عَنْ عائِشَةَ ـ زَوْجِ النَّبِيِّ صلّى الله عليه وسلّم ـ: أَنَّهَا كانَتْ إِذَا ماتَ المَيِّتُ مِنْ أَهْلِهَا، فَاجْتَمَعَ لِذلِكَ النِّسَاءُ، ثُمَّ تَفَرَّقْنَ إِلاَّ أَهْلَهَا وَخاصَّتَهَا، أَمَرَتْ بِبُرْمَةٍ مِنْ تَلْبِينَةٍ، فَطُبِخَتْ، ثُمَّ صُنِعَ ثَرِيدٌ، فَصُبَّتِ التَّلْبِينَةُ عَلَيْهَا، ثُمَّ قَالَتْ: كُلْنَ مِنْهَا، سَمِعْتُ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم يَقُولُ: (التَّلْبِينَةُ مَجَمَّةٌ لِفُؤَادِ المَرِيضِ، تَذْهَبُ بِبَعْضِ الحُزْنِ) .

ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி வந்துள்ளது. அவர்கள் தங்களின் குடும்பத்தில் எவரேனும் ஒருவர் மரணித்து விட்டால் அதற்காக பெண்கள் ஒன்று கூடுவார்கள். பிறகு அவர்களின் குடும்பத்தார்களும் நெறுங்கிய உறவினர்கள் தவிர மற்றவர்கள் எழுந்து சென்று விடுவார்கள் அச்சமயம் ஆயிஷா (ரலி) அவர்கள் தல்ஃபீனா என்ற உணவை சட்டி வைத்து சமைக்கும் படி ஏவினார்கள். அதை (ரொட்டித் துண்டுகளை கறிகுழம்பில் பினையப்படும்) ஸரீத் என்ற உணவும் சமைத்து அத்துடன் தல்ஃபீனாவை கொட்டி, பின் சொன்னார்கள். இவைகளை உண்ணுங்கள் நபி (ஸல்) கூற கேட்டுள்ளேன். தல்பீனா என்பது நோயாளியின் உள்ளத்திற்கு ஆனந்தத்தையும் கவலையுடயோரின் சில கவலைகளையும் போக்கும்.

**தல்ஃபீனாவின் பலன்கள்* *

**அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
நூல்: ம ஆலிமுஸ் ஸுன்னதிந் நபவிய்யா ஹதீஸ் 2657
மேற் சொன்ன அறிவிப்பில் இரண்டு உணவுகளைப் பற்றி வந்துள்ளது.
1 தல்பீனா என்ற உணவென்பது பாலில் மாவுகலந்து அதில் தேனையும் சேர்க்கப்பட்டு கட்டியான முறையில் தயாரிக்கப்படும் பாயாசமாகும்.
2 சரித் என்பது அரபு நாட்டின் ரொட்டியும் மாமிசமும் கலந்து சமைக்கப்படும் உயர்தர உணவாகும்.

இந்த (பாயாச) உணவு (ஃபார்லி) வார்க்கோதுமை நீரினால் சமைக்கப்படும் உணவைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்ததாகும். காரணம் இந்த பாயாசம் சலிக்கப்பட்ட வாற்கோதுமை மாவிலிருந்து தயார் செய்யப்படுவதினால் ஃபார்லியை விட இது சிறப்பு வாய்ந்ததாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் இறந்தவரின் குடும்பத்தாருக்கு (தல்பீனா) பாயாசம் செய்து அனுப்ப காரணம் இறந்தவரின் குடும்பத்தினர் உணவு உண்ண முடியாத அளவிற்கு துக்கத்தில் இருப்பார்கள். அவர்களுக்கு தல்பினாவை ஊட்டும்போது “தல்பீனா என்பது நோயாளியின் உள்ளத்திற்கு ஆனந்தத்தையும் கவலையுடயோரின் சில கவலைகளையும் போக்கும்.”

தல்ஃபீனாவின் பலன்களில் சில :
• இது மென்மையான உணவாகும்.
• துரிதமாக செரித்து விடக்கூடியது.
• வெளியேற வேண்டிய கழிவுகளை வெளியேற்றக்கூடியதாவும் இருக்கின்றது.
• அவர்களின் உள்ளத்தில் உள்ள உஷ்னம், பசி நீங்கி மகிழ்வும், நிம்மதியும் ஏற்படுகிறது.

இந்த ஹதீஸில் கிடைக்கும் பாடங்கள்:
1 தல்பீனா ஒரு மென்மையான உணவாகும், இது பொதுவாக எந்தத் தீங்கும் செய்யாது.
2 இறந்தவர்களின் வீட்டில் குடும்பத்தார் ஒன்று கூடுவதால் அவ்வீட்டாருக்கு ஆறுதல் உண்டாகிறது.
3 இறந்தவர்களின் வீட்டில் குடும்பத்தார் ஒன்று கூடுவது அவர்களுக்கு உணவு சமைத்து அனுப்புதலும் ஆகுமானதாகும்.
4 இறந்தவர்களின் வீட்டாரை சந்திக்க வருபவர்களுக்கு டீ, காபீ போன்றதை கொடுப்பதில் தவரில்லை.
كتاب الحلل الإبريزية من التعليقات البازية على صحيح البخاري (நபி வழி மருத்துவம்)
——————-
பாலை மூலப்பொருளாக வைத்து தயாரிக்கப்படும் ஒரு மென்மையான (பாயாச) உணவாகும். இது பாலைப் போன்று மென்மையாகவும் வெண்ணிறமாக உள்ளதால் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

0
Would love your thoughts, please comment.x
()
x