طَـعَـامُ الاِثْـنَـيْـنِ كَـافِـي الـثَّـلاَثـةِ، وَطَـعَـامُ الـثَّـلاَثَـةِ كَـافِـي الأَرْبَـعَـةِ
நபி (ஸல்) கூறினார்கள் : இருவரின் உணவு மூவருக்கு போதுமானதாகும். இன்னும் மூவரின் உணவு நாள்வருக்கு போதுமானதாகும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி). நூல் : மஆலிமுஸ் ஸுன்னதிந் நபவிய்யா 2654
இந்த அறிவிப்பில் கிடைக்கும் பாடங்கள்
1 ஒருவரின் உணவு இருவருக்கு போதுமானதாகும் என்றும் இருவரின் உணவு நால்வருக்கு போதுமாகும் என்று சொல்வதின் மூலம் உணவை பலர் ஒன்று சேர்ந்து உண்ணுவதால் உணவில் அபிவிருத்தி ஏற்படும் என்பது தெரிய வருகிறது. மற்றொரு அறிவிப்பில் “ஒன்று சேர்ந்து உண்ணுங்கள் பிரிந்து விட வேண்டாம்” என்றும் வந்துள்ளது.
كتاب تطريز رياض الصالحين
2 ஒருவரின் உணவு இருவருக்கு போதுமானதாகும் என்பதன் மூலம் உணவு குறைவாக இருந்தாலும் மற்றவர்களையும் அதில் சேர்த்துக் கொள்வதில் கவனம் வைக்க வேண்டும். ஏனெனில் நமது உணவில் மற்றவர் சேரும் போது உணவில் வளம் கிடைக்கிறது. உணவு குறைவாக இருந்தாலும் வளம் ஏற்படவே செய்யும். شرح مسلم
3 ஒருவருக்காக உணவு தயாரிக்கப்பட மற்றவர் வரும் சமயம் அவர் பெருந்தன்மையாக தன்னோடு அவரையும் அழைத்துக் கொள்ள வேண்டும். எனவே நமக்காக மட்டும் தயாரித்த சமயத்தில் யாரேனும் ஒருவர் வர, இது ஒருவருக்கான உணவு உனக்கான உணவுவை எடுத்து வாரும்! இது இருவருக்கு போதாது. போன்று சொல்லி கஞ்சத்தனம் செய்யலாகாது .
شرح رياض الصالحين ابن عثيمين
4 ஒருவருக்காக தயார் செய்த உணவை அவர் மட்டும் வயிறு நிறைய சாப்பிட்டாலும் அன்றய பொழுதை அவரால் கழிக்க முடியும். அதே சமயம் அந்த உணவில் மற்றவரையும் சேர்த்துக் கொண்டு அறை வயிறாக உண்டாலும் அன்றய பொழுதை அவரால் கழிக்க முடியும். எனவே நமது உணவில் மற்றவரை சேர்த்துக் கொள்வதிலும், மற்றவருக்கு கொடுப்பதிலும் கவனம் வைக்க வேண்டும்.
شرح رياض الصالحين حطيبة