يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ؕ
(நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) “என் தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை நன்கறிவேன்.
அத்தியாயம் 23 வசனம் 51 – 56
தூதுவர்களே! தூய்மையான நல்ல உணவுகளை உண்ணுங்கள். மேலும் நற்கருமங்களை செய்து கொள்ளுங்கள் நீங்கள் செய்பவற்றை அவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அடியார்கள் செய்யும் எந்த செயலும் அவனை விட்டும் மறைந்து விடாது. .
மேலும் உலகில் அனுப்பப்பட்ட தூதுவர்கள் அனைவரும் உலகிற்கு இஸ்லாம் என்ற ஒரே மார்க்கத்தையே கொண்டு வந்தனர். எனவே, நீங்கள் அதை ஏற்று அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்து நடப்பதன் மூலமும் அவன் தடுத்த காரியங்களை விட்டும் விலகி இருப்பதன் மூலம் அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.
எனினும் தூதுவர்களை ஏற்றுக் கொண்ட சமுதாயத்தவர்கள் தூதுவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் சிலதை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே முழுமையான மார்க்கமாக கருதுவதோடு. மார்க்கத்திலுள்ள *ஏனைய* கடமைகளைப் பின்பற்றுபவர்களை வழிதவறியவர்கள் என்றும் தாங்கள் செய்கிற சொற்ப காரியங்களால் பெருமிதம் அடைகின்றனர்.
எனவே *இச்சிந்தனையாளர்கள்* அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நாளின் வேதனை வருகின்ற வரை அவர்களின் அசத்திய கொள்கையிலேயே விட்டு விடுங்கள்.
அசத்திய கொள்கையில் இருப்பவர்களுக்கு நாம் வழங்கிய *பொருட்ச்* செல்வத்தாலும் பிள்ளை செல்வத்தினலும் மகிழ்ச்சியடைந்து இச் செல்வங்களனைத்தும் அல்லாஹ் அவர்களை நேசிப்பதன் *வெளிப்பாடாகவே* கருதுகின்றனர். இல்லை ! இல்லை ! இவைகள் அவர்களுக்கு சோதனையாகவே வழங்கப்பட்டவைகளென்றும் திடீரென்று அவர்கள் பிடிக்கப்படுவார்கள் என்பதினையும் கொஞ்சமும் உணர்வதில்லை..
இதற்கு முந்தைய வசனத் தொடரில் உலகில் அனுப்பட்ட தூதுவர்களைப் பற்றியும் ஈஸா நபி (அலை) அவர்களைப் பற்றி கூறப்பட்டது.
இங்கு உண்ணுவதைப் பற்றிக் கூறுவதன் காரணம் தூதுவர்களின் உபதேசங்களை ஏற்க மறுத்ததற்கு கூறும் காரணங்களில் ஒன்று இவர் உண்ணுகிறார் குடிக்கிறார் என்றனர் ஆனால் உலகில் அனுப்பப்பட்ட அனைத்து தூதுவர்களும் உண்ணுபவர்களாகவும் நற்கருமங்கள் செய்பவர்களாகவுமே இருந்தனர் என்பதைக் கூறி இந்த வசனத்தில் உலகில் அனுப்பப்பட்ட அனைத்து தூதுவர்களும் உண்ணுபவர்களாகவே இருந்தார்கள். உண்ணுவதென்பது தூதுத்துவ தகுதிக்கு மாற்றமானதில்லை என்று கூறி அதற்கு விளக்கம் அளிக்கின்றான்.
ஈஸா (அலை) இவ்வுலகில் உண்பவர்களாகவும் நற்கருமங்கள் செய்தவராகுமே இருந்தார்கள். அப்படியிருக்க எவ்வாறு அவர்கள் வணங்கப்பட முடியும் என்பதைக் கூறி கிறித்தவர்கள் வணங்கி வருகின்றனர் ஈஸா நபி (அலை) அவர்கள் அவர்கள் வணங்கப்பட தகுதியற்றவர்கள்.
تفسير المحرر
அசத்தியவாதிகள் தங்களுக்கு வழங்கப்படும் பொருள் செல்வங்களைக் கண்டு இது துரிதமாக கொடுக்கப்படும் வெகுமதிகளாக எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறானது.ஏனெனில் அவை அவர்களுக்கு சோதனையாக வழங்கப்பட்டவைகளாகும் மிக விரைவில் பிடுங்கப்படும்.
இந்த வசனத்தில் நல்லதை உண்ணுவதையும் நற்கருமங்கள் செய்வதையும் சேர்த்து சொல்லப்பட்டிருப்பதினால் ஒருவர் ஆகுமான முறையில் வாழ்வாதாரத்தை தேடிவந்தால் அவரிடமிருந்து நற்கருமங்கள் வெளிப்படுவதற்கு வழிவகுக்கும் என்பதை இந்த வசனம் சுட்டிக் காண்பிக்கின்றது.
ابن كثير
நற்கருமங்கள் செய்வது அல்லாஹ்விடம் நெருக்கத்தைப் பெற்றுத் தருவதைப்போல் ஆகுமான முறையில் வாழ்வாதாரத்தை தேடுவதும் அல்லாஹ்விடம் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் என்பதை அறிய முடிகிறது. .
நல்லதையே உண்ணுங்கள் என்று அல்லாஹ்விடம் உயர்வான கண்ணியத்தைப் பெற்ற தூதுவர்களுக்கே அல்லாஹ் சொல்வதன் மூலம் அவர்களை பின்பற்றுபவர்களோ மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகின்றது.
நிராகரிப்பவர்களும் பாவிகளும் அத்து மீறுபவர்களும் தாங்கள் செய்யும் காரியங்களைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அதன் முடிவு மிக விரைவில் மோசமானதாக இருக்கும் என்பதை அவர்கள் அறிவதில்லை. சுவையான மாமிசத்தில் விஷம் தேய்க்கப்பட்டால் உண்ணுபவர் துரிதமாக கிடைக்கும் சுவையை மட்டுமே உணர்வார் எனினும் அதன் பாதிப்பு மிக விரைவில் அவனை அடைந்து அவனையே அழித்துவிடும் என்பதை உணர மாட்டார்.
சுத்தமான நல்ல உணவை உண்பதால் உடல் ஆரோக்கியம் பெற வழி வகுப்பது போல் நற்கருமங்கள் செய்வதனால் உள்ளம் ஆரோக்கியம் பெறுவதற்கு வழிவகுக்கும் *என்பதும்* தெரிகிறது. .
تفسير المحرر
அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கப்பட தகுதியானவன் அவனுக்கு யாதொரு இணையுமில்லை என்ற இஸ்லாமிய சித்தாந்தத்தில் முன் சென்ற அனைத்து சமூக மக்களும் ஒருமித்த கருத்துக் *கொண்டிருந்தனர்* . எனினும் ஒவ்வொரு சமூகத்தவர்களும் தங்களிடம் இருக்கும் வழிகேட்டை நேர்வழி என்று கருதி அதைக் கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
ابن كثير