فَاَنْشَاْنَا لَـكُمْ بِهٖ جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّ اَعْنَابٍ‌ ۘ لَـكُمْ فِيْهَا فَوَاكِهُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ

பின்னர் அதனைக்கொண்டு பேரித்த, திராட்சைகள் (முதலிய) தோட்டங்களை உங்களுக்காக நாம் உற்பத்தி செய்திருக்கின்றோம், அவைகளில் உங்களுக்கு அநேகக் கனிகள் இருக்கின்றன, இன்னும் அவற்றிலிருந்தும் நீங்கள் உண்ணுகின்றீர்கள்.

தண்ணீர் இறங்குவதும் அது சேகரிக்கப்படும் முறையை விவரித்த பின், அந்த தண்ணீரினால் தாவரங்களுக்கு ஏற்படும் பயன்களை இங்கு விவரிக்கிறான்.

அந்த தண்ணீரின் மூலமாகவே உங்களுக்கு பேரித்த மரங்கள், திராட்சை கொடிகளுடைய தோட்டங்களை உருவாக்குகிறான். இன்னும் அதிலே இவ்விரண்டையும் தவிர இன்னும் பலவிதமான பழங்களும் கிடைக்கின்றன. அவைகளை மகிழ்சியின் போது உண்ணும் பழங்களாகவும், அதை காயவைத்து சேகரித்து, பின் நாட்களில் உணவாகவும் உட்கொள்கிறீர்கள்.

தண்ணீரின் மூலம் பயனடையும் தாவரங்களில் பேரித்த, திராச்சையை முதலில் கூறுவதற்குக் காரணம். இந்த வேதம் இறக்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள் அரபுகளோடு வாழ்ந்தவர்கள். அரபுகள் தங்களது உணவில் பேரித்த, இன்னும் திராட்சை பழங்களை மிகுதமாக உண்டுவந்தார்கள். அவைகளை செங்காயையும், பழமாக கனிந்து இருக்கும் போது பழங்களாகவும், அவைகளில் காய்ந்ததை சேகரித்து, பின் நாட்களில் உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இவைகளை முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

نظم الدرر

இந்த பழங்களை சாப்பிடுவதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை மாறாக அவைகள் அறுவடை செய்யப்பட்டப் பின் வியாபாரத்தின் மூலம் பொருளீட்டி அதில் கிடைத்த செல்வத்தினால் தங்களது வாழ்வாதார தேவைகளை நிவர்த்தி செய்து கொள்கிறீர்கள் என்ற கருத்தும் இருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். فتح البيان للقنوجي

وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَيْنَآءَ تَنْۢبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِيْنَ‏

தூர்ஸைனா விலிருந்து (முளைத்து) வெளிப்படும் ஒரு மரத்தையும் (நாம் படைத்தோம்.) அது எண்ணையையும், புசிப்போருக்கு (சுவைமிக்க) குழம்பையும் கொண்டு முளைக்கிறது.

மூசா நபி அவர்கள் அல்லாஹ்வோடு உரையாடிய அந்த தூர்சீனா மழையிலே அடரத்தியான பெரும் பெரும் ஜைத்தூன் மரங்களை அவன் உருவாக்கினான். அவைகளின் காய்களை எடுத்து எண்ணையைப் பிழிந்து நீங்கள் உண்ணும் உணவுகளுக்கு குழம்பாகவும், இருளை அகற்றும் ஒளிவிளக்கிற்கும் பயன்படுத்திக் கொள்கின்றீர்கள்.

சைனா என்பது அபிவிருத்தி பெற்ற மலை இங்குதான் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் பேசியதினால் இது அபிவிருத்தி பெற்ற இடமாகும். மேலும் இந்த மரமும் அபிவிருத்தி பெற்றதாகும். நபிகளாரும் (ஸல்) ஒரு அறிவிப்பில் ஜைத்தூனை உண்ணுங்கள் இன்னும் அதன் எண்ணையை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நிச்சயமாக அது அபிவிருத்தி பெற்ற மரத்திலிருந்து வளர்ந்ததாகும்.   ابن كثير

ஜைத்தூன் மரத்தைக் குறிப்பிடும் போது ‘தூர் ’ மலையைக் குறிப்பிடுவதற்கு காரணம். ஒவ்வொரு பொருளும் உருவாவதற்கு தோதுவான இடமும் சீதோஷன நிலைகளும் தேவைப்படுகின்றன. அவை முறையாக அமையாத போது அந்த தாவரங்களும் உயிரினங்களும் வாழ முடியாது. குளிர்காலத்தில் வளரும் செடிகள் வெயில் காலத்திலும், வெயில் காலத்தில் வளரும் செடிகள் குளிர் காலத்தில் வாடி விடுவதை நாம் கண் முன்னால் பார்க்கிறோம். அவ்வாறே குளிர் பிரதேசத்தில் வாழும் உயிரினங்கள் வெயில் பிரதேசத்திற்கு சென்றால் இறந்து விடுகின்றன. ஜெயித்துன் மரம் மற்ற இடங்களில் வளர்வதைக் காட்டிலும் இப்பகுதியே மிக சிறந்த இடம் என்று உணர்த்த இதை குறிப்பிடு கூறப்பட்டது. மற்றொரு காரணம் முதல் மனிதர் ஆதம் நபியை (அலை)  களிமண்ணால் அல்லாஹ் படைத்தது போல் ஜைத்தூன் மரத்தை முதன்முதலில்  தூர்ஸீனா மலைப்பகுதியில் படைத்தான் என்று சிலர் கூறுகிறார்கள். எனவே தான் இந்த இடத்தை குறிப்பிட்டு கூறப்பட்டது.  التحرير والتنوير

0
Would love your thoughts, please comment.x
()
x