بَلْ قُلُوْبُهُمْ فِىْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ‏

ஆயினும், இம்மக்கள் இதனைப் பற்றி அறியாமலிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய செயல்களும் (மேலே கூறப்பட்ட) அந்த வழி முறைக்கு மாறுபட்டிருக்கின்றன. அவர்கள் இத்தகைய செயல்களைச் செய்து கொண்டேயிருப்பார்கள்.

அத்தியாயம் 23         வசனம் 63 – 67

அவர்களிடம் குர்ஆனின் வசனங்கள் கூறப்பட்ட போது மடமையினாலும், பொடுபோக்காகினாலும் அவர்களின் உள்ளங்கள் சத்தியத்தையும், உபதேசங்களையும் ஏற்க மறுத்து வந்தனர். அவர்களின் செயல்களோ இறை நம்பிக்கையாளர்களின் செயல்களுக்கு மாற்றமாக பாவமான காரியங்களிலேயே இறுதி வரையிலும் மூழ்கிருந்தனர்.
அவர்கள் மரணிக்கின்ற வரை இந்நிலையிலேயே அல்லாஹ் விட்டு வைத்திருக்கிறான். மரணம் நெருங்கும் சமயம் தங்களுக்கு ஏற்படவிருக்கும் வேதனையை பற்றி மரணிப்பதற்கு முன்பதாகவே நிச்சயம் அறிந்து கொள்வார்கள்.
அந்த நிராகரிப்பவர்கள் உலகத்தில் செல்வ செழிப்பிலும் ஆடம்பர இன்பங்களிலும் சொகுசாக வாழ்ந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் போது தங்களுக்கு ஏற்படும் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கத்தி கதறுவார்கள். எனினும் அந்த கத்துதலும் கதறுதலும் எவ்வித பயனையும் அவர்களுக்கு தராது. காரணம் உலகிலேயே சத்தியம் எது அசத்தியம் எது என்று தூதுவரின் மூலம் உபதேசிக்கப்பட்டன அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் புனித இறையில்லத்தை நிர்வாகம் செய்கிறோம் என்ற மமதையினால் சத்தியத்தை ஏற்க மறுத்து விட்டனர் மக்கத்து இணைவைப்பாளர்கள்.
அது மட்டுமின்றி சத்தியத்திற்கெதிராக இரவு நேரங்களில் ஒன்று கூடி சத்தியத்தை அழிப்பதற்கு திட்டமும் தீட்டி வந்தனர்.
இவ்வசனங்களில் இணைவைப்பாளர்களின் மூன்று தன்மைகள் கூறப்பட்டுள்ளன.
1 சத்தியத்தை ஏற்கும் சமயத்தில் அதை ஏற்காமல் புறக்கணிப்பது.
2 தாங்கள் மதிப்பு மிக்கவர்கள் என்ற மமதையில் பெருமையடித்தனர்.
3 அந்த மமதையினால் சத்தியத்தை எதிர்த்து பல திட்டங்களை தீட்டியது .

0
Would love your thoughts, please comment.x
()
x