராகரித்தவராக ஆகிவிடுகிறார்.
ஒருவர் ரமலான் மாதத்தை அடைந்து எவ்வித நோயில்லாமல், பிற காரணங்கள் இல்லாமல் நோன்பை விட்டு விட்டால் அது விபச்சாரம் , மற்றும்  மது அருந்துவதை காட்டிலும் மிக மோசமான பாவமாகும்.
எந்த அளவுக்கு எனில் அவரது இஸ்லாமே சந்தேகத்திற்குரியதாக கருதப்படும் என்றும் அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

அல் கஃபாயிர் - இமாம் தஹஃபி __________________________

இஸ்லாத்தில் நோன்பு என்பது ஹிஜ்ரி இரண்டாம் வருடம் விதி ஆக்கப்பட்டதாகும்.  இது அரபு மாதத்தில் ரமலான் என்ற ஒன்பதாம் மாதம் முழுவதும் நோற்க்கப்படும் ஓர் வணக்கமாகும்.
அந்நாட்களில் அதிகாலை நேரத்தில் இருந்து மாலை சூரியன் மறைகின்ற வரை உணவு உண்பது, குடித்தல், இல்லற வாழ்வில் ஈடுபடுதல் போன்ற காரியங்களை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வதற்கு கூறப்படும்.
இஸ்லாமிய வணக்கங்களில் முக்கியமான கடமைகளில் ஓர் அங்கத்தை பெறுகின்றது. எனவேதான் இஸ்லாமிய பேரறிஞர்களிடம் இக்கடமையை நிறைவேற்றாதவனை இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவன் என்றும் சிலர் கருதுகின்றனர்.
இக்கடமைக்கு மற்ற ஏனைய கடமைகளை காட்டிலும்  ஒரு தனிச்சிறப்பு இருக்கின்றது. காரணம் மற்ற வணக்கங்களை பொருத்தவரை அதற்கு வெளியங்கத்தில் ஓர் செயலை காண முடியும் எனினும் நோன்பைப் பொறுத்தவரை அதை நோற்றவருக்கு மட்டுமே தெரிய வரும் மற்ற மனிதர்களால் இவரின் இந்த நற்செயலை பார்வையால் காண முடியாது காண முடியாத ரகசியமான ஒன்றாகும். எனவேதான்  இந்த செயலின் கூலியை தாமே கொடுப்பதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவ்வாறே அடியான் ஏதேனும் பிறருக்கு அநீதமிழைத்திருந்தால் இவரின் நற்செயல்களை அநீதிக்குள்ளானவருக்கு வழங்கப்படும் போது நோன்பின் நன்மைகளை மட்டும் நோற்றவரிடமிருந்து எடுக்கப்படாது காரணம் இது அவருக்கே சொந்தமானது என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இவ்வணக்கத்தில் பொறுமையின் மூன்று வகைகளையும் கடைபிடிக்கப்படுகின்றன.
1) நிறைவேற்றுவதில் உள்ள பொறுமை.
2) தடுத்தவைகளை விட்டும் தன்னை காத்துக் கொள்வதில் ஏற்படும் பொறுமை.
3) நோன்பின் மூலம் ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்ளும் பொறுமை.
அல்லாஹ் தனக்கு ஏற்படுத்திய விதியை (சிரமத்தை)
شرح رياض الصالحين ابن عثيمين

 பொறுமை.
அல்லாஹ் தனக்கு ஏற்படுத்திய விதியை (சிரமத்தை)
شرح رياض الصالحين ابن عثيمين

நோன்பை விடும் பெரும்பாவத்திலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக!
__________________________
அல்லாஹ் திருமறையில் நம்முடைய “பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளாத வரையில் நம்முடைய சிறிய பாவங்களை மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான் (4:31)

0
Would love your thoughts, please comment.x
()
x