وَاِنَّكَ لَـتَدْعُوْهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ وَاِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ عَنِ الصِّرَاطِ لَـنٰكِبُوْنَ
இன்னும், (நபியே!) நிச்சயமாக, நீர் அவர்களை நேரான வழியின் பால் அழைக்கிறீர். ஆயினும் மறுமையை நம்பாதவர்கள் நேரிய வழியை விட்டு விலகிச் செல்ல விரும்புகின்றார்கள்.
வசனம் 23 / 73 – 77
73 எனது தூதரே (ஸல்)! உமது சமூகத்தை நேறிய மார்க்கமான இஸ்லாத்தின் பால் அழைக்கின்றீர்கள்.
74 எனினும் அம்மக்களோ மறுமையை பற்றிய நம்பிக்கையின்றி நேரான மார்க்கத்தை விட்டும் வழி தவறி சென்று விடுகின்றனர்.
75 இம்மக்களுக்கு உலக வாழ்வில் ஏற்பட்டிருக்கும் சிரமங்களையும் கஷ்டங்களையும் கண்டு நாம் இரக்கப்பட்டு அச்சிரமங்களை அகற்றினால் அதற்கு நன்றி மறந்தவர்களாகவும், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமுள்ள வேற்றுமையை விளங்காமலும் இறை நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் மூழ்கி தடுமாறி வருகின்றனர்.
76 மக்களுக்கு சிறிய சிரமங்களான ஏழ்மை, பசி, பட்டினி போன்றவைகளை கொடுத்து சோதித்தால் அச்சோதனைகளில் படிப்பினை பெற்று அல்லாஹ்வுக்கு அடிபணிந்து தமது இன்னல்கள் அகற்றப்பட வேண்டும் என்பதற்கும் பிரார்த்திக்காமல் இறை நிராகரிப்பின் பிடிவாதத்திலேயே மூழ்கி கிடக்கின்றனர்.
77 அதே சமயம் அவர்களை அடியோடு அழிக்கும் பெரும் வேதனைகளை இறக்கி வைத்து விட்டால் தாங்கள் செய்து கொண்டிருந்த இணைவைத்தல் சத்தியத்தை மறுத்தல் போன்ற செயல்களை எண்ணியவர்களாக கைசேதப்படுகின்றனர். இந்த கைசேதம் அவர்களுக்கு யாதொரு பயனையும் தராது.
குறிப்புகள் :
இதற்கு முந்திய வசனங்களில் நபி (ஸல்) அவர்கள் கொண்டுவரும் செய்திகளை மறுப்பதற்கு அறிவார்ந்த நான்கு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்காவது பதில் கூற வேண்டும் என்று அல்லாஹ் கேட்டுக்கொண்டான். அதில் எந்த காரணங்களையும் அவர்களால் கூற முடியவில்லை.
இவ்விடத்தில் அப்படியானால் நபி(ஸல்) அவர்கள் கொண்டுவரும் செய்திகள் சத்திய வழியின் பக்கமே உங்களை நடத்திச் செல்லும் என்ற செய்தியை இந்த வசனங்களில் அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்.
இவ்வசனங்களில் கிடைக்கும் சில பாடங்கள்.
1 அல்லாஹ் அடியானுக்கு சோதனைகள் சிரமங்களை கொடுப்பது அந்த அடியான் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று மட்டும் கொடுக்கப்படுவதில்லை. மாறாக அவன் தன்னிடமிருந்து ஏற்படும் இறை மறுப்பு, நயவஞ்சகம், இணைவைப்பு போன்ற மற்ற பாவமான காரியங்களிலிருந்து விலகி அல்லாஹ்விடம் நெருக்கத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சோதனைகள் கொடுக்கப்படுகின்றன. என்பதை இந்த வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.
2 அல்லாஹ் அடியானுக்கு சோதனைகள் சிரமங்களை கொடுப்பது அவன் தனது ரட்சகன் பால் மீண்டு கெஞ்சி அடிபணிந்து தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையே அவன் விரும்புகிறான்.
3 இதன் மூலம் யார் அவ்வாறு சோதனையின் போது அல்லாஹ்விடம் கெஞ்சவில்லையோ அவர்களை பழிப்பிற்குரியவர்கள் என்பது தெரிய வருகிறது.
நபி அவர்களும் சோதனையின் போது மழை தேடியும் பிரார்த்திக்கும் போதும் அஞ்சுபவர்களாக பணிவோடு அல்லாஹ்விடம் தனது இயலாமையை வெளிப்படுத்தும் வகையில் பிரார்த்தித்துள்ளதாக வந்துள்ளது.
تفسير المحرر