قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏

“என்னுடைய இரட்சகனே! என்னை இவர்கள் பொய்யாக்கியதன் காரணமாக நீ எனக்கு உதவி செய்வாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார். வசனம் 26 - 30

சமுதாய மக்கள் கூறியவற்றை அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்த நூஹ் (அலை) அவர்கள் தனது சமூகத்தவர்கள் தம்மை பொய்படுத்திய காரணத்தினால், யா அல்லாஹ்! உனது தூதுத்துவத்தை அவர்களிடத்தில் எத்தி வைப்பதை பொய்ப்பிக்கின்றனர். எனவே அவர்களுக்கு பாதகமாக நீ எனக்கு உதவுவாயாக என்று கேட்டார்கள். உடனே அல்லாஹ் கூறினான் நுஹே (அலை) நீங்கள் நமது பாதுகாப்பில் கண்ணுக்கு முன் நான் சொல்வதைப் போல் ஒரு கப்பலைத் தயார் செய்யுங்கள் என்றான். அதன்படி அவர்கள் ஒரு கப்பலை தயார்செய்தார்கள். அல்லாஹ்வின் வேதனை வெள்ளப்பிரளயமாக நூஹ் நபியின் சமூகத்திற்கு இறங்கியது. அச்சமயம் ரொட்டி சுடும் அடுப்பில் தண்ணீர் ஊற ஆரம்பித்தது. இறுதியாக அவர்களை ஏற்றுக் கொண்ட ஆண் பெண் அனைவரும் அக்கப்பலில் ஏறிக்கொண்டனர். அழிக்கப்பட்ட நபர்களில் அவரின் குடும்பத்தவர்கள் இருந்ததினால் அல்லாஹ்விடம் தனது குடும்பத்தைக் காப்பாற்றும்படி வேண்டிய சமயம் நிராகரித்தவர்களை காப்பாற்றும்படி கேட்க வேண்டாம் என்று அல்லாஹ் கூறிவிட்டான்.

நூஹ் நபியும் அவர்களை பின்பற்றியவர்களும் அதில் ஏறி அமர்ந்த போது அல்லாஹ் இவ்வாறு பிரார்த்திக்கும் படி கூறினான். “ அநியாயக்காரர்களின் சமூகத்தில் இருந்து எம்மை காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்”. மேலும் சிறப்பான ஓர் இடத்தில் எங்களை இறக்கி வைப்பாயாக! என்று ஏவினான் அவனே சிறந்த இடத்தில் சேர்த்து வைப்பதற்கு மிக சிறந்தவன்.

இறுதியாக இந்த வசனத்தொடரில் அல்லாஹ் கூறுகிறான் ‌ நூஹ் நபியை (அலை) பொய் படுத்தியவர்கள் அழிக்கப்பட்டதும் அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் காப்பாற்றப்பட்டதும் நூஹ் நபி உண்மையில் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதற்கு தெளிவான சான்றாகும். இவ்வாறு தான், நபிமார்களை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லா காலங்களிலும் இறுதியில் காப்பாற்றப்படுவார்கள். அவர்களை ஏற்காதவர்கள் எக்காலத்திலும் அழிக்கப்படுவார்கள் இதுவே வழமையாகும் என்று இந்த தொடரை அல்லாஹ் முடிக்கின்றான்.

تفسير المحرر

அந்தக் கப்பலில் இருந்தவர்கள் 80 நபர்களாகும். அதில் நூஹ் நபி (அலை) மும், அவர்களை ஏற்ற ஒரு மனைவியும், மூன்று ஆண் பிள்ளைகளும், அவர்களின் மூன்று பெண் பிள்ளைகளும், அச்சமுகத்தில் இருந்த மற்ற  72 நபர்களும் (மொத்தம் 80)  ஒரு கப்பலில் ஏறிக் கொண்டார்கள். நபியை ஏற்காத அனைவரும் அழிக்கப்பட்டார்கள் இதன்படி இச் சம்பவத்திற்கு பிறகு இவ்வுலகில் வாழ்ந்த, வாழும் அனைவரும் கப்பலில் ஏறிக்கொண்ட அந்த நபர்களின் பிள்ளைகள் ஆகும்.
تفسير الرازي

வேதனை வரும் என்று சொன்னதற்கு பிறகு அதன் அடையாளத்தை அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான். அந்த அடுப்பில் வழமைக்கு மாற்றமாக நெருப்பெறியும் இடத்தில் தண்ணீர் ஊற்றெடுக்க ஆரம்பிப்பதை நீங்கள் கண்டால், எனது வேதனை இறங்குகின்றது என்று விளங்கிக் கொண்டு அனைவரையும் கப்பலில் ஏற்றிக் கொள்ளுங்கள் என்று இங்கு உணர்த்தப்படுகிறது.
الرازي

0
Would love your thoughts, please comment.x
()
x