عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ: أَنَّ النَّبِي صلّى الله عليه وسلّم سَأَلَ أَهْلَهُ الأُدُمَ، فَقَالُوا: مَا عِنْدَنَا إِلاَّ خَلٌّ، فَدَعَا بِهِ، فَجَعَلَ يَأَكُلُ بِهِ ويَقُولُ: (نِعْمَ الأُدُمُ الْخَلُّ، نِعْمَ الأُدُمُ الْخَلُّ) .
நபி (ஸல்) அவர்கள் தங்களது குடும்பத்தாரிடம் குழம்பு கேட்டார்கள். அதற்கவர்கள் தங்களிடம் சிற்காய் (காடி) மட்டுமே இருக்கிறதாக பதில் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கி உண்ண ஆரம்பித்தார்கள். மேலும் கூறினார்கள் சிற்காய் (காடி) சிறந்த குழம்பாகும் புளிக்காடி(வினிகர்) சிறந்த குழம்பாகும் என இரு, முறை கூறினார்கள்.
நூல் : மஆலிமுஸ் ஸுன்னதிந் நபவிய்யா. ஹதீஸ் : 2655
அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)
இந்த நிகழ்வில் நபியவர்கள் உணவை உண்ணும் சமயம் ரொட்டியை மற்றதோடு சேர்த்து உண்ணுவதற்காக ஏதேனும் ஒரு குழம்பை கேட்க அச்சமயம் சிற்காய் மட்டுமே இருந்தது. அக்காலத்து மக்கள் அதை ஒரு குழம்பாக கருதவில்லை. எனவே நபி அவர்கள் அதையும் வாங்கி சாப்பிட்டுவிட்டு இதுவும் சிறந்த குழம்பு தான் என்று அதை புகழ்ந்து கூறினார்கள்.
*இந்த ஹதீஸின் மூலம் கிடைக்கும் பாடங்கள்* :
1 நபியவர்கள் சாதாரணமான ஒரு பொருளையும் கூட புகழ்ந்துள்ளார்கள்.
2 நபியவர்கள் தங்களது உணவிலும் மற்ற செயல்பாடுகளிலும் பணிவையே மேற்கொண்டுள்ளார்கள்.
3 புளிக்காடியை (வினிகர்) புகழ காரணம் ஒன்று அதன் சுவையை வைத்தாக இருக்கலாம் அல்லது தனது குடும்பத்தாரின் மனத் திருப்திக்காக கூட செய்திருக்கலாம்.
உம்மு ஹானி பீன்த் அபீ தாலிஃப் (ரலி) அறிவிக்கிறார்கள்: என்னிடம் நபியவர்கள் வந்து உங்களிடம் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்கள். அப்போது நான் என்னிடத்தில் உடைந்த காய்ந்த (ரொட்டித்) துண்டுகளும் காடியுமே இருக்கின்றன என்றேன். அப்போது நபியவர்கள் அதைக் கொண்டு வாருங்கள் என்று கூறிய பின் எந்த வீட்டிலே காடி இருக்குமோ அந்த வீட்டை ஒன்றும் இல்லாத வீடு என்று சொல்ல முடியாது என்றார்கள்.
*அறிவிப்பாளர் : உம்மு ஹானி பீன்த் அபீ தாலிஃப் (ரலி)
நூல் : மஆலிமுஸ் ஸுன்னதிந் நபவிய்யா. ஹதீஸ் : 2656*
இந்த அறிவிப்பில் நபியவர்கள் தனது உறவினரான உம்மு ஹானி(ரலி) வீட்டிற்கு வந்து ஏதேனும் உண்ணுவதற்கு உணவு இருக்கின்றதா என்று கேட்டார்கள் அவர்களிடம் அப்போது காய்ந்த சில ரொட்டி துண்டுகளும் சிற்காய் மட்டுமே இருந்தது அதை அவர்கள் ஒரு உணவாக எண்ணவில்லை எனவே தான் என்னிடம் எதுவும் இல்லை என்றார்கள் அதற்கு நபியவர்கள் அந்த சில துண்டுகளையும் கூட கொண்டு வாருங்கள் என்று கேட்டு வாங்கினார்கள்.
*படிப்பினைகள்*
1 நபியவர்கள் தனது உறவினரின் வீட்டிற்கு சென்று உரிமையாக பொருட்களை கேட்டுள்ளார்கள்.
2 கிடைத்த அந்த சாதாரண துண்டுகளையும் கூட அவர்கள் புகழ்ந்துள்ளார்கள். காரணம் அல்லாஹ் வழங்கிய உபகாரத்திற்கு நாம் நன்றி செலுத்தினால் இன்னும் அதிகரிப்பதாக குர்ஆனில் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
3 இது போன்ற சாதாரன பொருட்கள் இருக்கும் வீடுகளையும் ஒன்றுமில்லாத வீடாக எண்ணி விடக்கூடாது.
4 பெரும்பாலும் கிடைக்கும் சாதாரண உணவு பண்டங்களை பயன்படுத்துவதிலேயே போதுமாக்கிக் கொள்ள வேண்டும். (உள்ளம் ஆசை கொள்வதினால் கிடைப்பது அரிதான பொருட்களை தேடுவதின் மூலம் மனிதனின் மார்க்கத்திற்கும்,
உடலுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.)
5 கிடைத்த சாதாரண பொருட்களை கொண்டு போதுமாக்குவதினால் அவனது மனோ இச்சையை கட்டுப்படுத்தும் வாய்ப்புண்டாகிறது.
6 புளிக்காடியில் (வினிகர்) பல பயன்கள் உள்ளன.
- பாலோ, ரத்தமோ நெஞ்சில் உறைந்து விட்டால் அதை இக்காடி அகற்றி விடுகிறது.
- மண்ணீரலுக்கு பயனளிக்கிறது,
- இரைப்பையை உலர்த்துகிறது.
- வயிற்றின் மலத்தை இறுக்குகிறது.
- தாகத்தை முறியடிக்கிறது.
- புதிதாக உண்டாக இருக்கின்ற வீக்கத்தை தடுக்கிறது.
- செரிமானத்திற்கு உதவுகிறது.
- சளியை எதிர்த்து போராடுகிறது.
- கடினமான உணவுப் பொருள்களை மென்மையாக்குகிறது.
- ரத்தத்தை இளக்கி மென்மை படுத்துகிறது.
நபி வழி மருத்துவம். شرح مسلم
شرح رياض الصالحين حطيبة
—————————-