إِنَّ اللَّهَ وَمَلائِكَتَهُ يُصَلّونَ عَلَى النَّبِيِّ يا أَيُّهَا الَّذينَ آمَنوا صَلّوا عَلَيهِ وَسَلِّموا تَسليمًا

*நிச்சயமாக அல்லாஹ்வும், அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள், (ஆகவே) விசுவாசிகளே! நீங்கள் அவர் மீது ஸலாவத்துச் சொல்லுங்கள், ஸலாமும் கூறுங்கள்.*

அல்லாஹ் நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத் சொல்கிறான் என்பதன் அர்த்தம், அவர்களைப் பற்றி வானுலகில் மலக்குகளிடத்தில் புகழ்ந்துரைக்கிறான் என்பதாகும். 

நபி ﷺ அவர்கள் மீது மலக்குகள் ஸலவாத் சொல்கிறார்கள் என்பதன் அர்த்தம், நபி ﷺ அவர்களை வானவர்கள் புகழ்கிறார்கள் மற்றும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள் என்பதாகும்.

முஃமின்களாகிய நாம் நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத் சொல்வது என்பதன் அர்த்தம், நபியின் மீது ஸலவாத் சொல்லுமாறு (யா அல்லாஹ் அவர்களை வானவர்களுக்கு மத்தியில் புகழ்வாயாக!.) அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாகும்

ஸலாம் கூறுதல் என்பதன் அர்த்தம்:  அன்னாரின் மீது ஸலாம் உண்டாவதாக என்பதன் பொருள் அவர்களை எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் அல்லாஹ் பாதுகாப்பானாக என்று பொருள்.

இது இரண்டு வகைப்படும். 

1 அவர்களின் உடலையும், கன்னியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் கேட்பதாகும். இது வெளிரங்கமான பாதுகாப்பாகும். 2 அன்னார் விட்டுச் சென்ற இந்த மார்க்கத்தை இறுதி நாள் வரை இதில் எவ்விதமான கூடுதல் குறைவின்றி அல்லாஹ் பாதுகாப்பானாக என்று சொல்வதாகும். இது மானசீகமான பாதுகாப்பாகும். 

நபி ﷺ அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வது முஃமின்களின் பண்பாகும்.

இந்த ஆயத் நபி ﷺ அவர்களுக்கு இருக்கும் உயர்ந்த அந்தஸ்தையும் சிறந்த மதிப்பையும் எடுத்தியம்புகிறது.

நபி ﷺ அவர்கள் வானுலகிலும் பூமியிலும் புகழப்படுகின்ற மாமனிதராக இருக்கின்றார்கள்.

நபி ﷺ அவர்களுக்குரிய மரியாதையைக் கொடுக்காமல் அவர்களை தரக்குறைவாக மதிப்பிடுவதோ இழிவுபடுத்துவதோ மாபெரும் பாவமாகும். இன்னும் சிலரிடம் இறை நிராகரிப்பாகும் .

இந்த ஆயத்தில் “அவனுடைய வானவர்கள்” என்று அல்லாஹ் வானவர்களைத் தன் பக்கம் இணைத்துக் குறிப்பிட்டிருப்பது அவனிடத்தில் அவர்களுக்குரிய உயர்ந்த அந்தஸ்தை எடுத்துக்காட்டுகிறது.

அல்லாஹ் இந்த ஆயத்தின் ஆரம்பத்தில் “ஈமான் கொண்டவர்களே” (விசுவாசிகளே) என்று அழைத்துக் கூறுவதன் மூலம் பின்னால் சொல்லப்படும் செய்தி மிக முக்கியமானது என்பதை  உணர்த்துகின்றது.

நபியைப் புகழ்வது சில சமயம் கட்டாய கடமையாகும் சில சமயங்களில் அது விரும்பத்தக்க செயலாகும்

1 ஒரு சபையில் நபிகளாரின் பெயர் கூறப்பட்டால் அவர்கள் மீது ஸலவாத் சொல்வது அவசியம் என்பதாக வந்துள்ளது.

2 கடமையான உபரியான தொழுகையின் இறுதி அமர்வில் நபிகளாரின் மீது ஸலவாத் சொல்வது அவசியமாகும்.

 சுன்னத்தான சந்தர்ப்பங்கள்

1 பிரார்த்தனையின் ஆரம்பத்திலோ, முடிவிலோ அன்னாரை புகழ்வது.

( நபியின் புகழின்றி அடியார்கள் செய்யும் பிரார்த்தனைகள் வானுக்கும் பூமிக்கும் இடையில் நிறுத்தப்படுகின்றன. அவர்கள் தனது  நபியின் மீது ஸலவாத் சொன்னதன் பின்னே வானை சென்றடைகின்றன.)

2 பாங்கு சொன்னதற்கு பிறகு

3 காலையில் மாலையிலும் ஸலவாத் ஓதுவது

4 குறிப்பாக வெள்ளிக்கிழமை என்று அதிகமாக ஸலவாத் ஓதுவதும் நபியின் முக்கியமான  வழிகாட்டலாக இருக்கின்றது.

நபி ﷺ அவர்கள் கற்றுத் தந்துள்ள ஸலவாத்களில் பின்வரும் ஸலவாத் முக்கியமானது:

اللَّهُمَّ صَلِّ علَى مُحَمَّدٍ وعلَى آلِ مُحَمَّدٍ، كما صَلَّيْتَ علَى إبْرَاهِيمَ وعلَى آلِ إبْرَاهِيمَ؛ إنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ علَى مُحَمَّدٍ وعلَى آلِ مُحَمَّدٍ، كما بَارَكْتَ علَى إبْرَاهِيمَ وعلَى آلِ إبْرَاهِيمَ؛ إنَّكَ حَمِيدٌ مَجِيدٌ.

நபிகள் நாயகம் ﷺ அவர்களின் பெயரை மொழியும் போதும் எழுதும் போதும் செவிமடுக்கும் போதும் *”ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்”* என்று பிரார்த்திக்கிறோம். இதில் ஸலவாத், ஸலாம் ஆகிய இரண்டும் இருக்கின்றன. நமது நேர்வழிக்குக் காரணமாக இருந்த, நமக்குச் சுவனம் செல்லும் வழியைக் காட்டித்தந்த நமது உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதில் நாம் கஞ்சர்களாக இருந்துவிடக்கூடாது.  تفسير ابن كثير , تفسير ابن عثيمين

யா அல்லாஹ்!  உன் அருள் நபி ﷺ அவர்களின் வழியில் செல்ல நம்மனைவருக்கும் தவ்ஃபீக் செய்வாயாக! அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!

0
Would love your thoughts, please comment.x
()
x