சிறுவராய் இருந்த போது கயவர்களால் ஈராகிலிருந்து பிடித்து வரப்பட்டு மக்காவின் அடிமை சந்தையில் விற்கப்பட்டவர் தான் கப்பாப் இபுனுல் அரத் (ரலி).

தொடக்க காலத்தில் பெண்ணொருத்தியிடம் அடிமைத் தொழில் புரிந்து வந்தார்கள். அடிமை தொழிலுடன் கொல்லர் பணியாற்றியவர் என்றாலும் தனது அறிவால் அறிவார்ந்த இஸ்லாத்தை ஏற்க அர்க்கம் இல்லம் நோக்கி வந்தார்கள் கப்பாப் (ரலி). 

இதை அறிந்த மக்கத்து குரைஷிகளோ வெகுண்டெழுந்தனர். எங்கிருந்தோ வந்தவர் எங்களை எதிர்த்து புதிய மார்க்கத்தில் இணைந்தாரா ? என்று கொக்கரித்து கப்பாப் (ரலி)யை வரவழைத்து தலை முடியை பிடித்து இழுத்து கழுத்தை திரிகினர்.அத்துடன் நெருப்பை மூட்டி  அதில் அவரை கிடத்தி நெஞ்சில் பாறாங்கல்லை வைத்தனர் இது போன்று எண்ணில் அடங்கா துன்பங்களை சுவைக்க செய்தனர் இதயம் இழந்த இருக்கர்கள். 

அண்ணல் நபி (ஸல்) அருமை தோழர் அபூபக்கர் (ரலி) யினால் அடிமை தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஏழைகள் ஒவ்வொருவரும் குரைஷிக் கூட்டத்தினரால் கொடுமைக்குள்ளானவர்களே என்று வரலாற்று நூல்களில் தகவல்கள் கிடைக்கின்றன. 

துஃபைல் இப்னு ஹாரித் என்ற குரைஷித் தலைவனால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் அடிமை ஆமீர் இப்னு புஹைரா (ரலி)!.

‘பனூ அதிய்’ குலத்தவரின் ஆதரவில் வாழ்ந்து இஸ்லாத்தை தழுவிய அடிமைப்பெண் ஜன்னீரா (ரலி)வை, இஸ்லாத்தை தழுவும் முன் உமர் (ரலி) கொடுமைப்படுத்தியிருந்தார்கள். அபூ ஜஹ்லும் அதில் பங்கெடுத்தான்.

‘பனூ முஅம்மல்’  அடிமைப்பெண் லுபைபாவும் தொடக்க கால முஸ்லிம்களுள் ஒருவராகி குரேஷிகளின் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர். 

‘ பனூ‌ அப்துத் தார்’ குலத்தினரின் ஆதரவில் வாழ்ந்த அந்நஹ்திய்யா என்ற பெண்ணும் அவருடைய மகளும் அக்குடும்பத்தினரால் இரக்கமின்றி வதைக்கப்பட்டனர். 

‘பனூ ஜஹ்ரா’ குளத்து அடிமைப்பெண் உம்மு உபைஸ் அல்லது உமைஸ் அல் அஸ்வத் இப்னு யகூத் என்ற கொடியவனால் வதை செய்யப்பட்டார்! 

இஸ்லாத்திற்காக இன்னல்களை தாங்குவதில் பெருங்குலச் செம்மல்களும் சளைத்தவர்களல்லர்.

செல்வ சீமானாக வாழ்ந்த உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவியதை கேள்வியுற்ற குரேஷிகள் வெகுண்டெழுந்ததுடன் அவரை பிடித்து வர வைத்து ஈச்ச ஓழையில் கிடத்தி அப்பாயை எரியூட்டினர் உடல் கரிந்தால் என்ன? உள்ளம் பசுமையாக இருந்தது. தொல்லை கொடுத்தோர் தோற்றே போயினர். 

பெருங்குளமான ‘பனூ அஸத்’ கிளை தலைவரான ஜுபைர் இபுனுல் அவ்வாம் (ரலி) இஸ்லாத்தை தழுவிய போது அவரது மாமன் மார்கள் பிரித்து வந்து கடுஞ்சூட்டிலும் புகையிடுமாக கிடத்தி வேதனை செய்தனர். இவற்றையெல்லாம் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு தமது இஸ்லாத்தை தக்க வைத்துக் கொண்டார்கள். 

மக்கத்து வீதிகளில் மணங்கமழ ஆடம்பர அலங்காரத்துடன் தனது வாலிபத்தை கழித்து வந்த முஸ்அப் என்ற நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்றதை செவியுற்ற குடும்பத்தவர்கள் அவரது தாய் உட்பட வாட்டி வதைத்தனர் இறுதியில் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். 

இது போன்று இன்னும் பலர் இஸ்லாத்தை இணைந்ததனால் பல இன்னல்களுக்கு ஆளானவர்களின் வரலாறுகள் சரித்திர நூல்களில் பறவி கிடைக்கின்றன.

பெருங்குலச் செல்வரும் ‘பனு அசத்’ கிளைத் தலைவருமான ஜுபைர் இபுனுல் அவ்வாம் (ரலி) இஸ்லாத்தை தழுவிய போது அவருடைய மாமன் அவரை பிடித்து கடுஞ்சூட்டிலும் புகையிலுமாகக் கிடத்தி வேதனை செய்தான். இவற்றையெல்லாம் பொறுமையுடன் ஏற்று இறை நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டார் ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள்.

மக்கத்து வீதிகளில் மணங்கமல ஆடம்பர அலங்காரத்துடன் தம் வாலிபத்தை கழித்து வந்த முஸ்அப் இப்னு உமைர் (ரலி) தன் தோழர் அம்மாருடன் ‘தாருல் அர்க்கம்’ என்ற இஸ்லாமிய  கோட்டையினுல் நுழைந்து இஸ்லாத்தில் இணைந்தார் அத்துடன் அவருடைய ஆடம்பர வாழ்க்கை முற்றுப் பெற்றது. பின்னர் பரிசுத்த மார்க்கத்தின் மீதுள்ள பகைமையினால் தான் பெற்ற பிள்ளையெனறும் பாராமல்  பட்டினி போட்டு வாட்டியதோடு அவரை வீட்டை விட்டே  துரத்தி விட்டாள் அத்துடன் அவரின் உறவினர்களும் இவரை தங்களால் ஆன துன்பங்களை கொடுத்து தங்களது குடும்பத்தை விட்டு துரத்திவிட்டனர் . 

மக்காவிற்கு அருகிலுள்ள ‘உஸ்ஃபான்’ என்ற ஊரிலிருந்து மக்காவில் இறை தூதர் வந்துள்ள தகவலறிந்து அபூதர் கிஃபாரி (ரலி) மக்காவிற்கு வந்து சேர்ந்தார் நபியை சந்தித்து ஓரிறைக் கொள்கையை உரக்கக்கூறியதை கேள்வியுற்ற அங்கிருந்த அரக்கர்கள் அவரை அடியடியென்று அடித்துப் போட்டனர். இதனால் மூச்சுற்று வீழ்ந்ததை அறிந்த அப் பாவிகள் அரண்டு போய் ஓடிவிட்டனர்.

0
Would love your thoughts, please comment.x
()
x