اَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ يَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِيْنَ
என்ன, இவர்கள் இந்த (இறை)வாக்கைச் சிந்திக்கவில்லையா? அல்லது இவர்களின் பண்டைக்கால மூதாதையர்களிடம் ஒருபோதும் வந்திராத ஏதேனும் கருத்தையா இவர்களிடம் இது சமர்ப்பிக்கின்றது?
இன்று நம்மில் சிலர் குர்ஆனை பொதுமக்களால் வாசித்து விளங்குல் சிரமம் என்று எண்ணியவர்களாக இறை வசனங்களை படிப்பதிலிருந்து விலகி இருக்கின்றனர். இது அவர்கள் செய்யும் ஓர் தவறு என்று அறிஞர்கள் கூறுகின்றனர். குர்ஆனை விரிவுரை செய்வதென்பது வேறு அதை விளங்குதலென்பது என்பது வேறு.
(تفسير) விரிவுரை செய்வது என்பது குர்ஆன் வசனங்களையும், இது சம்மந்தமாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் செய்திகளையும், நபித்தோழர்கள் (ரலி) அவர்கள் இவ்வசனத்திற்கு கூறிய விளக்கங்களையும், அவர்களின் மாணவர்களான தாபியீன்களின் விரிவுறைகளையும் கற்றறிந்த பின் அவைகள் அனைத்தையும் தன் சிந்தனையில் முன் வைத்து வசனங்களில் ஆய்வு செய்து அதில் கூறப்பட்டுள்ள சட்டங்களை கூறி ஒரு காரியத்தை ஆகுமாக்குதல், அல்லது தடை செய்தல், அதேபோல் ஏதேனும் ஒரு வழக்கிற்கு தீர்ப்பு வழங்குதல், சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றவை அதில் மேற்கொள்ளப்படும்.
எனினும் குர்ஆனை விளங்குதல் என்பது வசனத்தில் இருக்கும் கருத்துக்களை படித்து நாம் உபதேசம் பெறுவதாகும். உதாரணமாக வானம் பூமியை படைத்ததையும், உலகிலுள்ள மலை, மரம்,கடல் , நதிகள், ஊற்றுகள், தாவரங்கள், மலர்கள், கனி வகைகள், உயிரினங்கள், கால்நடைகள், பறவைகள், போன்றவற்றினால் நாம் அனுபவிக்கும் பயன்களை பற்றி கூறி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் படி கூறப்படும். அதேபோல் மனிதனிடம் இருக்கவேண்டிய உயர்வான பண்புகளையும் மறுமையில் நல்லோர்களுக்கு தயார் செய்யப்பட்டுள்ள சுவன இன்பங்களையும் அவன் தவிர்க்க வேண்டிய தவறான குணங்களைப் பற்றியும் பாவிகளுக்கு மறுமையில் கொடுக்கப்படும் நரக வேதனைகளையும் கூறப்பட்டிருப்பதனால் அப்பாவங்களிலிருந்து விலகும்படி எச்சரிக்கப்பட்டிருக்கும். மேலும் அல்லாஹ் படைத்திருக்கும் ஆச்சரியமான அற்புதங்களையும் அவனது அருள் பாக்கியங்களை பற்றி கூறப்பபடும் போது அதை படிக்கும் ஒருவரது உள்ளத்தில் அல்லாஹ்வின் கண்ணியமும் மதிப்பும் உண்டாகி அவன் விரும்பும் காரியங்களை வாசிக்கும் போது அவனது நெருக்கத்தை அடைய வேண்டும் என்று பேராவல் கொண்டு நற்காரியங்கள் செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டு அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய வேண்டும் என்ற பேராவல் உண்டாகும். அதேபோல் அவன் எச்சரித்த காரியங்களிலிருந்து விலக வேண்டும் என்றும் அச்சம் ஏற்பட்டு அவைகளில் இருந்து விலகிட வாய்ப்புண்டாகும். இவைகள் குர்ஆனின் கருத்துக்களை விளங்குவதினால் ஏற்படும் பயன்களில் ஒன்றாகும். இதற்கு அரபு மொழியை அறிய வேண்டும் என்றோ இந்த வசனம் சம்பந்தமாக நபிகளாரின் அறிவிப்புகளையும், நபித்தோழர்களின்,
விளக்கங்களையோ, முன் சென்ற நல்லோர்களின் கூற்றுகளையோ நாம் அறியவேண்டிய அவசியம் இருக்காது.
இது : الفرق بين التدبر و التفسير – الدكتور فريد الأنصاري என்ற ஆக்கத்தின் சில பகுதி