عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلّى الله عليه وسلّم: (مَنْ تَصَبَّحَ كُلَّ يَوْمٍ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً، لَمْ يَضُرَّهُ في ذلِكَ الْيَوْمِ: سُمٌّ وَلاَ سِحْر
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் ஒவ்வொரு நாளும் காலையில் 7 அஜ்வா பேரித்தம்பழம் சாப்பிடுகிறாரோ அவருக்கு அன்றைய நாளிலே எந்த விஷமும் சூனியமும் தீங்கை உண்டாக்காது.
ஹதீஸ் 2659
அறிவிப்பாளர் : சஃது இப்னு அபி வக்காஸ் (ரலி).
நூல் : மஆலிமுஸ் ஸுன்னதிந் நபவிய்யா
இந்த அறிவிப்பில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு சில உணவுகளின் மூலமாக அபிவிருத்தியையும் நோய்க்குறிய நிவாரணியயும் ஏற்படுத்தியுள்ளான் என்பது தெரிகிறது.
அதிலும் குறிப்பாக மதினாவில் விளையும் அஜ்வா என்ற பேரீத்தம் பழத்தின் சிறப்பை அறிவிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஏழு அஜ்வா பழத்தை உண்பவருக்கு எல்லா வகையான தீங்கிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.
அறிஞர்கள் கூறும்போது இதில் கூறப்பட்டுள்ள சிறப்பு அஜ்வா என்ற பழத்திற்கு மட்டுமா அல்லது மதினாவில் விளையும் ஏனைய பேரீத்தம் பழங்களுக்கும் பொருந்துமா என்பது கருத்து வேற்றுமை உள்ளது. இதில் அஜ்வா என்ற பேரீச்சம் பழத்திற்கு விஷம் மற்றும் சூனியத்தின் கெடுதியை அகற்றுதல் என்ற இரண்டு வித கெடுதியிலிருந்து பாதுகாப்பு சொல்லப்பட்டுள்ளது.
சில அறிவிப்புகளில் மதினாவில் விளையும் ஏழு பேரித்த பழத்தை சாப்பிட்டால் அவருக்கு எவ்விதமான விஷத்தின் தீங்கு ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்கள். இன்னும் சிலர் பொதுவாக ஏழு பேரிச்சம் பழங்களை உண்பவருக்கும் எந்த தீங்கும் ஏற்படாது என்றும் கூறுகின்றனர்.இதன் மூலம் முந்திய அறிவிப்பில் அஜ்வாவிற்கு விஷம் மற்றும் சூனியத்திலிருந்து பாதுகாப்பு உண்டாகும் என்றும், இரண்டாவது அறிவிப்பில் பொதுவான பேரித்தம் பழங்களை உண்பவருக்கு விஷத்திலிருந்து மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும் என்று விளக்கம் தருகின்றார்கள்.
ஹதீஸ் 2660
நபியவர்கள் கூறினார்கள் எந்த வீட்டில் பேரித்த பழம் இருக்குமோ அவர்கள் பசியுடன் இருக்க மாட்டார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).
நூல் : மஆலிமுஸ் ஸுன்னதிந் நபவிய்யா
சில அறிவிப்புகளில் ஆயிஷா (ரலி) யை மூன்று முறை அழைத்து இதே வாசகத்தை கூறி இருப்பதாகவும் வந்துள்ளது இதன் மூலம் பேரீத்தம் பழத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
நபி (ஸல்) அவர்களின் அவார்த்தையிலிருந்து தெரிய வருவது தனது பகுதியில் மிகுதமாக உணவாக எடுத்துக் கொள்ளும் ஒரு பொருள் வீட்டில் சேகாரமாக இருந்தால் அந்த வீட்டார் ஒருபோதும் பசியோடு இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
எனவே எந்த உணவு தனது பகுதியில் மிகுதமாக மக்கள் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அதை கொண்டு போதுமாக்கிக் கொள்வது சிறந்தது என்றும் அரபு நாட்டில் முந்திய காலங்களில் பேரித்தம் பழத்தை தங்களது உணவாக வைத்திருந்தார்கள் அந்த பேரித்தம் பழத்தை சேகரித்ததினால் ஒரு வருடம் முழுவதும் அதோடு பால் அல்லது தண்ணீரை கலந்து உண்பார்கள் அதனால் அவர்களுக்கு எப்பொழுதும் உணவு கிடைத்துக் கொண்டே இருக்கும் என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர்.
الدرر السنية
ஹதீஸ் 2661
அனஸ் இப்னு மாலிக் அறிவிக்கிறார்கள் நபியிடத்தில் ஒரு பழைய பேரித்த பழம் கொண்டுவரப்பட்டது அப்போது நபி (ஸல்) அவர்கள் அதனுள்ளே ஏதும் உள்ளதா என்று தேடிய பின் அதிலிருந்த பூச்சியை அகற்றினார்கள்.
இந்த அறிவிப்பில் நபியவர்களிடம் ஒரு பழைய பேரீத்தம் பழம் கொண்டுவரப்பட்ட நேரத்தில் அதிலிருந்த பூச்சியை அகற்றிவிட்டு சாப்பிட்டார்கள்.
- இதன் மூலம் ஒருவருக்கு ஏதேனும் பொருட்கள் உண்ணுவதற்கு கொடுக்கப்பட்டால் அதில் தூசி பூச்சிகள் ஏதேனும் உள்ளதா என்று தேடிப் பார்த்து அப்படி ஏதேனும் இருந்தால் அதை நீக்கிய பின் உண்ண வேண்டும் என்று வழிகாட்டப்பட்டுள்ளது.
- அவ்வாறே ஒரு பொருளில் பூச்சிக்கள் இருப்பதினால் அது அசுத்தமாவதில்லை என்பதும் தெரிகிறது.
நபிகளாருக்கு போர் செல்வங்களும் பல அன்பளிப்புகளும் கொடுக்கப்பட்டாலும் சாதாரண உணவையும் உண்டுள்ளார்கள்.
இதன் மூலம் நபியவர்களின் பணிவும், பற்றற்ற வாழ்வையும் உணர்த்துகின்றது.