நபிகளாரின் உற்ற நண்பர் அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முதல் இறைவசனங்கள் அருளப்பட்ட போது வணிக நிமித்தமாக யமனுக்கு சென்றிருந்தார்கள். அங்கிருந்து திரும்பி வந்த சமயம் மக்கத்து வணிகர்களை கண்டு நலம் விசாரித்த பின் நாட்டு நடப்புகளை பற்றி விசாரிக்கலானார்கள். அப்போது இவர்களை சந்திக்க வந்த அம்ரு இப்னு ஹிஷாம், உத்பா, ஷைபா, போன்றோர் அபூதாலிபின் தம்பி மகனான முஹம்மது (ஸல்) தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இதுவே மிக மிக முக்கிய செய்தியாகும் என்று கூறினர். இதைக் கேட்டவுடன் இவர்களை அங்கேயே அமர்த்திவிட்டு நபிகளாரின் வீட்டிற்குச் சென்று உண்மை தகவலை அறிந்து உன்னத இஸ்லாத்தில் இணைந்தார்கள் இவர் இஸ்லாத்தை ஏற்ற மூன்றாம் நபராகும்.

அபூபக்ரின் உறவினரான தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) என்பவர்கள் வணிக நிமித்தம் ‘போஸ்ரா’ விற்கு சென்று விட்டு மக்கா திரும்பிய சமயம் நபிகளாரின் ஏகத்துவ அழைப்பையும் அதற்கு தமது குடும்பத்தைச் சேர்ந்த அபூபக்ர் இனைந்ததையும் அறிந்து தாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆவல் கொண்டு அபூபக்ருடன் நபிகளாரை சந்தித்து இஸ்லாத்தை இனைந்தார். நௌஃபல் இப்னு கோயிலில் என்பவர் அபூபக்கரையும் தல்ஹாவையும் கட்டி வைத்து கயிற்றால் பிணைத்து வதை செய்தான். வரலாற்றில் இஸ்லாத்திற்காக முதன்முதலில் துன்பம் நுகர்ந்தவர்கள் இவ்விருவராகும். இவ்விருவருக்கும் அல் காரினைன் என்று அழைக்கப்படும்.

நபிகளாரின் தூய வழிகாட்டலாலும் அருமை தோழர் அபூபக்கரின் உண்மையும் நேர்மையும் கலந்த நல்லொழுக்கமும் சமுதாயத்தில் அடைந்த செல்வமும் கொண்டதினால் அந்நாளின் அக்குடும்பத்தைச் சேர்ந்த பலர் இஸ்லாத்தில் இணைய தொடங்கினர். தொடக்க காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் காலையிலும் மாலையிலும் தொழுது வந்தனர் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக சஃபா என்னும் மலை குன்றின் அடிவாரத்தில் இருந்த ஒரு பெரிய வீட்டை தேர்ந்தெடுத்தார்கள் அது அல் அர்கம் பின் அபில் அர்கம் (ரலி) என்ற நபித்தோழரின் வீடாகும். அவரும் இஸ்லாத்தை ஏற்றிருந்தார்.

மக்கத்து மக்களின் மேல்மட்டத்து மக்கள் இஸ்லாத்தில் நுழைந்த போது கீழ்தட்டு மக்கள் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி நிற்கவில்லை. மாறாக தன்மையும் இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டனர் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
பிலால் இப்னு ரபாஹ்
சுகைஃப் இப்னு சினான்
அம்மார் இப்னு யாசிர்
சுமையா பின்த் கைய்யாத்
கப்பாப் இப்னுல் அரத்
மிக்தாத் இப்னுல் அஸ்வத்
செல்வந்தர்களையே விட்டு வைக்காத அப் பாவிகள் பஞ்சப் பரிதாவியான அப்பாவி அடிமைகளையுமா விட்டு வைப்பார்கள்.
நபி வரலாற்றின் இரத்தத்தால் எழுதப்பட்ட பக்கங்கள் அவை

——————————————-

ஒரு நாள் நபி (ஸல்) மற்றும் அலி (ரலி) ஆகிய இருவரும் தொழுது கொண்டிருந்ததை கண்ட அபூதாலிப் வியந்து இது என்ன என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இதுதான் நம் மூதாதயரான இப்ராஹீம் (அலை)அவர்களின் வணக்க முறையாகும் தாங்களும் இந்த புனித மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளுங்களேன் என்று கூறிய போது. ந்ம் முன்னோர்களின் மார்க்கத்தை விட்டும் மாறுவதில்லை என்று உறுதியோடு கூறிவிட்டு தன் மகன் அலியைப் பார்த்து நீ முஹம்மத் (ஸல்) அவர்களை விட்டு பிரிந்து விட வேண்டாம் அவர் நன்மையின் பக்கமே உன்னை இட்டுச் செல்வார் என்று அறிவுறுத்தினார்.

நபி வரலாறு 158

0
Would love your thoughts, please comment.x
()
x